யாருக்கும் பயந்தவ நான் இல்ல.. ஒரு பிக்பாஸ்ல ஜெயிக்கிறதுக்கே இப்படியா?.. விசிகவை விளாசும் வனிதா
சென்னை: விக்ரமனுக்கு எதிராக பேசியதால் நடிகை வனிதா விஜயகுமாருக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மிரட்டல் விடுத்த வண்ணம் உள்ளனர். ஆனால் வனிதாவோ இதற்கெல்லாம் பயந்தவ நானில்லை என கூறியுள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி தொடங்கியது. அமுதவாணன், அசீம், நந்தினி, ஷிவின், விக்ரமன் ஆகியோர் இறுதியாக இருக்கிறார்கள். இவர்களில் ஒரு வின்னரும் ஒரு ரன்னரும் தேர்வு செய்யப்படுவார்கள்.
இவர்கள் 5 பேரில் நந்தினி மட்டுமே நிகழ்ச்சி தொடங்கிய 7ஆவது நாளில் வைல்ட் கார்டு என்ட்ரியாக பிக்பாஸ் வந்துள்ளார். மொத்தம் 105 நாட்கள் பிக்பாஸில் இருக்க வேண்டும்.

பிக்பாஸ் வீட்டில்
இவர்கள் மக்கள் வாக்களிப்புடன் பிக்பாஸ் வீட்டில் கடைசி வரை யார் இருக்கிறார்களோ அவர்களே வெற்றியாளர்கள் என அறிவிக்கப்படுவர். இந்த போட்டியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் செய்தித் தொடர்பாளர் விக்ரமன் பங்கேற்றுள்ளார். இவர் பிக்பாஸ் வீட்டில் பொறுமையாக விளையாடி வருகிறார். அறம் வெல்லும் என கூறி விளையாடுகிறார்.

இறுதி போட்டி
இந்த நிகழ்ச்சியின் இறுதி போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இந்த போட்டியில் 5 பேரில் யார் வெற்றி கோப்பையை பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இந்த 5 பேரில் விக்ரமனுக்கும் அசீமுக்கும்தான் கடுமையான போட்டி உள்ளது. ஆரம்பத்திலிருந்தே விக்ரமனை நினைத்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பெருமிதம் அடைந்துள்ளார்.

தமிழ்நாடு பெயர்
இந்த நிலையில் நேற்று முன் தினம் தமிழ்நாடு என்ற பெயர் எப்படி உருவானது என்பது குறித்து விக்ரமன் பிக்பாஸ் வீட்டில் விளக்கியிருந்தார். திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: தம்பி விக்ரமனுக்கு வாக்களித்து அவரை வெற்றியடைய செய்வோம்.

வனிதா விஜயகுமார் கண்டனம்
அவருக்கு வாக்களிப்போம். அறம் வெல்லும் என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவை நடிகை வனிதா விஜயகுமார் கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து வனிதா விஜயகுமார் கூறுகையில், இதற்கு என்ன சொல்கிறீர்கள். இதெல்லாம் அரசியல் தந்திரம். மரியாதைக்குரிய ஒரு அரசியல் கட்சித் தலைவரும் இன்னாள் எம்பியுமான ஒருவர் ரியாலிட்டி ஷோவில் குறிப்பிட்ட போட்டியாளருக்கு வாக்களிக்குமாறு தனது தொண்டர்களிடம் எப்படி கேட்க முடியும் என வனிதா விஜயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
வனிதாவின் இந்த ட்வீட்டிற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் சமூகவலைதளப் பக்கத்தில் அவருக்கு மிரட்டல் விடுத்து வருகிறார்கள். இதுகுறித்து வனிதா விஜயகுமார் கூறுகையில், நான் பேட்டி அளித்த யூடியூப் சேனலுக்கு போன் மூலம் மிரட்டல் விடுத்தும் என்னை எச்சரிக்கவும் சிலர் முயல்கிறார்கள். யாருக்கும் எதுக்கும் பயந்தவ நான் இல்ல. உங்கள் அரசியஸல் புத்தி என்னனு காலம் காலமாக பார்த்திருக்கோம். நேர்மையா மக்களுக்கு நல்லது பண்ணி முன்னேற பாருங்க. உங்கள் அரசியல் எல்லாம் என்கிட்ட வெச்சிக்காதீங்க.

பிக்பாஸ் ஜெயிக்கிறதுக்கு இப்படியா
ஒரு பிக்பாஸ் ஜெயிக்கிறதுக்கே இவ்வளவு அராஜகம்னா, இவங்கள மாதிரி அரசியல் கட்சிகள் தேர்தல் வரும் போது என்னென்ன செய்வாங்க. நீங்க உங்க அரசியல் வேலையை பாருங்க. நான் உங்கள தொந்தரவு பண்ணல. நீங்களும் எங்கள தொந்தரவு செய்யாதீங்க என வனிதா விஜயகுமார் தனது ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
-
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம்











Click it and Unblock the Notifications