துணை ராணுவ வீரர் தேச துரோகி! அண்ணாமலை விளம்பர அரசியல்.. ஆளுநருக்கும் அதிகாரமில்லை! வன்னியரசு சுளீர்!
சென்னை : விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை விமர்சித்த துணை ராணுவ வீரர் தேச துரோகி எனவும், அவருக்கு பாதுகாப்பு கேட்டு ஆளுநரை பாஜக தலைவர் அண்ணாமலை சந்தித்து இருப்பது இழிவான விளம்பரத்துக்கு என விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த வன்னியரசு கடுமையாக விமர்சித்துள்ளார்.
சில தினங்களுக்கு முன்பு கடலூர் மாவட்டத்தை சார்ந்த ராணுவ வீரர் ஒருவர் திருமாவளவனை கண்டித்து வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
அந்த வீடியோவில் தமிழ்நாட்டில் தனியாக நின்று ஒரு வார்டில் கூட வெற்றி பெற முடியாத திருமாவளவன் தனி தமிழ்நாடு கேட்கிறார்..? கருத்து சுதந்திரம் என்ற பெயரில் எது வேண்டுமானாலும் பேசுவீர்களா "நீ ஆம்பளையா இருந்தா ஒரு நாள் வீதியில் நின்று தனி தமிழ்நாடு வேண்டும் என்று போராடிப்பார், உன் வாயாலயே வந்தே மாதரம் என்று சொல்ல வைப்போம்"என்று கூறியிருந்தார்.

துணை ராணுவ வீரர்
அதனைத் தொடர்ந்து கடலூர் மாவட்டம், லத்தூர் ஒன்றிய செயலாளர் மணிமாறன உள்ளிட்ட சில விசிக நிர்வாகிகள் அந்த ராணுவ வீரருக்கு போன் செய்து எப்படி எங்கள் தலைவரை மரியாதை குறைவாக பேசலாம்? மன்னிப்பு கேட்க வேண்டும் என பேசியுள்ளனர். அதற்கு பதில் அளித்த அந்த ராணுவ வீரர், எல்லையில் பாகிஸ்தான்காரன் துப்பாக்கி, பீரங்கி எல்லாம் தூக்கி காட்டினாலே பயப்பட மாட்டோம் நீங்கள் போன் போட்டு மிரட்டினால் நான் என்ன மிரண்டு விடுவேனா..? என்று கூற உடனே ஏடாகூட ஆபாச வார்த்தைகளை சொல்லி அவர் குடும்பத்தை திட்டி தீர்த்த விசிக நிர்வாகிகள், கோவத்தின் உச்சிக்கு சென்று நீ... டெல்லியில் தான் இருப்ப... ஆனா உங்க அப்பா,அம்மா, தம்பி எல்லாம் இங்கதான் இருக்காங்க..? என்று மிரட்டல் விடுத்துள்ளனர்.

அண்ணாமலை
அந்த ஆடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அந்த ராணுவ வீரருக்கு, அவரது குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாக பலரும் சமூக வலைதளங்களில் கடும் கண்டனத்தை பதிவு செய்து வந்தனர். இந்த நிலையில் அந்த ராணுவ வீரரை தொலைபேசியில் அழைத்து பேசி அவருக்கு ஆறுதல் கூறிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அந்த ராணுவ வீரருக்கு தேவையான உதவிகளை செய்ய தமிழக பாஜக தயாராக இருப்பதாகவும் தைரியமாக பணியாற்றும் படியும் தொலைபேசி மூலமாக பேசியுள்ளார்.

ஆளுநர் ஆர்.என்.ரவி
மேலும் அந்த ராணுவ வீரரிடம் தொலைபேசி வாயிலாக மிரட்டிய கடலூர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய செயலாளர் மணிமாறன் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த விவாகரம் தொடர்பாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியையும் அண்ணாமலை சந்தித்து பேசியதாகக் கூறியிருந்தார். இந்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை விமர்சித்த துணை ராணுவ வீரர் தேச துரோகி எனவும், அவருக்கு பாதுகாப்பு கேட்டு ஆளுநரை பாஜக தலைவர் அண்ணாமலை சந்தித்து இருப்பது இழிவான விளம்பரத்துக்கு என விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த வன்னியரசு கடுமையாக விமர்சித்துள்ளார்

வன்னியரசு
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள வன்னியரசு,"நீங்கள் சொல்லும் நபர் இராணுவ வீரரல்ல:
CRPF (central Reserve police force) எனப்படும் துணை ராணுவத்தை சார்ந்தவன்.நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவன் அவர்களை விமர்சித்திருப்பது ராணுவ விதிகளுக்கு எதிரானதாகும்.அதுவும் அவன் இருக்கும் இடத்தின் லொகேசனை பகிர்ந்திருப்பது தேச துரோகம். அப்படிப்பட்ட தேசத்துரோகிக்கு பாதுகாப்பு கேட்டு ஆளுனரை சந்தித்திருப்பது இழிவான விளம்பரத்துக்காகவே! இதில் ஆளுனருக்கு என்ன அதிகாரம் இருக்கிறது?அவரால் என்ன செய்ய முடியும்?" என கடுமையாக விமர்சித்துள்ளார்.
-
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
சிங்கம் ஒன்று புறப்பட்டதே.. அண்ணாமலைக்கு ஷிப்ட் ஆன ரஜினிகாந்த் ரசிகர்கள்.. தவெக இதை எதிர்பார்க்கல -
அமித்ஷா தரும் அந்த 'பவர்ஃபுல்' புதிய ஆஃபர்.. அண்ணாமலை பச்சை கொடி காட்டுவாரா? இன்று என்ன முடிவு? -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
Annamalai Letter: தமிழக பாஜகவில் ஒதுக்கப்பட்டேன்! 5 பக்க கடிதத்தில் குமுறிய அண்ணாமலை -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை












Click it and Unblock the Notifications