சட்டசபை மட்டுமல்ல தமிழ்நாட்டை விட்டே ஆளுநர் ரவி வெளியேறலாம்! தமிழக வாழ்வுரிமைக் கட்சி பாய்ச்சல்!
சென்னை: சட்டசபை மட்டுமல்ல தமிழ்நாட்டை விட்டே ஆளுநர் வெளியேறலாம் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தெரிவித்துள்ளது.
ஆளுநர் ஆர்.என்.ரவி, ஆர்.எஸ்.எஸ் உறுப்பினராக தான் இதுவரை செயல்பட்டு வருகிறாரே ஒழிய, ஆளுநராக ஒருபோதும் செயலாற்றவில்லை என அந்தக் கட்சி சாடியுள்ளது.
இது தொடர்பாக தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் விடுத்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது;

கண்டனம்
தமிழ்நாடு மாண்புமிகு முதல்வர் அவர்கள், சட்டப்பேரவையில் உரையாற்றிக் கொண்டு இருக்கும் போதே அவை மரபுகளை மீறி, பாதியிலேயே ஆளுநர் வெளியேறி, பேரவையையும், அமைச்சர்களையும், உறுப்பினர்களையும், ஆளுநர் அவமதித்திருப்பது வன்மையாக கண்டிக்கதக்கது.

தமிழ்நாட்டை விட்டு வெளியேறலாம்
சமூக நீ்தி, சுயமரியாதை, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி சமத்துவம், பெண்ணுரிமை, மதநல்லிணக்கம், பல்லுயிர் ஓம்புதல், பெரியார், அண்ணல் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராசர், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், திராவிட மாடல் ஆட்சி, தமிழ்நாடு அமைதிப் பூங்கா உள்ளிட்ட வார்த்தைகளை வாசிக்க, ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு விருப்பம் இல்லை என்றால், சட்டப்பேரவையை விட்டு மட்டுமின்றி, தமிழ்நாட்டை விட்டே வெளியேறலாம்.

கொச்சைப்படுத்தி
தமிழ்நாட்டு மக்கள் வாக்களித்து ஆட்சியில் அமர வைத்த ஓர் அரசை, இம்மணுக்கான அரசியல் தெரியாத ஆளுநர் ஆர்.என்.ரவி இழிவுப்படுத்தியிருப்பது, ஒட்டுமொத்த தமிழர்களையும் கொச்சைப்படுத்தியதை போன்று தான்.தமிழ்நாட்டுக்கு வந்ததில் இருந்தே, ஆளுநர் ஆர்.என்.ரவி, ஆர்.எஸ்.எஸ்-யின் உறுப்பினராக தான் இதுவரை செயல்பட்டு வருகிறாரே ஒழிய, ஆளுநராக ஒருபோதும் செயலாற்றவில்லை.

பாதியிலேயே வெளியேறி
ஆளுநர் பதவி என்பதே தேவையில்லாத ஒன்று தான். முதல் கட்டமாக ஆளுநர் ரவியை உடனடியாக தமிழ்நாட்டிலிருந்து மாற்ற வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.எனவே, மாண்புமிகு முதல்வர் அவர்கள் சட்டப்பேரவையில் உரையாற்றிக் கொண்டிருக்கும்போதே அவை மரபுகளை மீறி, பாதியிலேயே வெளியேறிய ஆளுநர், தமிழ்நாட்டை விட்டே வெளியேறலாம் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது.

திரும்ப பெற வேண்டும்
எனது நிலத்திற்கான, எனது மக்களுக்கான அரசியல் செய்ய தெரியாத ஆளுநரை, குடியரசுத்தலைவர் திரும்ப பெற வேண்டும் என்பதே சிறந்த முடிவாக இருக்கும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கருதுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications