குதிரையையும் விடாத உதயநிதி ஸ்டாலின்.. வியந்துபோன சேப்பாக்கம்.. மனசார வாழ்த்தும் 85 குடும்பங்கள்!
சென்னை: மெரினா கடற்கரை என்று சொன்னாலே, முதலில் நினைவுக்கு வருவது, சவாரி குதிரைகள்தான். தேசிங்கு ராஜா மாதிரி ஏறி உட்கார்ந்தாலும், அது வழக்கமாக போகும் தூரத்திற்கு போய் திரும்பி ஏறிய இடத்திற்கே கொண்டு வந்து விட்டு விடும்.
குதிரையின் வனப்பையும், கம்பீரத்தையும் கவனிக்கும் பலரும், அந்த குதிரையை பராமரிப்பவர்கள் படும் கஷ்டம் பற்றி அறிவதில்லை. அதிலும், ஊரடங்கு காலகட்டங்களில் குதிரையை ஓட்டி சம்பாதிப்பவர்கள் நிலைமையும் யோசிப்பதில்லை.
ஆனால், உதயநிதி ஸ்டாலின் குதிரை சவாரி தொழில் செய்வோருக்கும், அந்த குதிரைகளுக்கும் சேர்த்து நல்லது செய்து வருகிறார்.

சுழன்று வரும் உதயநிதி ஸ்டாலின்
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏவான நாள் முதல் பம்பரமாக தொகுதிக்குள் சுற்றி சுழன்று வருகிறார் உதயநிதி. ஊரடங்கு காலத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல நலத் திட்டங்களை அவர் செயல்படுத்தியுள்ளார். இதனால் மக்களிடையே குறுகிய காலத்தில் நல்ல பெயரை ஈட்டியுள்ளார்.

குதிரைகளுக்கு தடுப்பூசி
அத்தோடு விடவில்லை உதயநிதி. மெரினா பீச்சில், பயன்படுத்தப்படும், 85 சவாரி குதிரைகளுக்கு கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் தடுப்பூசி முகாம் நடத்த ஏற்பாடு செய்துள்ளார். இந்த முகாம், சேப்பாக்கத்தில் இன்று நடைபெற்றது. குதிரைகளுக்கு தேவையான உணவு பொருட்களை உரிமையாளர்களிடம் வழங்கியுள்ளார் உதயநிதி.

85 குடும்பங்கள்
ஊரடங்கு காலத்தில் வருமானத்திற்கு வழியில்லாததால், குதிரைக்கு தீவனம் வைக்கவும் அதன் உரிமையாளர்கள் கஷ்டப்பட்டு வருகிறார்கள். குதிரைகள் பசித்திருப்பதை அறிந்து அதன் பசியாற்ற உணவு பொருட்களை உதயநிதி ஸ்டாலின் வழங்கியுள்ளார். மேலும், தடுப்பூசிகளை செலுத்த ஏற்பாடுகள் செய்துள்ளார். 85 சவாரி குதிரை குடும்பங்கள்தான் என்றாலும் அவர்களை கண்டுகொள்ளாமல் விட்டு விடுவதில்லை உதயநிதி. கடந்த ஜூன் மாதம் இப்படித்தான் அந்த குடும்பங்களைத் தேடிச் சென்று, உணவுப் பொருட்களை வழங்கினார்.

உணவு வழங்கினார் உதயநிதி
அண்ணா சதுக்கம் முதல் கலங்கரை விளக்கம் வரை மெரினாவில் குதிரை சவாரி தொழில் செய்பவர்களின் 85 குதிரைகள் ஊரடங்கில் உணவின்றி தவிப்பதாக மாலா என்பவர் தந்த தகவலின்பேரில், கால்நடைத்துறையிலிருந்து குதிரைகளுக்கு தேவையான உணவுகளை வர வைத்தார் உதயநிதி. இப்போது உணவோடு சேர்த்து தடுப்பூசி போடும் ஏற்பாடுகளையும் செய்துள்ளார்.

குதிரைகளையும் விடவில்லை
மக்களை மட்டும்லல, வாயில்லா ஜீவன்களான குதிரைகளையும் விட்டு வைக்காமல் நல்லது செய்துள்ளார் உதயநிதி என்று பாராட்டு தெரிவிக்கிறார்கள், தொகுதி மக்களும், திமுக கட்சிக்காரர்களும்.
-
ஸ்ரீவைகுண்டம் தவெக எம்எல்ஏ சரவணனை கட்சியில் இருந்து நீக்க வேண்டும்.. உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தல் -
மீண்டும் மீண்டும் அதே தவறு.. கோட்டை விடும் ஸ்டாலின், உதயநிதி.. குமுறும் திமுகவினர் -
கே.என்.நேரு மீது FIR.. உள்ளே இழுக்கப்பட்ட உதயநிதி நண்பர் ரத்தீஷ்! விஜய் கையில் எடுத்த பிரம்மாஸ்திரம் -
சென்னை பக்கம் திரும்பிய மழை.. இன்று திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட 9 மாவட்டங்களுக்கு அலர்ட் -
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்!












Click it and Unblock the Notifications