அதே சால்வை, அதே கண்ணாடி.. அப்படியே எம்ஜிஆர் போல.. அட திருமாவளவனை பாருங்க!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விசிக தலைவர் திருமாவளவன் அதிமுகவின் நிறுவனர் எம்ஜிஆர் லுக்கிற்கு மாறி இருப்பது அக்கட்சியினர் இடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதே துண்டு, அதே கண்ணாடி, அதே வாட்ச் என்று அத்தனையும் அப்படியே எம்ஜிஆரை போல் மாறியுள்ள திருமாவளவனின் புகைப்படங்கள் ட்ரெண்டாகி வருகிறது.

2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி அமைந்துள்ளது. இதனால் திமுக கூட்டணியில் உள்ள விசிக, மதிமுக, சிபிஐ, சிபிஎம், ஐயுஎம்எல், கொமதேக உள்ளிட்ட கட்சிகள் அப்படியே பயணிக்கும் என்று பார்க்கப்படுகிறது. இதனால் அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, தேமுதிக, தமாகா உள்ளிட்ட கட்சிகள் இடம்பெறலாம்.

VCK Leader Thirumavalavan photos released in MGR getup is trending in social media

இதனால் மீண்டும் 2021 சட்டமன்றத் தேர்தல் கூட்டணியுடன் திமுக மற்றும் அதிமுக தேர்தலை சந்திக்க உள்ளதாக பார்க்கப்படுகிறது. இதனிடையே புதிதாக கட்சி தொடங்கியுள்ள விஜய், எந்த கட்சியுடன் கூட்டணி அமைப்பார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல் விசிக தலைவர் திருமாவளவனுடன் கூட்டணி அமைக்க விஜய் ஆர்வமாக இருந்தார். சில நிகழ்ச்சிகளில் அவர் இதனை வெளிப்படையாகவும் கூறி இருந்தார்.

ஆனால் திருமாவளவன், விஜய் உடன் கூட்டணி இல்லை என்று தெளிவான முடிவை எடுத்து அறிவித்தார். அதேபோல் அதிமுக உள்ளிட்ட கட்சிகளும் திருமாவளவனை கூட்டணிக்கு அழைத்து வந்தன. ஏற்கனவே 2006ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் விசிக போட்டியிட்டது. அப்போது தனி சின்னத்தில் போட்டியிட்டு காட்டுமன்னார்கோவில் மற்றும் மங்களூரில் மட்டும் விசிக வென்றது.

இதன்பின் உள்ளாட்சித் தேர்தலில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக திருமாவளவன் அதிமுக கூட்டணியில் இருந்து வெளியில் வந்தார். அதிமுகவில் இருந்து வெளியில் வந்த போது, முன்னாள் முதலமைச்சர்களான எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் குறித்து தெளிவான விமர்சனங்களை முன் வைத்து வந்துள்ளார்.

எந்தவொரு இடங்களிலும் எம்ஜிஆர், ஜெயலலிதாவை மோசமாக விமர்சித்ததில்லை. இந்த நிலையில் திருமாவளவன் எம்ஜிஆர் வேடமிட்டு எடுத்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது. இதற்கு பின் என்ன நடந்தது என்று விசாரித்த போது, எம்ஜிஆரை போல் வேடமணியும் அமரன் எம்ஜிஆர், மரியாதை நிமித்தமாக திருமாவளவனை சந்தித்துள்ளார்.

அப்போது திருமாவளவனுக்கு எம்ஜிஆர் போல் தொப்பு, சால்வை, கண்ணாடி, கர்சிப், வாட்ச், பேனா ஆகியவற்றை அணிவித்துள்ளார். அப்போது திருமாவளவன் அப்படியே எம்ஜிஆர் லுக்கில் இருந்ததை புகைப்படங்களாக எடுத்துள்ளனர். இதனை சோசியல் மீடியாவில் விசிக ஐடி விங் வெளியிட்டுள்ளது. இது விசிகவினர் இடையே ட்ரெண்டாகி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+