ஜவ்வா இழுக்கும் மாவட்ட செயலாளர் நியமனம்! நகம் கடிக்கும் விஜய்..பின்னணியில் புஸ்ஸி? தத்தளிக்கும் தவெக
சென்னை: நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட செயலாளர்கள் பட்டியல் இதுவரை 5 கட்டங்களாக வெளியாகி இருக்கிறது. இன்னும் ஆறு மாவட்ட செயலாளர்கள் பெயர்கள் அடங்கிய பட்டியல் வெளியாகாத நிலையில் தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மாவட்ட செயலாளர் நியமனத்தில் இழுபறி நீடிப்பதாகவும், இதன் காரணமாகவே அந்த பட்டியல் தாமதமாக கூறுகின்றனர் தவெக நிர்வாகிகள். மேலும் பல மாவட்டங்களில் நிர்வாகிகள் கடும் அதிருப்தியில் இருப்பதால் விஜய் யோசனையில் இருப்பதாக கூறப்படுகிறது.
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை பிப்ரவரி மாதமே அறிவித்த நிலையில் தொடர்ந்து உறுப்பினர் சேர்க்கை தீவிரமாக நடைபெற்றது. தொடர்ந்து மாணவர்கள் சந்திப்பு, நிர்வாகிகளுடன் ஆலோசனை, மாநில மாநாடு என பிசியாக இருந்த விஜய் தற்போது முழு நேர அரசியல்வாதியாக மாறி இருக்கிறார்.

விஜய் பரந்தூருக்கு சென்றது பலத்த வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்ததாக தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் மாவட்ட வாரியாக மக்கள் பிரச்சனைகளை கண்டறிந்து மக்களை நேரில் சந்தித்து கள அரசியல் செய்யவும் திட்டமிட்டுள்ளார்.
இந்த நிலையில் தமிழகத்தில் அமைப்பு ரீதியாக நூற்றுக்கும் மேற்பட்ட மாவட்ட செயலாளர்களை நியமனம் செய்ய விஜய் திட்டமிட்டு இருக்கிறார். தமிழகத்தில் 234 தொகுதிகள் இருக்கும் நிலையில் இரண்டு தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளர் என்ற அடிப்படையில் மாவட்ட செயலாளர் நியமனம் நடைபெற்று வருகிறது. மேலும் மாவட்ட தலைவர், மாவட்ட செயலாளர், மாவட்டத் துணைச் செயலாளர் என தனது ரசிகர் மன்றத்தில் இருந்தவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட இருக்கிறது.
மேலும் துணைத் தலைவர், துணைச் செயலாளர் பதவிகளில் பெண்களுக்கும் இளைஞர்களுக்கும் அதிகளவு வாய்ப்பு தர திட்டமிடப்பட்டிருக்கிறது. அது மட்டும் அல்லாமல் 28 சார்பு அணிகளும் விஜய் கட்சியில் உருவாக்கப்பட இருக்கிறது. மகளிர் அணி, தொண்டரணி, இளைஞர் அணி, மருத்துவர் அணி, பொறியாளர் அணி, இலக்கிய அணி உள்ளிட்ட 28 அணிகளுக்கும் தலைவர், செயலாளர், அமைப்பாளர்கள் உள்ளிட்ட பொறுப்புகள் வழங்கப்பட இருக்கிறது.
தற்போது கட்சியின் அடிப்படையான மாவட்ட செயலாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. ஏற்கனவே இரண்டு சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளர் என்ற அடிப்படையில் 5 கட்டங்களாக 95 மாவட்ட பொறுப்பாளர்கள் குறித்த நியமன அறிவிப்பை விஜய் வெளியிட்டார். கடைசியாக கடந்த பிப்ரவரி மாதம் பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் ஐந்தாம் கட்ட பொறுப்பாளர்களுக்கான நேர்காணல் நடைபெற்ற நிலையில், மாவட்ட செயலாளர்கள், பொருளாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள் பட்டியலை விஜய் வெளியிட்டார்.
இந்த நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் இறுதி கட்ட மாவட்ட செயலாளர்கள் பட்டியல் நேற்று வெளியானது. மாவட்ட செயலாளர், இணை செயலாளர், பொருளாளர் என ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 15 பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஆறாவது கட்டமாக 25 மாவட்ட செயலாளர்கள் பட்டியல் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கரூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 19 மாவட்டங்களுக்கான நிர்வாகிகள் பட்டியல் மட்டுமே இறுதி செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. அதில் சென்னை தெற்கு மாவட்ட செயலாளராக விஜயின் உதவியாளர் மகனான சபரிநாதனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது கட்சியினர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
பலர் இதை வாரிசு அரசியல் எனக் கூறியிருக்கிறார்கள். அதே நேரத்தில், இது தொடர்பாக பேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த், சபரிநாதனின் தந்தை 35 ஆண்டுகளாக விஜய்யோடு பயணித்திருக்கிறார். சபரிநாதன் சிறுவயதிலிருந்து ரசிகராக இருந்து ரசிகர் மன்ற பணிகளை கவனித்து வந்தார். அதன் காரணமாகவே தலைவரின் ரசிகன் என்ற அடிப்படையில் அவருக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. சிலர் வேண்டுமென்றே சலசலப்பை உண்டாக்க நினைக்கிறார்கள் என்றார்.
