விசிக புறக்கணிப்பு வஞ்சனை! கூட்டணியில் வேண்டாமென சொல்ல 99% பேர் இருப்பாங்க! உருகி பேசிய திருமாவளவன்!
சென்னை : விடுதலை சிறுத்தைகள் கட்சி மீது புறக்கணிப்பு வஞ்சனை இயல்பாகவே இருக்கும் எனவும் கூட்டணியில் கூட திருமாவளவன் வேண்டாம் என சொல்லவே 99 சதவீதம் பேர் இருப்பார்கள் என விசிக தலைவர் திருமாவளவன் கூறியிருப்பது சமூக வலைதளங்களில் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இடம் பெற்றிருக்கிறது. அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்பி ஆகவும், இன்னும் சிலர் எம்பி, எம்.எல்.ஏ.க்களாக இருக்கின்றனர்.
சட்டமன்ற தேர்தலில் வென்ற நிலையில், வருகின்ற நாடாளுமன்றத் தேர்தல் வரை இந்த கூட்டணி தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தான் கூட்டணியில் தன்னை வேண்டாம் என சொல்வார்கள் என திருமாவளவன் பேசியிருக்கிறார்.

திருமாவளவன்
விடுதலை சிறுத்தைகள் கட்சி மீது புறக்கணிப்பு வஞ்சனை இயல்பாகவே இருக்கும் எனவும் கூட்டணியில் கூட திருமாவளவன் வேண்டாம் என சொல்லவே 99 சதவீதம் பேர் இருப்பார்கள் என விசிக தலைவர் திருமாவளவன் கூறியிருப்பது சமூக வலைதளங்களில் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. சென்னை அசோக் நகரில் உள்ள அம்பேத்கர் திடலில் விசிக தலைவர் திருமாவளவன் பற்றிய புலவர் பி.சிவலிங்கம் இயற்றிய 'திருமாவளவர் பிள்ளைத்தமிழ்', கவிஞர் இளமாறன் இயற்றிய 'நீதியின் குரல்' ஆகிய நூல்கள் வெளியீட்டு விழா அம்பேத்கர் திடலில் நடைபெற்றது.

அவதூறு அரசியல்
விசிக தலைவர் திருமாவளவன் முன்னிலையில் இந்த நூல்களை பேரா.அரங்கமல்லிகா வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் பேசிய திருமாவளவன்," விடுதலை சிறுத்தைகளின் தொடக்க காலத்தில் பின்புலம் பரிந்துரை இல்லாமல் ஊடக பலம் இல்லாமல் உழைப்பு பற்றி சொல்ல ஆட்களை கிடையாது. யாரோ எங்கோ செய்யும் சில சிறிய தவறுகளை கூட விடுதலை சிறுத்தைகள் கட்சி மீது முடிச்சு போட்டு நான் தான் தலைவர் என அவதூறு அரசியல் பரப்புவார்கள்.

99 சதவீதம் பேர்
அவதூறு பரப்பும் மோசமான களம் தான் அரசியல் களம். அரசியல் என்பது அதிகாரத்தோடு தொடர்புடையதால் 360 டிகிரியிலும் பகை உண்டாகிறது. எவ்வித பின்புலமும் இல்லாமல் ஒருவன் கிளம்பினால் எவ்வளவு அவதூறு வரும் என எண்ணிப் பார்க்க வேண்டும். கூட்டணியில் கூட திருமாவளவன் வேண்டாம் என சொல்ல 99 சதவீதம் பேர் இருப்பார்கள். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மீது புறக்கணிப்பு வஞ்சனை என்பது இயல்பாகவே இருக்கும்.

சமூக நீதி
தலைவர்களை உருவாக்குவதே என்னுடைய உழைப்பு. கண்ணை மூடிக்கொண்டு என் தலைமையை ஏற்றுக் கொள்ளாதீர்கள். கருத்தியல் புரிதலோடு பின்னால் வாருங்கள் ஜாதியை பார்த்து என்னை தலைவராக ஏற்றுக் கொள்ளாதீர்கள்." என்றார், முன்னதாக மற்றொரு நிகழ்ச்சியில் பேசியிருந்த அவர்," இந்தியாவில் இட ஒதுக்கீடு இல்லை என்றால் தலித் பிரிவை சேர்ந்த எவரும் எம்எல்ஏ எம்பி ஆக முடியாது. சாதி சமயம் வேண்டாம் என்ற வழியில் பயணிப்பது தான் முற்போக்கு. சமூக நீதி மற்றும் சமத்துவம் பயணிக்க வேண்டும்" என பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குச் சென்ற திருமாவளவன்.. காரணம் இதுதானாம்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications