2023 ரத்த கசிவோடு பிறக்கும்! கஜானாவைப் பிச்சைப் பாத்திரம் ஆக்கிவிடும்! எச்சரிக்கை விடுத்த வைரமுத்து!
சென்னை : ரஷ்யா உக்ரைன் போரை உலக நாடுகள் உடனே நிறுத்த வேண்டும் எனவும், இந்தப் போர்
உலக நாடுகளின் கஜானாவைப் பிச்சைப் பாத்திரம் ஆக்கிவிடும் என கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ரஷ்யா உக்ரைன் போர் தொடங்கி கிட்டத்தட்ட 7 மாதங்கள் ஆகியுள்ள நிலையில் உக்ரைன் நாட்டின் பல பகுதிகள் தொடர்ந்து ரஷ்ய ராணுவத்தினரின் குண்டுவீச்சுக்கு ஆளாகி வருகின்றன.இதனால் லட்சக்கணக்கான மக்கள் நாட்டை வீட்டு வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
இந்நிலையில் தற்போதைய போர் நிறுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இல்லையென்றே உலக நாடுகள் கவலை தெரிவித்துள்ளன. இதனை உறுதிப்படுத்தும் விதத்திலேயே ரஷ்ய ராணுவத்தின் தாக்குதல்களும் நாளுக்கு நாள் தீவிரமாக வருகிறது.

உக்ரைன் போர்
போர் விதிமுறைகளை மீறி ரஷ்யா பள்ளிகள் வழிபாட்டுத்தளங்கள் மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்தி வருவதாக உக்ரைன் குற்றம் சாட்டி வரும் நிலையில் போர் விதிமுறைகள் மீறப்படவில்லை என ரஷ்யா மறுத்து வருகிறது. உக்ரைனுக்கு அடுத்து உலக நாடுகள் நேசக்கரம் நீட்டி வரும் நிலையில், அமெரிக்கா பலமுறை பொருளாதார ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் மில்லியன் டாலர் கணக்கில் உதவி வருகிறது.

போர் நிறுத்தம்
அதே நேரத்தில் போரை நிறுத்த வேண்டுமென போப் ஆண்டவர் பிரான்சிஸ் உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்கள், பிரபலங்கள் பலரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் உக்ரைன் சரணடையும் வரை போர் நிறுத்தத்திற்கு வாய்ப்பில்லை என ரஷ்யா உறுதியாக தெரிவித்துள்ளது. நாளுக்கு நாள் போரின் கோர தாண்டவத்தால் பாதிக்கப்படுவதும் கவலை அளிப்பதாக உள்ளது.

கவிஞர் வைரமுத்து
இந்நிலையில் ரஷ்யா உக்ரைன் போரை உலக நாடுகள் உடனே நிறுத்த வேண்டும் எனவும், இந்தப் போர்
உலக நாடுகளின் கஜானாவைப் பிச்சைப் பாத்திரம் ஆக்கிவிடும் என கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கவிஞர் வைரமுத்து," ரஷ்யா உக்ரைன் போரை உலக நாடுகள் உடனே நிறுத்த வேண்டும்"

ரத்தக் கசிவோடு பிறக்கும்
கடல் தட்டும் கண்டத் தட்டும் முட்டிக் கொள்வதால் உண்டாகும் சுனாமி உலகக் கரைகளையெல்லாம் உலுக்குவது மாதிரி இந்தப் போர் உலக நாடுகளின் கஜானாவைப் பிச்சைப் பாத்திரம் ஆக்கிவிடும். 2023 ரத்தக் கசிவோடு பிறக்கும் போரை நிறுத்துங்கள்" என பதிவிட்டு இருக்கிறார். இந்த பதிவை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
உச்சநீதிமன்ற நீதிபதியாக மோகனா நியமனம்! தமிழகத்தின் கீர்த்திக்கு இன்னொரு கிரீடம்! வைரமுத்து புகழாரம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications