சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அரசு பள்ளிகளில் 2 நாட்களில் இரண்டரை லட்சம் மாணவர்கள் சேர்க்கை - பெற்றோர்கள் ஆர்வம்

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கடந்த 2 நாட்களில் இரண்டரை லட்சம் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று உள்ளதாக பள்ளி கல்வித்துறை இயக்குனர் ச.கண்ணப்பன் தெரிவித்தார்.

Google Oneindia Tamil News

சென்னை: அரசு பள்ளிகளிலும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் மாணவர்களை சேர்க்க பெற்றோர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கடந்த 2 நாட்களில் இரண்டரை லட்சம் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று உள்ளதாக பள்ளி கல்வித்துறை இயக்குனர் ச.கண்ணப்பன் தெரிவித்துள்ளார். இனி வரும் நாட்களில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும் என்றும் கல்வித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Two and a half lakh students enrolled in government schools in 2 days

கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் திறப்பு குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. 2020-21-ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கையை அனைவரும் எதிர்பார்த்து இருந்த நிலையில், ஆகஸ்ட் 17ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கை அனைத்து வகையான பள்ளிகளிலும் தொடங்கி இருக்கிறது.

1ஆம் வகுப்பு முதல் எஸ்.எஸ்.எல்.சி. வரையில் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. மாணவர் சேர்க்கை தொடங்கிய முதல் நாளிலேயே பெற்றோர் தங்களுடைய பிள்ளைகளுடன் பள்ளிகளுக்கு படையெடுத்தனர். கொரோனா தொற்றை கருத்தில்கொண்டு அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற அரசு உத்தரவிட்டுள்ளது. அதனை பின்பற்றி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் கடந்த 2 நாட்களில் இரண்டரை லட்சம் மாணவர்கள் சேர்க்கை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நடத்தப்பட்டு இருப்பதாக பள்ளி கல்வித்துறை இயக்குனர் ச.கண்ணப்பன் தெரிவித்தார். மேலும், இனி வரக்கூடிய நாட்களிலும் மாணவர்களின் சேர்க்கை இதே அளவில் இருக்க வாய்ப்பு இருப்பதாக கல்வித்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

இதுதவிர தனியார் பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. 1ஆம் வகுப்பு முதல் பத்தாம் வரை மாணவர் சேர்க்கையை தொடர்ந்து, வரும் திங்கட்கிழமை முதல் பிளஸ்-1 வகுப்புக்கான மாணவர் சேர்க்கை தொடங்கி நடைபெற இருக்கிறது குறிப்பிடத்தக்கது.
சென்னை: அரசு பள்ளிகளிலும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் மாணவர்களை சேர்க்க பெற்றோர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
கடந்த 2 நாட்களில் இரண்டரை லட்சம் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று உள்ளதாக பள்ளி கல்வித்துறை இயக்குனர் ச.கண்ணப்பன் தெரிவித்துள்ளார். இனி வரும் நாட்களில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும் என்றும் கல்வித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

தடையை மீறி விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் சென்றால் அரசு நடவடிக்கை எடுக்கும் - ஹைகோர்ட்தடையை மீறி விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் சென்றால் அரசு நடவடிக்கை எடுக்கும் - ஹைகோர்ட்

கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் திறப்பு குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. 2020-21-ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கையை அனைவரும் எதிர்பார்த்து இருந்த நிலையில், ஆகஸ்ட் 17ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கை அனைத்து வகையான பள்ளிகளிலும் தொடங்கி இருக்கிறது.

1ஆம் வகுப்பு முதல் எஸ்.எஸ்.எல்.சி. வரையில் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. மாணவர் சேர்க்கை தொடங்கிய முதல் நாளிலேயே பெற்றோர் தங்களுடைய பிள்ளைகளுடன் பள்ளிகளுக்கு படையெடுத்தனர். கொரோனா தொற்றை கருத்தில்கொண்டு அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற அரசு உத்தரவிட்டுள்ளது. அதனை பின்பற்றி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் கடந்த 2 நாட்களில் இரண்டரை லட்சம் மாணவர்கள் சேர்க்கை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நடத்தப்பட்டு இருப்பதாக பள்ளி கல்வித்துறை இயக்குனர் ச.கண்ணப்பன் தெரிவித்தார். மேலும், இனி வரக்கூடிய நாட்களிலும் மாணவர்களின் சேர்க்கை இதே அளவில் இருக்க வாய்ப்பு இருப்பதாக கல்வித்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

Recommended Video

    மதுரையை இரண்டாவது தலைநகராகக்க வேண்டும் - ஆர். பி. உதயகுமார் தீர்மானம்

    இதுதவிர தனியார் பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. 1ஆம் வகுப்பு முதல் பத்தாம் வரை மாணவர் சேர்க்கையை தொடர்ந்து, வரும் திங்கட்கிழமை முதல் பிளஸ்-1 வகுப்புக்கான மாணவர் சேர்க்கை தொடங்கி நடைபெற இருக்கிறது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Parents are interested in enrolling students in government schools and government-aided schools. Two and a half lakh students have been admitted in the last two days, said S. Kannappan, Director of School Education. Education officials have said that student enrollment will increase in the coming days.
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X