சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தமிழகத்தில் இதற்கும் மேல் தளர்வா? அரசு எடுக்க போகும் அதிரடி முடிவு.. எதற்கெல்லாம் அனுமதி தரப்படும்?

தமிழகத்தில் செப்டம்பர் 8க்கு பிறகு கூடுதல் லாக்டவுன் தளர்வுகள் கொண்டு வரப்பட வாய்ப்புள்ளது என்று தகவல்கள் வருகிறது.

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் செப்டம்பர் 8க்கு பிறகு கூடுதல் லாக்டவுன் தளர்வுகள் கொண்டு வரப்பட வாய்ப்புள்ளது என்று தகவல்கள் வருகிறது.

நாடு முழுக்க தற்போது அன்லாக் 4.0 அமலில் இருக்கிறது. மெட்ரோ போக்குவரத்து தொடங்கி கூட்டங்கள் கூட அனுமதி வரை பல சேவைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது உள்ளது. இன்னும் சில மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் அமலுக்கு வந்துள்ளது.

தமிழகத்திலும் இதேபோல் லாக்டவுன் தளர்வுகள் கடந்த 1ம் தேதி அமலுக்கு வந்தது. இந்த லாக்டவுனில் கூடுதல் தளர்வுகள் தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது.

கோவையில் திடீர் உச்சம்.. தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா.. தமிழகத்தில் இன்று 5870 பேர் பாதிப்பு! கோவையில் திடீர் உச்சம்.. தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா.. தமிழகத்தில் இன்று 5870 பேர் பாதிப்பு!

என்ன தளர்வு

என்ன தளர்வு

தமிழகத்தில் தற்போது மாவட்டத்திற்கு இடையே பயணம் மேற்கொள்ள இ பாஸ் முறை ரத்து செய்யயப்பட்டு உள்ளது. மாவட்டங்களுக்கு உள்ளே பேருந்து போக்குவரத்து தொடங்கி உள்ளது. மாவட்டங்களுக்கு இடையே பேருந்து போக்குவரத்து தொடங்க உள்ளது. தமிழகத்தில் விரைவு பேருந்து போக்குவரத்து வரும் 7ம் தேதி துவங்குகிறது. சாதாரண பேருந்து மட்டுமின்றி எஸ்இடிசியின் சொகுசு மற்றும் விரைவு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது.

மக்கள் எப்படி

மக்கள் எப்படி

இதனால் தமிழகம் முழுக்க இயல்பு நிலை திரும்பி விட்டது என்று கூட கூறலாம். மக்கள் எல்லோரும் வெளியே வர தொடங்கி விட்டனர். சென்னையில் பொது இடங்களில் மக்கள் கூட்டம் அதிகரிக்க தொடங்கி விட்டது. அரசு அலுவலகங்களில் 100 ஊழியர்கள் அனுமதிக்க தொடங்கிவிட்டனர். தமிழகம் முழுக்க 90% செயல்பாடுகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுவிட்டது.

வேறு என்ன

வேறு என்ன

அதோடு தமிழகத்தில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும் மக்களுக்கு தனிமைப்படுத்தும் விதிகள் பொருந்தாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் இயல்புநிலை திரும்பி உள்ள நிலையில் தற்போது தமிழகத்தில் கூடுதல் தளர்வுகள் கொண்டு வரப்பட வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். இதற்காக தமிழக முதல்வர் பழனிசாமி ஆலோசனை செய்ய இருக்கிறார்.

ஆலோசனை செய்ய உள்ளார்

ஆலோசனை செய்ய உள்ளார்

தமிழக முதல்வர் பழனிசாமி வரும் 8ம் தேதி மருத்துவர் குழுவுடன் ஆய்வு செய்ய இருக்கிறார். எப்போதும் தமிழகத்தில் லாக்டவுன் தளர்வுகளை கொண்டு வரும் முன், தமிழக முதல்வர், சிறப்பு மருத்துவர் குழுவுடன் ஆலோசனை செய்வது வழக்கம். அதேபோல் இந்த முறையும் மருத்துவர் குழுவுடன் முதல்வர் ஆய்வு நடத்த உள்ளார். இதனால் தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளை கொண்டு வர வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.

எங்கு செல்ல

எங்கு செல்ல

அதன்படி பிற மாநிலங்களில் இருந்து தமிழகம் வர இ பாஸ் ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளது என்கிறார்கள். கர்நாடகா, ஆந்திர பிரதேசம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தமிழகம் வர இ பாஸ் ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளது. தற்போது வெளிமாநிலத்தில் இருந்து தமிழகம் வரும் நபர்களுக்கு மட்டுமே இ பாஸ் உள்ளது குறிப்பிடத்தக்கது.

பேருந்து பயணம்

பேருந்து பயணம்

அதேபோல் தமிழகத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என்கிறார்கள். மாவட்டங்களுக்கு இடையே பேருந்துகள் அதிகரிக்கப்படும். பிற மாநிலங்களுக்கு வெகு சில பேருந்துகள் சோதனை முறையில் இயக்கப்பட வாய்ப்புள்ளது என்றும் கூறுகிறார்கள். மாவட்டங்களுக்கு இடையே கூடுதல் ரயில்களை இயக்குவது தொடர்பாக தமிழக அரசு ரயில்வே துறைக்கு கோரிக்கை வைக்க வாய்ப்புள்ளது.

சினிமா வாய்ப்பு இல்லை

சினிமா வாய்ப்பு இல்லை

தமிழகத்தில் கண்டிப்பாக கல்வி நிறுவனங்கள் இப்போது திறக்கப்படாது. செப்.14-ம் தேதி முதல் பள்ளிகள் கல்லூரிகள் திறக்கப்படும் என்ற தகவல் தவறானது என்று தமிழக அரசு தெரிவித்துவிட்டது. அதேபோல் அக்.1-ம் தேதி முதல் திரையரங்குகள் திறக்கப்படும் என்ற தகவலும் தவறானது என்று அரசு தெரிவித்துவிட்டது. அதனால் இதில் தளர்வுகள் கொண்டு வரப்பட வாய்ப்புகள் இல்லை என்று கூறுகிறார்கள்.

விதிகள் மாறலாம்

விதிகள் மாறலாம்

கர்நாடகாவில் தற்போது தனிமைப்படுத்தும் விதிகள் வெளிநாட்டு பயணிகளுக்கு மட்டுமே பொருந்துகிறது. அதேபோல் தமிழகத்திலும் இனி அறிகுறி இல்லாத வெளிமாநில பயணிகளை தனிமைப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என்று அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது. கர்நாடகா போல வெளிமாநில பயணிகள் தமிழகம் வந்து வணிக, வியாபார பணிகள் எளிதாக மேற்கொள்ள வசதி ஏற்படுத்த தமிழக அரசு ஆலோசனை செய்து வருகிறது.

என்ன முடிவுக்கு

என்ன முடிவுக்கு

அதேபோல் தமிழகத்தில் தற்போது லாக்டவுன் தளர்வுகள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த தளர்வுகள் காரணமாக மாநிலம் முழுக்க என்ன நிலைமை நிலவுகிறது என்பது குறித்தும், மக்கள் எப்படி சமுக இடைவெளியை கடைபிடிக்கிறார்கள் என்று குறித்தும் ஆலோசனை செய்ய வாய்ப்புள்ளது. அதேபோல் அதிகரித்து வரும் கொரோனா கேஸ்கள் குறித்தும் இதில் ஆலோசனை செய்ய வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

English summary
Unlock in Tamilnadu: What more ease down can happen in the state after September 8?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X