நீட் தேர்வுதாங்க பெஸ்ட்!.. இப்ப பாருங்க தமிழக மாணவர்கள் எய்ம்ஸ், ஜிப்மரில்கூட படிக்கலாமே.. வானதி
சென்னை: எய்ம்ஸ், ஜிப்மர் மருத்துவக் கல்லூரிகளில் பயில நீட் தேர்வு போதும் என பாஜக எம்எல்ஏ வானதி ஸ்ரீனிவாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வுக்கு தமிழகம், புதுவையில் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. மேலும் இந்த நீட் தேர்வால் தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் வடமாநில மாணவர்கள் கல்வி பயிலும் சூழல் நிலவுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும் நீட் தேர்வுக்கு பயிற்சி என்ற பெயரில் பல நிறுவனங்கள் பயிற்சி வகுப்புகளை நடத்தி கொள்ளை பணம் சம்பாதிப்பதாகவும் இருக்கப்பட்ட மாணவர்கள் பயிற்சி வகுப்பில் சேர்ந்து நீட் தேர்வில் தேர்ச்சி பெறுகிறார்கள், இல்லாதபட்ட மாணவர்கள் என்ன செய்வார்கள் என்பதே கல்வியாளர்கள் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

சிபிஎஸ்இ
தேசிய அளவில் நீட் தேர்வு நடத்தப்படுவதால் சிபிஎஸ்இயால் தயார் செய்யப்படும் கேள்வித்தாள்களை மாநில பாடப்பிரிவில் படித்த மாணவர்களும் எதிர்கொள்ள நேரிடுவது நீட் தேர்வை மாணவர்கள் எதிர்க்க காரணமாக உள்ளன. இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் இன்றைய தினம் திமுக அரசு நீட் விலக்கு மசோதா தாக்கல் செய்தது.

மசோதா தாக்கல்
இந்த மசோதா தாக்கல் செய்வதற்கு முன்னதாக அதிமுக வெளிநடப்பு செய்தது. இந்த நிலையில் இந்த மசோதா குறித்து வானதி ஸ்ரீனிவாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் நீட் தேர்வு இந்தியா முழுமைக்கும் உள்ள அகில இந்திய அளவிலான இடம் மட்டுமல்லாமல் எய்ம்ஸ், ஜிப்மர் போன்ற மத்திய அரசின் மருத்துவ பல்கலைக்கழகங்களுக்கும் இந்த தேர்வு முறை பொருந்தும்.

எச் ராஜா
இதன் மூலம் தமிழக மாணவர்களுக்கு மத்திய மருத்துவக் கல்லூரிகளில் தனியாக தேர்வு எழுதாமல் இடம்பெற முடியும் என தனது ட்விட்டரில் வானதி தெரிவித்துள்ளார். எய்ம்ஸ் மருத்துவமனை, ஜிப்மர் ஆகிய பல்கலைக்கழகங்களில் மருத்துவம் பயில விரும்பினால் அங்கு நடத்தப்படும் நுழைவுத் தேர்வை நீட்டுக்கு முன்னர் மாணவர்கள் எதிர்கொண்டனர். தற்போது அந்த நுழைவு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு நீட் மட்டும் இருந்தால் போதும் என மத்திய அரசு அறிவித்ததை வானதி சுட்டிக் காட்டியுள்ளார். அது போல் நீட் தேர்வு விலக்கு மசோதாவை தாக்கல் செய்த நிலையில் நேற்றைய தினம் பாஜக மூத்த தலைவர் எச் ராஜா இந்த மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
Recommended Video

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு
அவர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில் நீட் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்பது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு. நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்துடன் நிறைவேற்றப்பட்ட சட்டத்துக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் போடுவது பிரிவினைவாதச் செயல். நீட் தேர்வு நடப்பதை எந்த ஒரு சக்தியாலும தடுக்கவே முடியாது என்றார் எச் ராஜா.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications