சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

காலாவதியான ஆன்லைன் ரம்மி தடை மசோதா : ஆளுநர் அலட்சியம்.. சந்தேகம் எழுப்பும் வேல்முருகன்!

Google Oneindia Tamil News

சென்னை: ஆன்லைன் ரம்மி தடை மசோதா மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அது காலாவதியாகும் வரை ஆளுநர் அலட்சியம் காட்டியது சந்தேகங்களை எழுப்பியுள்ளது என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஆன்லைன் சூதாட்டத்தில் பணம் இழந்து வாழ்க்கையையும், உயிரையும் இழந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 2019-ம் ஆண்டு, புள்ளி விபரப்படி, தினமும் ஒரு நாளைக்கு லட்சம் பேர் புதிதாக ஆன்லைன் சூதாட்டத்துக்கு அடிமையாகிறார்கள்.

ஆன்லைன் சூதாட்டம் என்பது மிகப் பெருமளவில் இளைஞர்களையும், மாணவர்களையும் அடிமையாக்குவதோடு, அவர்களை தவறு செய்யத் தூண்டுவதோடு, தற்கொலையை நோக்கியும் தள்ளுகிறது.
இதனை புரிந்துக் கொண்ட தமிழ்நாடு அரசு, ஆன்லைன் சூதாட்டத் தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டுகளை முறைப்படுத்தும் சட்ட மசோதா 2022'-ஐ சட்டசபையில் தாக்கல் செய்து, நிறைவேற்றி, ஆளுநர் ஆர்.என்.ரவியின் ஒப்புதலுக்காக கடந்த மாதம் 28ஆம் தேதி, அனுப்பி வைத்தது.

ஆன்லைன் ரம்மி அவசர சட்டம் காலாவதியானது..அமலில் உள்ள பழைய சட்டத்தின்படி நடவடிக்கை..அமைச்சர் ரகுபதி ஆன்லைன் ரம்மி அவசர சட்டம் காலாவதியானது..அமலில் உள்ள பழைய சட்டத்தின்படி நடவடிக்கை..அமைச்சர் ரகுபதி

 ஆளுநர்

ஆளுநர்

இந்த சட்ட மசோதாவுக்கு ஆளுநர் உடனடி ஒப்புதல் தந்து விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரது அலட்சியம் காரணமாக, ஆன்லைன் சூதாட்டத் தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டுகளை முறைப்படுத்தும் சட்ட மசோதா 2022 காலாவதியாகி விட்டது. எதிர்கால இளைஞர், மாணவர் சமுதாய நலனை கவனத்தில் கொள்ளாமல், ஆளுநரின் இத்தகைய போக்கு, ஆன்லைன் சூதாட்ட கார்ப்பரேட் நிறுவனங்களின் இலாபவெறிக்கு துணை போகிறாரோ என்ற சந்தேகங்களை ஏற்படுத்துகிறது.

 பெரும் கார்ப்பரேட்டுகள்

பெரும் கார்ப்பரேட்டுகள்

பெரும் கார்ப்பரேட்டுகளின் அடிமையான மோடி அரசின் கைக்கூலியான ஆளுநர் ஆர்.என்.ரவி, பெரும் நிறுவனங்களின் கையிலிருக்கும் ஆன்லைன் சூதாட்டத்தைத் தானாகத் தடை செய்யும் என்று நாம் எதிர்பார்த்தது தவறு தான். ஆன்லைன் சூதாட்ட விளையாட்டை மட்டுமல்ல, இதனோடு ஆபாச இணையதளங்களின் நவீன பரிணாமத்தையும் இணைத்துப் பார்க்க வேண்டியிருக்கிறது.

ஆன்லைன் ரம்மி

ஆன்லைன் ரம்மி

ஆன்லைன் ரம்மியைப் போல இதிலும் மோசடி கும்பல்களின் கைவரிசையால் பணத்தை இழந்தவர்கள் எத்தனையோ பேர் இருக்கின்றனர். ஆன்லைன் சூதாட்டம் மற்றும் பணம் கட்டி விளையாடும் ஆன்லைன் விளையாட்டுக்களை தடை செய்வதே இன்றைய அவசியத் தேவையாக இருக்கிறது. ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காததால் காலாவதியாகி விட்டது.

இளைஞர்கள்

இளைஞர்கள்

எனவே, தமிழ்நாட்டின் இளைஞர்கள், மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு, எதிர் வரும் சட்டப்பேரவையில், ஆன்லைன் சூதாட்டத்தை தடை விதிக்கும் வகையில், மீண்டும் ஒரு சட்ட மசோதாவை இயற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்க, மாண்புமிகு முதல்வர் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.

English summary
Tamilaga Vazhvurimai Katchi Velmurugan suspects Governor's negligence Online Rummy bill.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X