ஸ்டாலினால் எனக்கு கொரோனா..1 கோடி தரனும்.. டுவிட்டரில் வந்த டுமீல் கோரிக்கை.. விசாரிச்சா மேட்டர் வேற
சென்னை: தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், ரேஷன் கடைகளை திறக்கும் உத்தரவு காரணமாக, தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக, முதல்வர் மு.க.ஸ்டாலினிடம், 1 கோடி நஷ்ட ஈடு கேட்டு உள்ளார் ஒரு இளைஞர்.
மே 24ம் தேதி முதல் ஒரு வாரத்திற்கு தமிழகத்தில் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்துள்ளது. இதன்படி காய்கறி கடைகள் , மளிகை கடைகளை கூட திறப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டுள்ளன.
கொரோனாவில் இருந்து 14. 93 கோடி பேர் மீண்டனர் - 1. 51 கோடி பேர் சிகிச்சை
காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள், தள்ளுவண்டி கடைகள் மூலமாக வீடுகளுக்கு சென்று சப்ளை செய்யப்படுகிறது.

ரேஷன் கடைகள் திறப்பு
இந்த நிலையில்தான் ஏழை எளியவர்கள் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக ரேஷன் கடைகளை திறந்து வைப்பதற்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவை கிண்டல் செய்யும் நோக்கத்தில் @johnyraja என்ற யூசர் பெயர் கொண்ட ட்வீட்டர் பயனாளி ஒருவர் ஆங்கிலத்தில் ஒரு ட்வீட் வெளியிட்டார். அது சமூக வலைத்தளத்தில் வைரலாகி உள்ளது. ஏனென்றால் அந்த டுவிட்டர் பதிவில் அவர் சொன்ன விஷயம் அப்படிப்பட்டது.

1 கோடி இழப்பீடு
ட்விட்டர் பதிவில் அவர் கூறியிருப்பதை பாருங்கள்: ஸ்டாலின் அவர்களே நீங்கள் ரேஷன் கடைகளை திறந்து வைத்து நிவாரண தொகையை வழங்கலாம் என்று எடுத்த தவறான முடிவு காரணமாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருக்கிறேன். எனக்கு ஏதாவது நேர்ந்தால் அதற்கு நீங்கள்தான் நேரடி பொறுப்பு . இதற்காக ஒரு கோடி ரூபாய் இழப்பீடு தரவேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க முகவரி
ஆனால் இந்த பதிவை வெளியிட்டவர் உண்மையிலேயே பாதிக்கப்பட்டவர் போல தெரியவில்லை. ஏனென்றால் அவரது ட்விட்டர் பயோவில், தனது இருப்பிடம் அமெரிக்காவில் உள்ள லாஸ்வேகாஸ் என்று குறிப்பிடப்பட்டுள்ளது . இதைப்பார்த்த நெட்டிசன்கள் அமெரிக்காவில் உள்ள ரேஷன் கடையில் அரிசி பருப்பு வாங்கியதால் உங்களுக்கு கொரோனா வந்தது போல என்று கூறி கேலி செய்து வருகின்றனர்.

எதிர்க்கட்சி ஆதரவாளர்
ரேஷன் கடைகளை முதல்வர் திறக்க உத்தரவிட்டதாலும், நிதியுதவி மக்களுக்கு கிடைப்பதாலும், எதிர்கட்சியினர் தான் யாரோ இது போல போலியான அக்கவுண்ட் மூலமாக கேலி கிண்டல் செய்து ட்விட்டர் பதிவு வெளியிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இவரை டுவிட்டரில் பின்தொடர்பவர்களில், அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் ஒருவராகும். எனவே வீணாக அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் நோக்கத்தில் எதிர்க்கட்சிகள் மூலமாக இதுபோல பிரச்சாரம் செய்யப்படுவதாக குற்றஞ்சாட்டுகின்றனர் திமுக ஆதரவு நெட்டிசன்கள்.