நிவாரணம், சிறப்பு தொகுப்பு - இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கு! விஜய்க்கு பாடம் எடுத்த உதயநிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: பேப்பர் படிச்சா மட்டும் போதாது, எது நிவாரணம், எது சிறப்பு தொகுதி என்பதை தெரிந்திருக்கணும் என முதல்வர் விஜய்க்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்தார்.

காவிரி விவகாரத்தில் அனைத்து கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தினார். கர்நாடகா முதல்வர், மேகதாது அணையை கட்ட அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டிவிட்டார் என்றும் நாம் அதை எதிர்த்து எப்போது கூட்டுவது என்றும் உதயநிதி கேள்வி எழுப்பினார்.

udhayanidhi stalin joseph Vijay

மேலும் விவசாயிகளுக்கான வறட்சி நிவாரணத்தையும் தவெக அரசு தரவில்லை என உதயநிதி தெரிவித்தார். இதற்கு விஜய் பதிலளித்தார். அவர் கூறுகையில், "காவிரி விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் சில விவரங்களை கேட்டுள்ளன.

காவிரி நமது உயிர் ஆதாரம். நமது உணர்வு ரீதியான ஒன்று. அதனால் காவிரியை வைத்து அரசியல் செய்யும் எண்ணம் துளியும் இல்லை. அதற்கான அவசியமும் இல்லை. மேகதாது விவகாரத்தில் நாம் அனைவரும் சேர்ந்துதான் தீர்மானம் நிறைவேற்றினோம்.

காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகளை கொஞ்சம் கூட விட்டுத் தரமாட்டோம். சட்டப்படி இந்த பிரச்சனையை அணுகுவதில் எந்த மாற்றமும் இல்லை. இருந்தாலும் ஒரு முயற்சியை மேற்கொள்ளலாம் என நினைத்து பெங்களூர் பயணத்திற்கு திட்டமிட்டோம்.

நான் பெங்களூர் போக நினைத்ததற்கு காரணம், இந்த பிரச்சனையை தீர்ப்பதற்கான ஒரு நேர்மறைவான கிடைத்தால் நல்ல இருக்கும் என்ற எண்ணத்தில்தான் அண்டை மாநிலத்துடன் பேசி பார்த்தால் என்னவென நினைத்தேன்.

ஒரு வேளை அந்த பயணத்தில் அவமானம் நேர்ந்தால் என்ன செய்வது என சிலர் கேட்கிறார்கள். தமிழக மக்களுக்காக நான் எந்த அவமானத்தையும் தாங்கிக் கொள்வேன். எனினும் என் மீது அன்பு காட்டிய அனைவருக்கும் என் நன்றி. குறுவை சாகுபடிக்கான நிவாரணம் பற்றி எதிர்க்கட்சித் தலைவர் கேட்டு இருந்தார். இதற்கான நிவாரணம் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டடுள்ளது.

அரசியலே நாங்கள் தான் என சொல்லிக் கொள்பவர்களுக்கு இது எப்படி தெரியாமல் போனது என தெரியவில்லை. முன்ன பின்ன பேப்பர் படித்து இருந்தால் நாட்டில் என்ன நடக்கிறது என தெரிந்து இருக்கும் என விஜய் பதிலடி கொடுத்தார்.

அப்போது உதயநிதி பதிலடியில், சிறப்பு தொகுதி ரூ 164 கோடி எல்லா அரசும் கொடுப்பதுதான். அதைதான் தவெக அரசு கொடுத்தது சிறப்பு தொகுப்பு. ஆனால் இப்போது விவசாயிகள் வறட்சி நிவாரண நிதி கேட்கிறார்கள். இது ரெண்டுக்கும் வித்தியாசம் தெரிஞ்சிக்கோங்க. இதுக்கு டெய்லி காலை பேப்பர் படிச்சா மட்டும் போதாது. விவசாயிகளை, அனைத்து கட்சிகளை சந்திக்கணும். தமிழக அரசு அனைத்து கட்சி கூட்டம் கூட்ட என்ன பயம் என கேள்வி எழுப்பியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+