இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டவர்களுக்கு.. தமிழகத்தில் கிடைத்த சூப்பர் ரிசல்ட்.. சுகாதாரத்துறை மகிழ்ச்சி
சென்னை : தமிழகத்தில் கடந்த ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் கொரோனா தொற்றால் உயிரிழந்த 87 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்தாதவர்கள் ஆவர். அதேநேரம் இரண்டு டோஸ் கோவிட் -19 தடுப்பூசிகள் தமிழ்நாட்டில் நல்ல முடிவுகளை வழங்கியுள்ளன.
இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது, தீவிர நோய் தொற்றுடன் பாதிக்கப்படுவது, ஐசியுவில் அனுமதிக்கப்படுவது, மரணத்தை சந்திப்பது போன்றவை பெரிய அளவில் நடைபெறவில்லை என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
இரண்டு டோஸ் தடுப்பூசி போடப்பட்டவற்கு கொரோனா பாதிப்பிலிருந்து சிறப்பான பாதுகாப்பு வழங்குவதை பல சர்வதேச ஆய்வுகள் காட்டின. இப்போது, தமிழ்நாடு மாநில சுகாதாரத் துறை வெளியிட்ட அதன் சொந்த புள்ளிவிவரங்களும் இந்த கண்டுபிடிப்புகளை மீண்டும் உறுதிசெய்துள்ளன.

எவ்வளவு பாதிப்பு
தமிழக சுகாதாரத்துறை நடத்திய ஆய்வில் கூறப்பட்ட தகவல்களை இப்போது பார்ப்போம். ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில், 88,719 பேர் கொரோனா தொற்றால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டனர். அவர்களில் குறைந்தது 63% பேர் எந்த தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை. மீதமுள்ள 24% ஒரு டோஸ் தடுப்பூசி போட்டவர்கள் ஆவர். அதேநேரம் 13% பேர் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டவர்கள் ஆவர்.

உயிரிழப்பு
இந்த புள்ளிவிவரப்படி தடுப்பூசி எப்படி வேலை செய்துள்ளது என்பதை ஆய்வு செய்ததில், ஐசியு சேர்க்கை மற்றும் இறப்புகளில் வித்தியாசம் பெரிய அளவில் இருந்தது. கடந்த இரண்டு மாதங்களில் கொரோனாவால் உயிரிழந்தவர்களில் 87% பேர் தடுப்பூசி போடப்படாதவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இதேபோல் கடந்த இரண்டு மாதங்களில் ஐசியுவில் அனுமதிக்கப்பட்டவர்களில் 76 சதவீதம் பேர் தடுப்பூசி போடாதவர்கள் ஆவர்.

இரண்டு டோஸ்
அதாவது ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இவர்களில் 5816 பேர் ஐசியுவில் அனுமதிக்கப்பட்டனர். அதில் 1626 பேர் இறந்தனர். இறந்து போனவர்களில் 87 சதவீதம் பேர் தடுப்பூசி போடாதவர்கள் ஆவர். 9 சதவீதம் பேர் ஒரு டோஸ் தடுப்பூசி போட்டவர்கள் ஆவர். வெறும் 4 சதவீதம் பேர் மட்டுமே இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டவர்கள் ஆவர். அதேபோல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 73 சதவீதம் பேர் தடுப்பூசி போடாதவர்கள் ஆவர்.

முககவசம் அவசியம்
தமிழ்நாடு பொது சுகாதார இயக்குனர் டாக்டர் டி எஸ் செல்வவிநாயகம் இதுபற்றி கூறும் போது. " முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பெரியவர்கள் வைரஸ் தொற்றுக்கு ஆளாவதை நாங்கள் பார்க்கிறோம். முககவசம் அணியவும், சமூக இடைவெளியைப் பராமரிக்கவும், கோவிட் -19 நெறிமுறைகளைப் பின்பற்றவும் தடுப்பூசி போட்டவர்களிம் கேட்பதற்கு இதுவும் ஒரு காரணம் ஆகும். அதேநேரம்தொற்றுநோய்க்கான ஆபத்து தடுப்பூசி போட்டவர்களுக்கு ஆபத்து குறைவாக உள்ளது. மறுபுறம், தடுப்பூசி போடப்படாதவர்களின் ஐசியு சேர்க்கை விகிதம் மற்றும் இறப்புகள் விகிதம் கணிசமாக அதிகமாக உள்ளது. ஐசியுவில் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்களை நாங்கள் மிக குறைவாகவே பார்த்தோம்" என்றார்.

எத்தனை டோஸ்
இதனிடையே கொரோனாவால் ஏற்படும் இறப்பைத் தடுக்க அனைத்து மாவட்டங்களிலும் குறைந்தது 70% முழுமையான தடுப்பூசி போடுவதை நோக்கமாக தமிழக அரசு கொண்டுள்ளது. இருப்பினும் எந்த மாவட்டமும் பாதிக்கு மேல் இலக்கை அடையவில்லை. தமிழ்நாட்டில் 5.7 கோடிக்கும் அதிகமான பெரியவர்கள் உள்ளனர், அவர்களுக்கு இரண்டு டோஸ் தடுப்பூசி தேவைப்படுகிறது. கடந்த அக்டோபர் 8ம் தேதி மாலை நிலவரப்படி , 3.7 கோடி (65%) மக்கள் தடுப்பூசியின் ஒரு டோஸையும், 1.2 கோடி (22%) பெரியவர்கள் ( 18வயது நிறைவடைந்தவர்கள்) இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் பெற்றுள்ளனர்.

எங்கு குறைவு
கோயம்புத்தூர், சென்னை, திருப்பூர் மற்றும் காஞ்சிபுரம் போன்ற சில சுகாதாரப் பிரிவுகளில் முதல் டோஸ் பெற்றவர்கள் 75%க்கு மேல் இருந்தாலும், வேலூர் மற்றும் தூத்துக்குடி போன்ற மாவட்டங்களில் ஒரு டோஸ் கவரேஸ் 55%க்கும் குறைவாக உள்ளது இன்னும் சில மாவட்டங்களில் இன்னும் பலர் தங்கள் இரண்டாவது டோஸை சரியான நேரத்தில் எடுக்கவில்லை.

ராதாகிருஷ்ணன்
இதனிடைய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இதுபற்றி கூறும போது, கொரோனா தடுப்பூசி இரண்டு டோஸ் செலுத்துவதற்கு கடுமையாக உழைக்க வேண்டும். ஞாயிற்றுக்கிழமை மாநிலம் முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்ட மெகா முகாம்கள் அதிக மக்களை ஊக்குவிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்," என்றார். இன்றைய கேம்பில் 33 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.












Click it and Unblock the Notifications