அநியாயம் நடக்குது தளபதி.. கட்சி பதவிகள் பணத்திற்கு விற்பனை.. பனையூர் அலுவலகத்தை முற்றுகையிட்ட தவெக
சென்னை: பணத்திற்காக பதவிகள் விற்கப்படுவதாக பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தின் உள்ளேயே தவெகவினர் போராட்டத்தில் ஈடுபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மத்திய மாவட்டச் செயலாளர் மணிகண்டன் பணம் வாங்கி ஏமாற்றியதாகவும், ஆதவ் அர்ஜுனாவின் புகைப்படத்தை பேனரில் பயன்படுத்திய வட்டச் செயலாளர் பிரதீப் என்பவரை நீக்கியதாகவும் குற்றாச்சாட்டுகள் எழுந்துள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் தொடங்கப்பட்ட நாள் முதலே பதவிகளுக்கு பணம் வாங்குவதாக குற்றச்சாட்டுகள் வலம் வந்து கொண்டே இருக்கிறது. மாவட்டச் செயலாளர் பதவி தொடங்கி அடுத்தடுத்த பொறுப்புகளுக்கு பணம் வாங்கிவிட்டு பொறுப்புகள் அளிக்கப்படுவதாக பலரும் குற்றம்சாட்டி வந்தனர். இது தவெக தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் வரை பேசப்பட்டது.

அண்மையில் பனையூரில் நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் தவெகவில் பணம் வாங்கிவிட்டு பொறுப்பு கொடுப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அதிமுக மற்றும் திமுக ஆகிய கட்சிகளுடன் உறவு வைத்திருப்பவர்களுக்கு கடைசி வார்னிங் அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் பணத்திற்காக பதவிகள் விற்கப்படுவதாக பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தின் உள்ளேயே தவெகவினர் போராட்டத்தில் ஈடுபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஆதவ் அர்ஜுனாவின் புகைப்படத்தை பேனரில் போட்டதற்காக வட்டச் செயலாளர் பிரதீப் என்பவர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த நடவடிக்கையை திருவள்ளூர் மத்திய மாவட்டச் செயலாளர் மணிகண்டன். இவர் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆதரவாளராக இருந்து வருகிறார். இதனால் ஆதவ் அர்ஜுனா மற்றும் புஸ்ஸி ஆனந்த் இடையில் மோதல் இருப்பதாக பார்ப்படுகிறது. இந்த நிலையில் இந்த பஞ்சாயத்து பனையூரில் அலுவலகம் வரை வந்துள்ளது.
திருவள்ளூர் மத்திய மாவட்டச் செயலாளர் மணிகண்டன் பணம் வாங்கிவிட்டு பதவிகளை விற்பனை செய்வதாக குற்றம்சாட்டியதோடு, பனையூரில் அலுவலகத்திற்கு உள்ளே தவெகவினர் போராட்டம் நடத்தினர். அப்போது "பண முதலையே வெளியேறு" என்று கோஷத்துடன் பனையூர் அலுவலகத்திற்கு தவெகவின் முழக்கமிட்டு கொண்டே வந்தனர். இதனால் தவெகவில் உட்கட்சி பூசல் திவீரமடைந்துள்ளதாக தெரிகிறது.












Click it and Unblock the Notifications