இந்த நிலையில் நேற்று வெளியான பட்டியலில் 19 மாவட்டங்களுக்கான செயலாளர்கள் பெயர் மட்டுமே இருந்தது. ஆறு மாவட்டங்களுக்கான மாவட்ட செயலாளர்களின் பெயர்கள் இல்லை. மாவட்ட நிர்வாகிகள் நியமனத்தில் தொடர்ந்து இழுபறி நீடிப்பதாகவும், சில மாவட்டங்களில் நியமனம் செய்யப்படலாம் என இருந்த நிர்வாகிகளுக்கு பிற நிர்வாகிகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்ததால் ஆறு மாவட்டங்களில் மாவட்ட செயலாளர்கள் நியமனம் செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
குறிப்பாக தூத்துக்குடி உள்ளிட்ட சில மாவட்டங்களில் பல அணிகள் செயல்படுகிறது. ஒரு அணிக்கு பதவி கொடுத்தால் மற்றொரு அணியை சேர்ந்தவர்கள் பிரச்சனை செய்வார்கள் என்பதன் காரணமாகவே தற்போது ஆறு மாவட்ட செயலாளர்கள் பெயர்கள் வெளியாகவில்லை என கூறப்படுகிறது. அதே நேரத்தில் விரைவில் ஆறு மாவட்டங்களுக்கான பொறுப்பாளர்கள் பட்டியல் ஏழாவது கட்டமாக வெளியிடப்படும் என்கின்றனர் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள்.
இந்த நிலையில் தாமதத்திற்கு என்ன காரணம் என விசாரித்த போது புஸ்ஸி ஆனந்த் தயாரித்து கொடுத்த பட்டியலை விஜய் நிராகரித்து விட்டதாகவும், அவரது ஆதரவாளர்கள் பெயர்கள் முன்னணியில் இருந்ததால் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட நிர்வாகிகள் விஜயிடம் போட்டுக் கொடுத்ததாகவும், அதன் காரணமாகவே ஆறு மாவட்ட செயலாளர்கள் பட்டியல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.
-
அறிவாலயம் vs சத்தியமூர்த்தி பவன்.. ராகுல் மீது கடும் கோபத்தில் ஸ்டாலின்.. வெடித்தது யுத்தம்? -
மாம்பழத்தின் ‘மாஸ்டர் பிளான்’.. திருப்போரூரில் தடம் பதிக்கிறார் சௌமியா அன்புமணி? பாமக மேஜர் முடிவு -
விஜயகாந்த் வெற்றி பெற்ற அதே தொகுதி.. சட்டசபை தேர்தலில் களம் இறங்கும் பிரேமலதா? -
அதிமுகவில் 5 தொகுதிகள் தருவதாக சொல்லிவிட்டு பின்னர் மறுத்துவிட்டனர் - கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு! -
காங்கிரஸ் மீது கடும் அப்செட்டில் ஸ்டாலின்.. வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்துக்கு கிளம்ப திட்டம்! -
அதிமுக வேட்பாளர் பட்டியலில் இதை கவனிச்சீங்களா! ஆதிதிராவிடர்கள் இல்லையே.. ஷாக் ரிப்போர்ட் -
பெரம்பூரில் களமிறங்கும் விஜய்.. ஏசி அலுவலகம் ரெடி.. மார்ச் 28 முதல் பிரச்சாரம் -
திமுக vs காங்கிரஸ்.. 5 தொகுதிகளில் நேரடி போட்டி! பீகார் ஸ்டைலில் புதுவையிலும் நடக்கும் சம்பவம் -
ஸ்டாலின் சொல்லியும் சீட் தரல.. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தளர்ந்து விட்டது.. கம்யூனிஸ்ட் ஆதங்கம் -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
காங்கிரஸில் இருந்து சஸ்பெண்ட்! அடுத்த நாளே விஜய்யை சந்தித்த பிடி செல்வம்! தவெகவில் ஐக்கியம் -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. சாத்தூர், ராஜபாளையம் தொகுதியில் ராஜேந்திர பாலாஜி செய்த சம்பவம்!










Click it and Unblock the Notifications