அதிமுக - பாஜகவுக்கு குட்பை.. என்டிஏ கூட்டணியில் இருந்து விலகிய அமமுக.. டிடிவி தினகரன் அறிவிப்பு
சென்னை: அதிமுக - பாஜக கூட்டணியில் இருந்து இன்று திடீரென்று டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் விலகி உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் துரோகம் தலைவிரித்தாடுகிறது. அந்த கூட்டணியில் அமமுக அங்கம் வகிக்கவில்லை என்று காட்டுமன்னார் கோவிலில் அளித்த பேட்டியில் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாஜகவும், அதிமுகவும் மீண்டும் கூட்டணி அமைத்துள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் இரு கட்சிகளும் தனித்தனியே களமிறங்கியது. ஆனால் வெற்றி பெற முடியவில்லை.

இந்நிலையில் தான் தற்போது அதிமுகவும், பாஜகவும் மீண்டும் கைகோர்த்துள்ளது. இந்த கூட்டணியை வலுப்படுத்தும் வகையில் பாஜக, அதிமுக கட்சிகள் செயல்பட்டு வருகின்றன. திமுக கூட்டணியில் இருந்து கட்சிகளை இந்த கூட்டணிக்கு கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதற்கிடையே தான் என்டிஏ எனும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக அமமுக எனும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவிலில் இன்று திருமண நிகழ்ச்சியில் டிடிவி தினகரன் பங்கேற்றார். அதன்பிறகு அவர் அளித்த பேட்டியில், என்டிஏ கூட்டணியில் இருந்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வெளியேறும் முடிவை அறிவித்தார்.
மேலும், ‛‛அதிமுக ஒன்றாக இணைவதற்காக முயற்சி எடுத்த அமித்ஷாவின் திட்டம் தோல்வியடைந்தது. தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுக அங்கம் வகிக்கவில்லை. அதில் இருந்து வெளியேறுகிறது. எங்களின் கூட்டணி நிலைப்பாடு பற்றி டிசம்பர் மாதம் அறிவிப்போம்'' என்றார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்கனவே இந்த கூட்டணியில் இருந்து முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் அணி விலகி உள்ள நிலையில் அடுத்ததாக 2வது விக்கெட் விழுந்துள்ளது.
சில நாட்களுக்கு முன்பாகவே டிடிவி தினகரன் கூட்டணியில் இருந்து வெளியேற உள்ளதாக தகவல்கள் பரவின. பாஜக - அதிமுக கூட்டணியில் அவருக்கு அதிருப்தி இருப்பதாக சொல்லப்பட்டது. மேலும் சில நாட்களுக்கு முன்பு அவர் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினார். அப்போது தேசிய ஜனநாயக கூட்டணியில் அமமுக உள்ளதா? என்பதை பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனிடம் கேளுங்கள் என்று கூறினார். இது அதிருப்தியின் வெளிப்பாடாக பார்க்கப்பட்டது.
இருப்பினும், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அளித்த பேட்டியில், ‛‛அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஏற்கனவே லோக்சபா தேர்தலில் எங்களோடு கூட்டணியில் இருந்து இன்று வரை எங்கள் கூட்டணியில் தான் இருக்கிறார். தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் அங்கம் வகிக்கிறார். அவர் கூட்டணியில் தொடர்கிறார், சந்தேகமே வேண்டாம்'' என்று கூறியிருந்தார். ஆனால் இன்று டிடிவி தினகரன் கூட்டணியில் இருந்து விலகி உள்ளார். இது பாஜக - அதிமுக கூட்டணிக்கு மற்றொரு அடியாக பார்க்கப்படுகிறது.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
டிடிவி தினகரன் பார்வை படாதா என பம்மியது மறந்து போச்சா? அமைச்சர் CTR நிர்மல்குமாருக்கு அமமுக பதிலடி -
ரீல்ஸ் போட்டு ஆட்சிக்கு வந்து.. ரீல் விட்டு ஆட்சியை தொடரலாமா? விஜய் கனவு பலிக்காது! டிடிவி அட்டாக்! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல்












Click it and Unblock the Notifications