"இறங்க முடியாது.." செங்கிப்பட்டி போலீஸ் நிலையத்தில் இறங்க மறுத்த உதயநிதி? திடீர் பரபரப்பு
சென்னை: எதிர்க்கட்சி தலைவரும் திமுக இளைஞரணி தலைவருமான உதயநிதி ஸ்டாலினை கைது செய்த போலீசார், தஞ்சாவூருக்கு அழைத்து செல்கிறார்கள். இருப்பினும், செல்லும் வழியிலேயே ஏகப்பட்ட மாற்றங்கள் நடந்து வருகிறது. அவரை செங்கிப்பட்டி போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்ட நிலையில், காவல் வாகனத்தில் இருந்து இறங்கி வர உதயநிதி மறுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. எங்கு வழக்குப்பதிவு செய்யப்பட்டதே அதே காவல் நிலையத்தில் தான் விசாரணை நடத்தப்பட வேண்டும் என உதயநிதி கூறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தஞ்சாவூரில் திமுக போராட்டத்தின் போது முதலமைச்சர் விஜய் மற்றும் பிரபல நடிகை குறித்து உதயநிதி அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக தவெக சார்பில் அளித்த புகாரை தொடர்ந்து இன்று காலை உதயநிதி வீட்டின் முன்பு போலீசார் குவிந்தனர். திமுகவினரின் கடும் எதிர்ப்பையும் மீறி உதயநிதி கைது செய்யப்பட்டார்.

சென்னையில் கைது செய்யப்பட்ட உதயநிதி, பிறகு போலீசார் அவரை கைது செய்து தஞ்சை அழைத்து செல்கிறார்கள். சுமார் 7 மணி நேரத்திற்கு மேலாக உதயநிதி போலீஸ் காவலில் இருக்கிறார. முதலில் சென்னை நீலாங்கரையில் கைது செய்யப்பட்ட உதயநிதி ஸ்டாலினை தஞ்சாவூருக்கு அழைத்துச் செல்வதாக போலீசார் தெரிவித்தனர். அரியலூர் வழியாக சென்றால் குறுகிய நேரத்தில் தஞ்சை சென்றடைய முடியும் என்ற நிலையிலும், மதுராந்தகம் - விழுப்புரம் - பெரம்பலூர் - திருச்சி வழியாக நீண்ட பாதையில் அழைத்துச் சென்றதாக திமுக குற்றம்சாட்டியது.
ஆனால், கடைசி நேரத்தில் உதயநிதி ஸ்டாலினை தஞ்சாவூருக்கு அழைத்துச் செல்லாமல், தஞ்சை அருகே உள்ள செங்கிப்பட்டி காவல் நிலையத்திற்கு போலீசார் அழைத்து சென்றனர். இருப்பினும், உயர் நீதிமன்ற உத்தரவின்படி தஞ்சாவூர் தெற்கு காவல் நிலையத்தில்தான் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் சொல்லிய உதயநிதி ஸ்டாலின், போலீஸ் வாகனத்தில் இருந்து இறங்க மறுத்துவிட்டார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
முன்னதாக, இந்த வழக்கில் உதயநிதியை ரிமாண்ட் செய்யப்போவதில்லை என்று தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது. மேலும், விசாரணையை முடித்துவிட்டு இன்றே அவரை விடுவிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
பிறகு போலீஸ் தரப்பில் கேட்டுக் கொண்ட பிறகே அவர் செங்கிப்பட்டி போலீஸ் நிலையத்திற்கு சென்றார். அப்போது அங்கு திரண்டிருந்த தொண்டர்களை நோக்கியும் உதயநிதி கை அசைத்தார். பிறகு விசாரணைக்காக போலீஸ் நிலையம் சென்றார்.


Click it and Unblock the Notifications
