விஜய் டீம்ல யார்னு பாருங்க.. கைக்குழந்தையோடு சுற்றி வரும் பல்லவிக்கு முக்கிய வாரியத்தில் பதவி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழ்நாடு மாநில கானுயிர் வாரியத்தில் புதிய உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்த வாரியத்தில், எப்போதும் தனது கைக்குழந்தையுடனே சுற்றி வரும் திரு.வி.க.நகர் சட்டமன்ற உறுப்பினர் பல்லவியும் இடம்பெற்றுள்ளார்.

சென்னை திரு.வி.க நகர் சட்டமன்றத் தொகுதி தவெக எம்.எல்.ஏ பல்லவிக்கு தேர்தல் முடிந்த கையோடு ஆண் குழந்தை பிறந்தது. தேர்தல் பிரச்சாரத்தின்போது கர்ப்பிணியாக இருந்தார் பல்லவி. அவர் தேர்தலில் வெற்றி பெற்று திரு.வி.க நகர் சட்டமன்ற உறுப்பினராகப் பொறுப்பேற்ற சில நாட்களிலேயே அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. தனது மகனுக்கு தமிழன் வெற்றி கொண்டான் (TVK) என பெயர் சூட்டியுள்ளார் பல்லவி.

TVK MLA Pallavi

இதனைத் தொடர்ந்து, எம்.எல்.ஏ பல்லவி எங்கு சென்றாலும் தனது குழந்தையையும் தூக்கிச் செல்கிறார். எம்.எல்.ஏ பல்லவி சட்டமன்றக் கூட்டத்தொடர், பட்ஜெட் தாக்கல், சிங்கப் பெண் அதிரடி சிறப்புப்படை திட்டத் தொடக்க விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளிலும், தனது கைக்குழந்தையுடன் பங்கேற்றிருந்தார்.

அதிக கூட்ட நெரிசல் உள்ள இடங்களுக்குச் செல்லும்போதும் தனது கைக்குழந்தையுடனே செல்கிறார் பல்லவி. அண்மையில் மதுராந்தகம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது முதல்வர் விஜய்யை நேரில் காண திரண்டிருந்த கூட்டத்திற்கு மத்தியில் குழந்தையுடன் சிக்கிக் கொண்டார் பல்லவி. இதனால் அவரை ஒரு தரப்பினர் விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில், முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழ்நாடு மாநில கானுயிர் வாரியத்தில் புதிய உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்த வாரியத்தில் காட்பாடி எம்.எல்.ஏ சுதாகர், மதுரை கிழக்கு எம்.எல்.ஏ கார்த்திகேயன் மற்றும் திரு.வி.க.நகர் சட்டமன்ற உறுப்பினர் பல்லவி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

கானுயிர் வாரியம் என்பது வனவிலங்குகள் மற்றும் காடுகளின் பாதுகாப்பு, மேலாண்மை மற்றும் பாதுகாப்பு தொடர்பான கொள்கைகளை வகுப்பதற்காக அரசாங்கத்தால் உருவாக்கப்படும் ஒரு சட்டப்பூர்வ அமைப்பாகும். இது தேசிய அளவிலும் (தேசிய கானுயிர் வாரியம் - NBWL), மாநில அளவிலும் (மாநில கானுயிர் வாரியம் - SBWL) செயல்படுகிறது. வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டம், 1972-ன் கீழ் இந்த வாரியங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

தேசிய கானுயிர் வாரியத்திற்கு தலைவராக பிரதமர் உள்ளார். மாநில கானுயிர் வாரியங்களுக்கு அந்தந்த மாநிலத்தின் முதலமைச்சர்கள் தலைவராக இருந்து வருகின்றனர். தமிழகத்தில் முதல்வர் விஜய் தலைமையில் அமைந்துள்ள கானுயிர் வாரியத்தின் உறுப்பினர்களில் ஒருவராக பல்லவி எம்.எல்.ஏ இடம்பெற்றுள்ளார்.

தவெக எம்.எல்.ஏ பல்லவி, எங்கு சென்றாலும் தனது கைக்குழந்தையைச் தூக்கிச் செல்வது விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது. மேலும், சென்னை மாநகராட்சி மேயர் பிரியாவுடன் மோதல் போக்கை கடைபிடித்து வருவதும் சர்ச்சைக்கு உள்ளாகி வருகிறது. மேலும், மதுராந்தகம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது ஹெல்மெட் அணியாமல் ராயல் என்ஃபீல்டு பைக் ஓட்டி சர்ச்சையில் சிக்கி இருந்தார் பல்லவி.

அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி வருவதோடு, சமூக வலைதளங்களில் நெட்டிசன்களின் கிண்டலுக்கு உள்ளாகி வரும் திரு.வி.க நகர் சட்டமன்ற உறுப்பினர் பல்லவி, மாநில கானுயிர் வாரியத்தின் உறுப்பினர்களில் ஒருவராக இடம்பெற்றுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+