சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மதம் பிடித்த யானை போல் மத்திய அரசு...! இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்து உதயநிதி அறிக்கை

Google Oneindia Tamil News

Recommended Video

    Udhyanidhi stalin slams modi government

    சென்னை: ஆதிக்க சக்திகளின் பிடியிலிருந்து தமிழகத்தை காக்க திமுக இளைஞரணியில் இளைஞர்கள் பெருந்திரளாக வந்து இணைய வேண்டும் என அந்த அணியின் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    udhyanidhi stalin slams modi government

    நமது மொழி, இனம், கலாச்சாரத்துக்கு எப்போதெல்லாம் ஆபத்து வருகிறதோ அப்போதெல்லாம் அரணாக இருந்து காத்து வருவது திமுக தான் எனக் கூறியுள்ளார். திமுகவின் போராட்டங்கள் வெற்றியடைய காரணமாக இருந்ததில் இளைஞர்களுக்கு முக்கிய பங்குண்டு எனக் கூறியுள்ளார்.

    திமுக தொடங்கப்பட்ட போது அண்ணாவுக்கு வயது 40, கலைஞருக்கு வயது 25, பேராசிரியர் அன்பழகனுக்கு வயது 26 எனக் கூறியுள்ள உதயநிதி, இளைஞர்களால் கட்டி காப்பாற்றப்பட்ட தமிழகம் இன்று ஆபத்தான சூழலை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவித்திருக்கிறார். சமூக நீதியை மறந்து, மாநில சுயாட்சியை காலில் போட்டு மிதித்து மதம் பிடித்த யானை போல் மனம்போன போக்கில் மத்தியில் பாஜக அரசாட்சி செய்வதாக கூறியுள்ளார்.

    வீட்டு சாப்பாடு கிடையாது.. சிறை உணவுதான்.. ப.சிதம்பரத்தின் கோரிக்கையை நிராகரித்த ஐகோர்ட்வீட்டு சாப்பாடு கிடையாது.. சிறை உணவுதான்.. ப.சிதம்பரத்தின் கோரிக்கையை நிராகரித்த ஐகோர்ட்

    தமிழகத்தில் எடப்பாடி அரசின் கூத்துக்களை சிரித்துவிட்டுக் கடந்துவிட முடியவில்லை என்றும், காமெடி அரசு தமிழகத்தை பல நூற்றாண்டுகளுக்கு பின்னிழுத்துச் சென்று கொண்டிருப்பதாகவும் புகார் கூறியுள்ளார். அரசுகளின் அவலட்சணங்களை எடுத்துக்கூறி மக்களை விழிப்படையச் செய்யும் தூதுவர்களாக இளைஞர்கள் மாற வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

    நாளை (சனிக்கிழமை) தொடங்கி நவ.14-ம் தேதி வரை, இரண்டு மாத காலத்திற்கு திமுக இளைஞரணியில் உறுப்பினர் சேர்ப்பு முகாம் நடைபெறும் என்றும், இளைஞர்கள் பெருந்திரளாக வந்து இணைய வேண்டும் எனவும் கோரியுள்ளார்.

    English summary
    udhyanidhi stalin slams modi government
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X