கொடியையே காணோமே.. இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டத்தில் பட்டும் படாமல் பங்கேற்ற தவெக!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி, இந்தியா கூட்டணிக் கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம். நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தவெக சார்பில் அமைச்சர் ராஜ்மோகன் பங்கேற்ற நிலையில், தவெக கொடியுடன் ஒரிருவர் மட்டுமே நின்றதாக கூறப்படுகிறது. பட்டும் படாமல் இந்தியா கூட்டணியில் தவெக உள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

எஸ்.ஐ.ஆர் நடவடிக்கையைக் கண்டித்தும் தலைமை தேர்​தல் ஆணை​யர் ஞானேஷ்கு​மார் பதவி நீக்​கத்தை வலி​யுறுத்​தி​யும், இந்தியா கூட்​டணி சார்​பில் 'ஜன​நாயகம் காப்​போம்' என்ற தலைப்​பில் கண்டன ஆர்ப்​பாட்​டம் இன்று சென்னை எழும்​பூர், லாங்ஸ் தோட்ட சாலை, ரமடா சர்க்​கிள் அரு​கில் நடைபெற்றது.

TVK Faces Criticism for Half-Hearted Participation in INDIA Bloc

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தவெக சார்பில் அமைச்சர் ராஜ்மோகன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, சிபிஐ மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன், சிபிஐஎம் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், விசிக தலைவர் தொல். திருமாவளவன், அமைச்சர் வன்னி அரசு, மார்க்​சிஸ்ட் லெனினிஸ்ட் மாநில செய​லா​ளர் ஆசைதம்பி, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திருநாவுக்கரசர், பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் இந்தியா கூட்டணியைச் சேர்ந்த அனைத்துக் கட்சி தொண்டர்களும், தத்தம் கட்சி கொடிகளுடன் பங்கேற்றிருந்தனர். ஆனால், ஆர்ப்பாட்டத்தில் தவெக கட்சிக் கொடியே காணவில்லை. ஒரிருவர் மட்டுமே தவெக கொடியுடன் நின்றனர். தவெக சார்பில் அமைச்சர் ராஜ்மோகன் பங்கேற்றிருந்தும், தவெக கொடியையே பெரிதாக பார்க்க முடியவில்லை.

"இந்தியா மீது எஸ்.ஐ.ஆர் திணிக்கப்பட்டுள்ளது. எஸ்ஐஆர் பணிகள் நடக்கும்போதே இது ஜனநாயகத்துக்கு விரோதமானது எனச் சொன்னோம். எதிர்க்கட்சியாக இருந்தால் ஒரு பேச்சு, ஆளும் கட்சியாக இருந்தால் ஒரு பேச்சு என்பது எங்களிடம் இல்லை" என இந்த ஆர்ப்பாட்டத்தில் அமைச்சர் ராஜ்மோகன் பேசினார்.

அமைச்சர் ராஜ்மோகன் பேசும்போது பாஜக, மோடி, அமித் ஷா உள்ளிட்டோரின் பெயர்களையே பயன்படுத்தாமல் தனது உரையை முடித்திருக்கிறார். இதுதான் நீங்க பாஜக-வை எதிர்க்கும் லட்சணமா? என்ற விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் எழுந்துள்ளன.

திமுக, இந்தியா கூட்டணியில் இருந்து வெளியேறிய பிறகு, தவெக இந்தியா கூட்டணியில் இணைந்தது. இந்தக் கூட்டணி சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் தவெக கொடியே இல்லாதது, பட்டும் படாமல் கூட்டணியில் தவெக ஒட்டிக்கொண்டிருப்பதையே காட்டுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

எஸ்.ஐ.ஆர் நடவடிக்கை விவகாரத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை கண்டித்து நாடே கொந்தளித்து வரும் நிலையில், தவெக தலைவரும், தமிழக முதலமைச்சருமான விஜய் அமைதி காத்து வருகிறார். இந்தச் சூழலில் தவெக அமைச்சர் இன்று ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றபோதும் பாஜக அரசை விமர்சிக்காதது கேள்விகளை எழுப்பியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+