ஆளுநரை அவசர அவசரமாக சந்தித்த எல்.முருகன்.. அடுத்த மூவ் என்னவாக இருக்கும் .. அலார்ட் ஆகும் பாஜக
சென்னை : தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை மத்திய இணையமைச்சர் எல் முருகன் இன்று நேரில் சந்தித்துப் பேசிய நிகழ்வு அரசியல் முக்கியத்துவம் பெற்றுள்ள நிலையில், நீட் தேர்வு விவகாரம் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என். ரவி கடந்த செப்டம்பர் மாதம் 18ஆம் தேதி பதவி ஏற்றுக் கொண்டார். அப்போது இருந்து தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அவரை அலுவல் ரீதியாகவும் மரியாதை நிமித்தமாகவும் சந்தித்து வருகின்றனர்.
குறிப்பாக பாஜகவைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோர் அடிக்கடி சந்தித்து வருகின்றனர். கடந்த அக்டோபர் 12 ஆம் தேதி தமிழக ஆளுநர் ஆரியன் ரவியை சந்தித்து பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட கட்சியினர் நேரில் சந்தித்து தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து உள்ளதாகவும் திமுக எம்பிக்கள் மீதான குற்ற வழக்குகளில் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட கோரி மனு அளித்தனர்.

ஆளுநர் ஆர்.என்.ரவி
இதற்கு அடுத்ததாக அக்டோபர் 13ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் ஆளுநரை நேரில் சந்தித்து பேசினார் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு நிரந்தர விலக்கு அளிக்க வகை செய்யும் சட்ட மசோதா சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் இது குறித்து ஆளுநர் முக்கியமாக விவாதித்ததாக கூறப்பட்டது. மேலும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு விவகாரங்கள் குறித்தும் சமீபத்தில் தேசிய புலனாய்வு முகமை எனப்படும் எண்ணை இயக்கத்தில் மேற்கொண்ட கைது நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியானது.

எல்.முருகன் ஆளுநருடன் சந்திப்பு
இந்நிலையில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இன்று ஆளுநர் ஆர்.என். ரவியை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நேரில் சந்தித்து உரையாடியுள்ளார். கடந்த அக்டோபர் மாதம் ஏற்கனவே முருகன் ஆளுநரை சந்தித்த நிலையில் இன்றும் சந்தித்து பல முக்கிய குறித்து பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பிரதமர் பஞ்சாப் சென்றபோது அவருக்கு போதிய பாதுகாப்பை பஞ்சாப் அரசு வழங்கவில்லை என தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தும் வகையில் ஆளுநர் ஆர்.என். ரவியிடம் சட்டமன்ற உறுப்பினர்களுடன் சேர்ந்து கடிதம் ஒன்றை வழங்கினார்.

நீட்வு தேர்வு தொடர்பாக பேச்சு?
அதைத் தொடர்ந்து மத்திய இணை அமைச்சர் எல் முருகனும் இன்று ஆளுநரை சந்தித்துள்ளார் மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று கூறப்பட்டாலும் தமிழகத்தில் இருக்கும் ஒரே மத்திய அமைச்சரான முருகன் நீட் தேர்வு விவகாரங்கள் குறித்து தமிழகத்தில் நடைபெற்று வரும் நிகழ்வுகள், நீட் தேர்வு தொடர்பாக தமிழக அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும், மத்திய அரசின் சில திட்டங்கள் குறித்தும் விவாதிக்பட்டிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

முக்கியத்துவம் பெற்ற சந்திப்பு
தமிழக அரசு சட்டப்பேரவையில் கொண்டு வந்துள்ள நீட் தேர்வுக்கான திருத்த மசோதாவை ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்காமல் காலம் தாழ்த்துவதாக நேற்று நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில் மத்திய அமைச்சர் ஆர்.என். ரவி ஆளுநரை சந்தித்து பேசியுள்ள சம்பவம் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications