"இதுதான் அண்ணாவின் வெற்றியா?" கொந்தளித்த பத்ரிக்கு, அசால்ட் பதில் அளித்த திமுக எம்பி செந்தில்குமார்!
சென்னை: அண்ணாவை இழிவாக பேசிய விவகாரம் தொடர்பாக பத்ரி சேஷாத்ரி - திமுக எம்பி செந்தில் குமார் இடையே நடைபெற்ற கேள்வி பதில் ட்வீட்கள், திமுக ஆதரவாளர்களிடையே வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
கிழக்கு பதிப்பகம் என்ற பதிப்பகம் மூலமாக பல்வேறு புத்தகங்களை வெளியிட்டு வருபவர் பத்ரி சேஷாத்ரி. வலதுசாரி கருத்தியல் மீது நம்பிக்கை கொண்டு இயங்கி வந்த இவர், தமிழ் இணையக் கல்விக் கழக ஆலோசனை குழு இடம்பெற்றிருந்தார்.
இந்த நிலையில் அண்மையில் திமுக தரப்பில் இந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது. இதனால் சமூக வலைதளங்களில் இந்தி vs தமிழ் என்ற விவாதம் எழுந்தது. இதனால் திமுக ஆதரவாளர்கள் பலரும் தமிழ் மொழியின் சிறப்புகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர்.

சமஸ்கிருதம்
இதற்கு பதிலடியாக இந்தியில் ஐம்பெருங் (ஆனால் இரண்டுதான் தரம், இரண்டு காணோம், ஒன்று சுமார்) காப்பியங்கள் மாதிரி கிடையாது. பிற்கால மொழி. ஆனால் அந்த வழியில் போனால், சமஸ்கிருதத்தில் இருக்கும் இலக்கியங்களில் ஒரு துளிகூடத் தமிழில் கிடையாதே? அந்த அடிப்படையில் இந்தியாவில் வேறு எந்த மொழியும் நிற்காதே? இலக்கியம் இலக்கணம், காப்பியம், நாடகங்கள், கணிதம், வானியல், ரசாயனம் முதற்கொண்டு சமஸ்கிருதத்தில் இருப்பதுடன் தமிழை ஒப்பிடவே முடியாதே?

அண்ணா பற்றி அவதூறு
அப்படிப் பார்த்தால் ஆங்கிலத்தில் இன்று இருக்கும் எதனுடனும் எந்த இந்திய மொழியையும் (தமிழ் உட்பட) ஒப்பிட முடியாதே?" என்று பதிவிட்டிருந்ததாக ஸ்கிரீன் ஷாட்கள் சமூக வலைத்தளங்களில் பரவியது. அதுமட்டுமல்லாமல், அண்ணாவையும் இழிவாக விமர்சித்து கருத்து பதிவிட்டார்.

பத்ரி சேஷாத்ரி நீக்கம்
இதற்கு திமுக ஆதரவாளர்கள் தரப்பில் சமுக வலைதளங்களில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் அண்ணா குறித்து இழிவான கருத்துக்களை பதிவிட்ட பத்ரி சேஷாத்ரி தமிழ் இணையக் கல்விக் கழக ஆலோசனை குழுவிலிருந்து நீக்கப்பட்டதாக திமுக எம்பி செந்தில் குமார் தெரிவித்தார். பத்ரி சேஷாத்ரி நீக்கப்பட்டதற்கான நகலையும் பகிர்ந்திருந்தார்.

ட்விட்டர் மோதல்
இதற்கு பத்ரி சேஷாதிரி திமுக எம்பி செந்தில் குமாரியின் ட்விட்டர் பதிவை பகிர்ந்து, இதுதான் அண்ணாவின் வெற்றியா? என்று கேள்வி எழுப்பினார். இதற்கு திமுக எம்பி செந்தில் குமார், ஆம், இது எங்கள் கொள்கைகள் மற்றும் சித்தாந்தங்களின் வெற்றி என்று பதிலடி கொடுத்துள்ளார். திமுக எம்பி செந்தில் குமாரியின் ட்வீட், திமுக ஆதரவாளர்கள் மத்தியில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
-
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்!












Click it and Unblock the Notifications