என் ஜாதகம் பார்த்தாச்சு.. நேரம் செமயா இருக்கு.. கவுண்டம்பாளையம் தவெக வேட்பாளர் கனிமொழி

Subscribe to Oneindia Tamil

கோவை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது. வாக்குப்பதிவுக்கு 4 நாட்களே இருப்பதால் அரசியல் கட்சியினர் இறுதிகட்ட பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுகவும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுகவும் போராடி வருகிறார்கள். தவெக, நாம் தமிழர் கட்சிகளும் களத்தில் வேகம் காட்டுகிறார்கள். கவுண்டம்பாளையம் தவெக வேட்பாளர் கனிமொழி, நான் ஜோதிடர். ஜாதகத்தில் நேரம் பார்த்து தான் அரசியலுக்கு வந்துள்ளேன் என்று கூறியுள்ளார்.

கோவை கவுண்டம்பாளையம் தொகுதி தவெக வேட்பாளர் கனிமொழி "ஒன் இந்தியா" தமிழுக்கு அளித்த நேர்காணலில், "தளபதி என்றாலே வைப் தான். வரவேற்பு மற்ற கட்சிகளை விட அதிகமாக உள்ளது. மக்கள் சேவை நீண்டகாலமாக செய்து வருகிறேன். அதை தளபதி மூலம் செய்வதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. என்னுடைய கொள்கையும், தவெகவின் கொள்கையும் ஒன்றாக உள்ளது.

TVK Candidate astrologer Kanimozhi

ஜாதகம் பார்த்துவிட்டேன்

நான் ஜோதிடர். என்னுடைய ஜாதகத்தில் நேரம் பார்த்து தான் அரசியலுக்குள் என்ட்ரி ஆகியுள்ளேன். எனக்கு நேரம் நன்றாக இருக்கிறது. மே மாதம் குரு பெயர்ச்சி நடைபெறவுள்ளது. அந்த நேரத்தில் தான் தேர்தல் முடிவுகளும் வெளியாகிறது. அந்த காலகட்டத்தில் எனக்கு நேரம் நன்றாகவே இருக்கிறது. நல்ல முடிவுகளை எதிர்பார்க்கலாம்.

எங்கள் தலைவர் அருமையான தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார். கவுண்டம்பாளையம் தொகுதியில் 60 சதவீதம் கிராமப்புற பகுதிகள். இங்கு அடிப்படை பணிகளே செய்யவில்லை. நல்ல சுகாதாரம், குடிநீர், போக்குவரத்து உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகளை சரி செய்வேன். ஆனைகட்டி பகுதி மிகவும் பின் தங்கியுள்ளது. அந்தப் பகுதிக்கு தனித்திட்டங்கள் உள்ளன.

மக்களுடன் நிற்பேன்

ஆட்டோ பைலட் முறையில் நலத்திட்டங்களை செயல்படுத்த திட்டமிட்டுள்ளேன். கோவை மக்கள் விஜய்யை அதிகம் எதிர்பார்க்கிறோம். ஆனால் சில பிரச்சனைகள், அழுத்தங்கள் இருப்பதால் தான் விஜய் வரவில்லை. அதை சொன்னாலே சர்ச்சையாகிவிடும். நான் வாய்ஸ் ஆஃப் கவுண்டம்பாளையமாக, மக்கள் பிரச்சனைகளை பேச வருகிறேன்.

நான் வெற்றி பெற்றால் மக்கள் தான் எம்எல்ஏக்கள். தேர்தலுக்கு பிறகும் எங்களின் பணி தொடரும். மக்களுடன் மக்களாக மட்டுமே நிற்போம். நாங்கள் இப்போது தான் அரசியலுக்கு வந்துள்ளோம். மக்களிடம் நம்பகத்தன்மை ஏற்படுத்துவதுதான் எங்களின் பணி. அதை செய்து கொண்டிருக்கிறோம். மக்களும் எங்களை நம்புகிறார்கள். எப்போதும் மக்களுடன் இருப்போம்" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+