கவிஞர் வைரமுத்துவின் புதிய கூட்டணி.. ட்விட்டரில் வந்த அப்டேட்
சென்னை: ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் இயக்கத்தில் புதிய பாடலொன்றை எழுதி இருப்பதாகவும், அதற்கு சத்யா இசையமைப்பதாக கவிஞர் வைரமுத்து தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
கவிஞர் வைரமுத்து தமிழ் திரையுலகில் கவிஞர் கண்ணதாசன், வாலிக்கு அடுத்தபடியாக பெரும்பாலான ரசிகர்களால் தமிழ் திரையுலகில் கொண்டாடப்படுகிறார். மண் மணம் மாறாத கவிகளுக்குச் சொந்தக்காரானஇது ஒரு பொன்மாலைப் பொழுது பாடல் மூலம் கவிஞராக அறிமுகம் ஆனார்.

ரஜினி , அஜீத், விஜய் என பல முன்னணி நடிகர்களுக்கு ஓப்பனிங்க் பாடல்களையும் எழுதி வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றவர். பாரதிராஜா, மணிரத்னம், ஷங்கர் உள்ளிட்ட இயக்குனர்களிடமும், இளையராஜா, ஏ.ஆர். ரகுமான் என முன்னணி இசையமைப்பாளர்களுடனும் பணியாற்றி வருகிறார்.
25 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் இருந்தாலும், இலக்கிய உலகிலும் தனது கவனத்தை செலுத்தி வருகிறார். இவரது கள்ளிக்காட்டு இதிகாசம், மூன்றாம் உலகப்போர் போன்ற நாவல்களும், கவிதைத் தொகுப்புகளும் இன்று வரை இலக்கிய உலகிலும், விற்பனையிலும் தனி இடத்தை பெற்றுள்ளன. அதே நேரத்தில் இளையவர்களுடனும் அடிக்கடி பணியாற்றி வருபவர் வைரமுத்து
தற்போது தனியிசை எனப்படும் ஆல்பம் பாடல்களுக்கு இளைஞர் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. சமீபத்தில் பாடகி தி, தெருக்குரல் அறிவின் கூட்டணியில் வெளியான பாடல் தெறி ஹிட்டானது. அந்த வகையில் ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் இயக்கும் பாடலுக்கான கூட்டணியில் இணைந்துள்ளார் வைரமுத்து.
இதுகுறித்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள கவிஞர் வைரமுத்து, நாட்படு தேறலில் துள்ளிசையில் - ஒரு தொல்லியல் பாடல், உலகத் தரம்வாய்ந்த ஒளிப்பதிவாளர் வண்ண மன்னன் ரவிவர்மன் இயக்குகிறார். எனவும் என் இசைத் தம்பி சத்யா இசை கூட்டுகிறார் ஒலிப்பதிவுக்கூடத்தில் எங்கள் பாட்டணியின் கூட்டணி என பதிவிட்டுள்ளார்.
நாட்படு தேறலில்
— வைரமுத்து (@Vairamuthu) December 14, 2021
துள்ளிசையில் - ஒரு
தொல்லியல் பாடல்
உலகத் தரம்வாய்ந்த
ஒளிப்பதிவாளர்
வண்ண மன்னன் ரவிவர்மன்
இயக்குகிறார்
என் இசைத் தம்பி சத்யா
இசை கூட்டுகிறார்
ஒலிப்பதிவுக்கூடத்தில்
எங்கள் பாட்டணியின் கூட்டணி@dop_ravivarman | @CSathyaOfficial pic.twitter.com/EN79Z57bMJ
தொல்லியல் பாடல் என அவர் குறிப்பிட்டுள்ளதால் தமிழர் தமிழர் பாரம்பரியம் சார்ந்த படைப்பாக இது இருக்குமெனவும், இதற்காக தாங்கள் காத்துக்கிடப்பதாக ஏராளமான ட்விட்டரில் கமெண்ட் செய்து வருகின்றனர்.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications