அதிமுக பொதுக்குழுவில் பாதாம் கீர், ஜாங்கிரி.. 5 ஆயிரம் பேருக்கு தடபுடல் விருந்து.. மெனு லிஸ்ட் இதோ!
சென்னை : அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு வந்திருக்கும் பொதுக்குழு உறுப்பினர்கள், முக்கிய நிர்வாகிகள் என சுமார் 5 ஆயிரம் பேருக்கு அறுசுவை விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Recommended Video
ஆனால், அசைவ விருந்து இந்தப் பட்டியலில் இல்லை எனக் கூறப்படுகிறது. இன்று மதியம் சைவ விருந்தே போடப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பொதுக்குழு சைவ விருந்தில் இடம்பெறும் மெனு லிஸ்ட் பற்றிய தகவலும் வெளியாகியுள்ளது. சாதம், வத்தக் குழம்பு தொடங்கி பாதாம் கீர், ஜாங்கிரி வரை இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

பொதுக்குழு
பரபரப்பான சூழலில் அதிமுக பொதுக்குழு கூட்டம் சற்று நேரத்தில் தொடங்கவுள்ளது. அதிமுகவின் பொதுக்குழு உறுப்பினர்கள் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் தனியார் திருமண மண்டபத்தில் திரண்டுள்ளனர். முக்கிய நிர்வாகிகள் மேடையில் அமர்ந்துள்ளனர். ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீசெல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பொதுக்குழு நடைபெறும் இடத்திற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாக வந்துவிட்டனர். தற்போது எடப்பாடி பழனிசாமியும் பொதுக்குழு நடக்கும் அரங்கிற்கு வருகை தந்துள்ளார்.

கூச்சல் குழப்பம்
ஓ.பன்னீர்செல்வம் பொதுக்குழு நடைபெறும் மண்டபத்திற்குள் வருகை தந்தபோது, எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்களான முக்கிய நிர்வாகிகள் எவரும் அவரை வரவேற்கச் செல்லவில்லை. ஓ.பன்னீர்செல்வம் வந்தபோது எடப்பாடி ஆதரவாளர்கள் எழுந்து நின்று ஒற்றைத் தலைமை வேண்டும் என முழக்கத்தை எழுப்பினர். எடப்பாடி பழனிசாமி தரப்பு ஆதரவாளர்களின் முழக்கத்தால் பொதுக்குழு நடைபெறும் அரங்கத்தில் பரபரப்பு நிலவி வருகிறது.

திரண்ட நிர்வாகிகள்
அதிமுக பொதுக்குழுவில் பங்கேற்க 2 ஆயிரத்து 600க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள், முக்கிய நிர்வாகிகள் என கிட்டத்தட்ட 3000 பேர் வந்துள்ளனர். அவர்கள் தவிர, பொதுக்குழு உறுப்பினர் அல்லாத நிர்வாகிகள், தொண்டர்கள் என சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் பகுதியில் திரண்டுள்ளனர்.

ஏற்பாடுகள்
இந்த பொதுக்குழு கூட்டத்திற்கான பல்வேறு ஏற்பாடுகள் திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பெஞ்சமின் தலைமையில் நடைபெற்றுள்ளது. பேனர், கட் அவுட் வரவேற்பு, வாகனங்கள் நிறுத்துமிடம், உணவு, தண்ணீர் பாட்டில் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளையும் அவரது தலைமையிலான அணியினர் ஏற்பாடு செய்துள்ளனர்.

மதிய விருந்து
அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு வந்திருக்கும் பொதுக்குழு உறுப்பினர்கள், முக்கிய நிர்வாகிகள் என சுமார் 5 ஆயிரம் பேருக்கு அறுசுவை விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், அசைவ விருந்து இந்தப் பட்டியலில் இல்லை எனக் கூறப்படுகிறது. சைவ விருந்தே போடப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சைவ விருந்து
பொதுக்குழுவில் மதியம் அளிக்கப்படவிருக்கும் இந்த அறுசுவை விருந்தில் பரிமாறப்பட இருக்கும் சைவ உணவுகளின் மெனு லிஸ்ட் பற்றிய தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, வெள்ளை சாதம், சாம்பார், வத்தக்குழம்பு, ரசம், தயிர்சாதம், வெஜ் புலாவ், உருளைக்கிழங்கு பொறியல், பருப்பு வடை, முட்டை கோஸ் பொறியல், கேரட் பொறியல், அப்பளம், மோர் மிளகாய், ஊறுகாய், பாதாம் கீர், ஜாங்கிரி ஆகியவை பரிமாறப்படும் எனத் தெரிகிறது.

தொண்டர்கள் பேச்சு
ஜெயலலிதா இருக்கும்போது நடத்தப்படும் அதிமுக பொதுக்குழுவில் மதிய உணவாக அசைவ உணவு விருந்து படைக்கப்படும். கட்சியினர் அசந்து போகும் அளவுக்கு சிக்கன், மட்டன், மீன் என்று தடபுடல் விருந்து நடைபெறும். ஆனால், இன்று சைவ உணவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது தொடர்பாக பொதுக்குழு உறுப்பினர்கள் கிசுகிசுத்து வருகின்றனராம்.
-
இனிமே சிங்கப் பாதை தான்..ஆக்ஷனுக்கு ரெடியான அதிமுக! திமிறி எழுந்த எடப்பாடி பழனிசாமி! கையில் லிஸ்ட்! -
ஐசியூவில் அதிமுக.. ஆபரேசனுக்கு தயாராவாரா எடப்பாடி? குறுக்கே ஆம்புலன்ஸோடு விஜய்! பரபர பாலிடிக்ஸ் -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இடைத்தேர்தலில் அதிமுகவை காப்பாற்ற வேறு வழியில்லை.. எடப்பாடி எடுத்த அதிரடி முடிவு -
விஷப் பரிட்சைக்கு தயாரான எடப்பாடி! 5 தொகுதி இடைத் தேர்தல்.. அதிமுகவின் ’மாஸ்டர்’ பிளான் என்ன? -
“ஸ்டாலின் விரும்பும் வரைதான் தவெக ஆட்சி நீடிக்கும்”.. ஒரே போடாக போட்ட அதிமுக முன்னாள் அமைச்சர்! -
இசக்கி சுப்பையா டூ கடம்பூர் ராஜு.. இதுவரை எத்தனை அதிமுக மாஜி அமைச்சர்கள் தவெகவில் ஐக்கியம்! லிஸ்ட் -
இதுக்கு ஒரு எண்டே இல்லையா சாரே! எடப்பாடிக்கு மீண்டும் மீண்டும் தலைவலி! கட்சி தாவ தயாராகும் தலைகள்! -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
இது ட்ரெய்லர் தான்.. அதிமுகவுக்கு தவெக எழுதப்போகும் கிளைமாக்ஸ்.. அருண்ராஜ் அதிரடி -
சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது.. உங்களுடன் நிற்கும் கம்யூனிஸ்ட்டுகள் சொல்றாங்க.. விளாசிய எடப்பாடி!












Click it and Unblock the Notifications