சென்னை பெரம்பூரில் துயரம்! விஷவாயு தாக்கி 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு.. என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை கொடுங்கையூரில் மழைநீர் சேகரிப்பு தொட்டியை சுத்தம் செய்ய சென்ற தற்காலிக தொழிலாளர்கள் இருவர் விஷவாயு தாக்கி உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 15 அடி ஆழமுள்ள மழைநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விபரீதம் சம்பவம் நடந்துள்ளது. உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு கொடுங்கையூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

சென்னை பெரம்பூர் தொகுதிக்கு உட்பட்ட கொடுங்கையூர் தென்றல் நகர் 3 வது தெருவில், சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள மழைநீர் வடிகால் சம்ப்-ஐ சுத்தம் செய்வதற்காக தற்காலிக தொழிலாளர்கள் ராணிப்பேட்டையை சேர்த அகமது பாஷா மற்றும் தாம்பரத்தை சேர்ந்த நவீன் ஆகியோர் வந்துள்ளனர். சுமார் 15 அடி ஆழம் உடைய அந்த தொட்டியில் இறங்கி சுத்தம் செய்ததாக கூறப்படுகிறது.

two killed in poison gas attack

அப்போது விஷ வாயு தாக்கியதில் இருவரும் அடுத்தடுத்து மயங்கியுள்ளனர். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் மாதவரம் தீயணைப்பு படையினர் உடனடியாக வந்து அவர்களை மீட்டுள்ளனர். எனினும் அவர்கள் இருவரும் உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து கொடுங்கையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

இருவரது உடல்களையும் மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தொழிலாளர்கள் இருவரும் பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்துகொண்டு தான் பணி செய்தனரா என்று சந்தேகம் எழுந்துள்ளதால் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மழைநீர் தொட்டி பராமரிப்பு இன்றி இருந்ததா என்பது குறித்து மாநகராட்சி அதிகாரிகளும் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+