• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பேசாமல் போனை வைங்க.. "தினகரன் சஹாப்".. ஓவைசி பேசிய பேச்சை கேட்டு மிரண்டு போன திராவிட கட்சிகள்!

ஓவைசி பேசிய பேச்சுக்களை கேட்டு திராவிட கட்சிகள் மிரண்டு போயுள்ளன
Google Oneindia Tamil News

சென்னை: "தினகரன் சஹாப்புடன் ஏன் கூட்டணி வைக்கிறீர்கள் என்று எல்லாரும் என்னை கேட்கிறாங்க.. அதுக்கு காரணம் ஒன்னே ஒன்றுதான்" என்று ஓவைசி பேசிய பேச்சு திராவிட கட்சிகளை கலக்கத்தில் வைத்து வருகிறது.

3 மாதங்களுக்கு முன்பு, திமுகவுடன் ஓவைசி கை கோர்ப்பார் என்று சொல்லப்பட்டது... ஆனால், முதல்நாளிலேயே இது சம்பந்தமான அதிருப்தி திமுக கூட்டணியில் வெடித்தது.. திமுகவின் சிறுபான்மை பிரிவு, ஏற்பாடு செய்த கூட்டத்தில் கலந்துகொள்ள இவருக்கு அழைப்பு விடுத்திருந்தனர்..

ப்பா... என்ன பிளான்... 6 தொகுதிகளிலும் அதிமுகவுக்கு செம டஃப் கொடுக்க ரெடியாகும் மதிமுக! ப்பா... என்ன பிளான்... 6 தொகுதிகளிலும் அதிமுகவுக்கு செம டஃப் கொடுக்க ரெடியாகும் மதிமுக!

ஆனால் அதற்கு திமுக கூட்டணியில் ஏற்கனவே இடம்பெற்றிருந்த இஸ்லாமிய கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததால், திமுக தலைமை இம்முடிவை அப்போதே கைவிட்டது... ஓவைசியை ஏற்க அவர்கள் யாரும் முன்வரவில்லை.

 சீமான்

சீமான்

இதன்பிறகு கமல், அல்லது சீமானுடன்தான் ஓவைசி கூட்டணி வைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், டக்கென தினகரன் இவரை கூட்டணிக்குள் இழுத்து போட்டு 3 சீட்டுக்களையும் ஒதுக்கி விட்டார். டிடிவி தினகரனின் ஒரே குறி திமுக என்பதால், நிச்சயம் ஓவைசியையும் திமுகவுக்கு எதிரான ஓட்டுக்களை பிரிக்கவே இவரை கூட்டணியில் ஒன்றிணைத்ததாக நம்பப்படுகிறது.

பாஜக

பாஜக

இதற்கு காரணம், வழக்கமாக ஒவ்வொரு தேர்தலிலும் முஸ்லிம்களின் ஓட்டுக்கள் திமுக கூட்டணிக்கே சாதகமாக விழுந்து கொண்டிருக்கும் சூழலில், அதனை உடைத்தெறியும் முயற்சியே இது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.. அதுமட்டுமல்ல, ஆளும் தரப்பு மீதான அதிருப்தி ஓட்டுக்கள், பாஜகவின் மீதான வெறுப்பு ஓட்டுக்கள் போன்றவைகளையும் ஓவைசி பிரிப்பார் என்று தினகரன் கணக்கு போடுவதாக தெரிகிறது. ஆனால், அதற்கேற்றபடி நேற்று ராயப்பேட்டையில் ஒவைசி பேசிய பேச்சுக்கள் திராவிட கட்சிகளை அதிர வைத்து வருகின்றன.

 ஜெயலலிதா

ஜெயலலிதா


"சிறுபான்மை மக்கள், தலித்துகள்,ஆதிவாசிகளுக்கு ஜெயலலிதா எப்படி உரிமையும் சலுகையும் வழங்கினாரோ, அதே நிலை தொடர வேண்டுமென்றால் தினகரனுக்கு வாக்களியுங்கள்.. அதிமுக என்பது இப்போது ஜெயலலிதாவின் கட்சி அல்ல... அவர் பாஜகவுக்கு தலைவணங்கியது கிடையாது.. இப்போ அதிமுக அதிமுக பாஜகவுக்கு சலாம் போடுகிறது.

வாஜ்பாய்

வாஜ்பாய்

நாங்களா பாஜகவின் பி டீம்? வாஜ்பாய் தேசிய அளவில் ஆட்சி செய்தபோது அவரோடு இருந்தது திமுகதானே? மதச்சார்பின்மை என்றால் என்ன? மகாராஷ்டிராவில் சிவசேனாவோடு கூட்டணி அமைத்துக் கொண்டிருக்கிறது காங்கிரஸ்... சிவசேனா இன்றும் பாபர் மசூதியை நாங்கள்தான் இடித்தோமென்று சொல்கிறது... அந்த காங்கிரஸ் மதச்சார்பற்ற தன்மையானதா?

ஸ்டாலின்

ஸ்டாலின்

ஒன்றரை மாசம் இருக்கும், திமுகவின் சிறுபான்மை பிரிவு தலைவர் என்னை ஹைதராபாத்தில் வந்து சந்தித்தார். நானும் மரியாதையோடு வரவேற்று அவரிடம் பேசினேன்... அவர் திமுக தலைவர் ஸ்டாலின் அழைத்தார் என்றும் சென்னையில் நடக்கும் அவர்களின் கட்சியின் சிறுபான்மை பிரிவு நிகழ்ச்சியில் பேச வேண்டும் என்றும் வற்புறுத்தினார்.

 சிறுபான்மை மக்கள்

சிறுபான்மை மக்கள்

ஆனால், அந்த நாளில் எனக்கு உ.பியில் ஒரு நிகழ்ச்சி இருக்கிறது என்று சொல்லியும் என்னை விடவில்லை.. மறுபடியும் மறுபடியும் கூப்பிட்டதால், வருவதாக ஒப்புக் கொண்டேன்.. அதை டிவியில் காட்டினார்கள்.. ஆனால் வெறும் 2 மணி நேரத்தில் நாங்க ஒவைசியை கூப்பிடவே இல்லை என்று மாற்றி பேசினார்கள். இப்படிப்பட்ட திமுகவை சிறுபான்மை மக்கள் எப்படி நம்புவார்களா?

 திமுக, அதிமுக

திமுக, அதிமுக

"தினகரன் சஹாப்புடன் ஏன் கூட்டணி வெக்கறீங்க" என்று என்கிட்ட கேட்டாங்க.. அதுக்கு நான், தினகரன் உங்க கிட்ட எப்படி நடந்துக்கிட்டாருன்னு பதிலுக்கு அவங்க கிட்ட கேட்டேன்.. அதற்கு எங்கள் தமிழக தலைவர் வகீல் அஹமது, "எங்க கிட்ட அன்போடு, கண்ணியத்தோடு, மரியாதையோடு நடந்து கொண்டார் என்றார்கள்.. உடனே நான், "பேசாமல் போனை வைங்க.. அவர் ஒப்பந்தத்தில் கையெழுத்து போடுங்கன்னு" சொல்லிட்டேன்.. ஏன்னா, எங்களுக்குத் தேவை மரியாதை, கௌரவம், கண்ணியம்... அதை எங்களுக்கு தினகரன் தருகிறார்" என்றார் ஒவைசி. இந்த பேச்சுதான் அதிமுக, திமுக வயிற்றில் கொண்டிருக்கிறது.

English summary
TTV Dinakaran Meeting and Ovaisi campaign against DMK, ADMK
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X