• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

வேடந்தாங்கல் சரணாலயத்தை பாதுகாக்க முழு செலவு செய்த சீமான்.. முதல் முயற்சியில் வெற்றி பெற்ற கதை

|

சென்னை: வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தை பாதுகாக்கும் வழக்கிற்கான செலவு முழுவதையும் ஏற்று முழு ஒத்துழைப்பு கொடுத்தது சீமான் என பெருமிதம் பொங்க சொல்கிறார் வெண்ணிலா தாயுமானவன்.

  Vedanthangal-க்கு வந்த ஆபத்தை தடுத்து நிறுத்திய Vennila | Oneindia Tamil

  மதுராந்தகம் வட்டம் வேடந்தாங்கலில் உள்ள பறவை சரணாலயத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் தனது தொழிற்சாலையை விரிவாக்கம் செய்ய தாக்கல் செய்யப்பட்ட மனுவை தவுடுபொடியாக்கியது நாம் தமிழர் கட்சி.

  இதற்கான முயற்சிகளை எடுத்து வழக்கு தொடர்ந்தவர் அக்கட்சியின் சுற்றுச்சூழல் துறை மாநில செயலாளர் வெண்ணிலா தாயுமானவன். தனது வழக்கில் வெற்றியும் கண்டார்.

  வேடந்தாங்கல் சரணாலயத்தின் தலைக்கு வந்த ஆபத்தை தலைப்பாகையுடன் நிறுத்திய வெண்ணிலா? யார் இவர்?

  பேட்டி

  பேட்டி

  இயற்கை மீது ஆர்வம் ஏன், சன் ஃபார்மாவை எதிர்த்து வழக்கு போட எண்ணம் வந்தது ஏன் உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு புதிய தலைமுறைக்கு வெண்ணிலா பிரத்யேக பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறுகையில் நமது பல்லுயிர் பெருக்கத்திற்கு பறவைகளுக்குத்தான் முக்கிய பங்குண்டு. காடுகள் உருவாவதற்கும் பறவைகளே காரணமாகும். பழங்களின் விதைகளை சாப்பிட்டு அதன் கழிவுகள் மூலம் விதைகள் முளைத்து காடுகள் உருவானது என்பதுதான் வரலாறு.

  கட்டுப்பாடுகள்

  கட்டுப்பாடுகள்

  பறவைகள் இல்லையென்றால் அந்த இடமே பாலைவனம்தான், வனவிலங்குகள் சரணாலயமோ பறவை சரணாலயமோ அமைந்திருந்தால் அந்த இடத்தைச் சுற்றி வெளி நிறுவனங்கள் வந்துவிடக் கூடாது என்பதற்காக சில கிலோமீட்டர்களை பாதுகாக்கப்பட்ட பகுதியாக வெளிப்புறத்தில் விடுவது சட்ட விதிமுறை. சரணாலயத்தைச் சுற்றி எந்தவித தொந்தரவும் செய்யாமல் இருக்கவே இந்த விதிமுறை. தமிழக அரசும் சன் ஃபார்மா நிறுவனமும் இந்த கட்டுப்பாடுகளை மீறும் விதமாக நடந்து கொள்கின்றன.

  சரணாலயம்

  சரணாலயம்

  கடந்த ஜனவரி மாதம் மத்திய சூழலியல் அமைச்சகத்திடம் வேடந்தாங்கல் பாதுகாக்கப்பட்ட பகுதியை 5 கி.மீ.லிருந்து 3 கிலோ மீட்டராக குறைக்க போகிறோம் என அனுமதி கேட்டிருந்தது தமிழக அரசு. அன்றிலிருந்து இந்திய அளவில் சூழலியல் ஆர்வலர்களும் ஆராய்ச்சியாளர்களும் தமிழக அரசின் இம்முடிவை எதிர்த்து குரல் கொடுத்துக் கொண்டு வருகிறார்கள். மருந்து கம்பெனி நீண்ட காலமாக சரணாலயத்தின் அருகிலேயே செயல்பட்டு வருகிறது. அதன் எல்லை விரிவாக்கத்திற்கு கடந்த மே மாதம் தேசிய வனவிலங்கு வாரியத்திடம் அனுமதி கோரினார்கள்.

  வனத்துறை

  வனத்துறை

  அந்த எல்லை விரிவாக்கம் சரணாலயத்தின் பாதுகாக்கப்பட்ட பகுதியில்தான் வருகிறது. இதனை எதிர்த்து முதலில் கடந்த ஜூன் மாதம் வனத்துறை, சூழலியல் துறை உள்பட 4 துறைகளுக்கு நாங்கள் புகார் அளித்தோம். ஆனால் அரசு தரப்பில் பதில் அளிக்கவில்லை. இதனால் ரிட் மனு தாக்கல் செய்தோம். அந்த ரிட் மனுவை நீதிமன்றம் எடுத்துக் கொண்டுதான் தற்போது தீர்ப்பு வழங்கியுள்ளது. நான் எங்கள் கட்சி சார்பில் கிட்டத்தட்ட 3 ஆண்டுகளாக சூழலியல் சார்ந்த பணிகளை செய்து கொண்டு வருகிறேன். அதில் வேடந்தாங்கல் போராட்டம்தான் இந்திய அளவில் சூழலியல் ஆர்வலர்களின் கவனத்தை ஈர்த்த பிரச்சினையாகும். வேடந்தாங்கல் நம் தமிழ் மண்ணின் பெருமை. முதல் அடி நமதாகத்தான் இருக்க வேண்டும் என்றுதான் இந்த பிரச்சினையை எடுத்தோம்.

  மருந்து கம்பெனி

  மருந்து கம்பெனி

  சரணாயலத்தை காரணம் காட்டி வேடந்தாங்கலை சுற்றியுள்ள பகுதிகளுக்கு சாலை பணிகளை அமைப்பதற்கு தமிழக அரசு மறுத்துள்ளது. அப்படியிருக்கும் போது பாதுகாக்கப்பட்ட பகுதியை 5 கி.மீ. லிருந்து 3 கிலோ மீட்டராக குறைக்கிறோம் என கூறுவதை மட்டும் எப்படி ஏற்க முடியும்? ஜனவரியில் தமிழக அரசு சொல்லிய போது எங்களுக்கு பெரிதாகத் தெரியவில்லை. ஆனால் மருந்து கம்பெனியும் அனுமதி கோரியபோதுதான் புரிந்தது. இருவரும் திட்டமிட்டே அனுமதி கோரியுள்ளார்கள். இன்று 2 கி.மீ.ரை குறைப்பவர்கள் நாளை மீதமுள்ள 3 கிலோ மீட்டரையும் கையில் எடுக்க மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்?

  சரணாலயம்

  சரணாலயம்

  நாங்கள் போட்ட வழக்கு சன் ஃபார்மா நிறுவனத்தின் எல்லை விரிவாக்கத்தை எதிர்த்து தானே தவிர தமிழக அரசு சரணாலயத்தை குறைப்பது குறித்தது அல்ல. ஆனால் சம்பந்தமே இல்லாமல் மாநில அரசு சார்பில் வாதாடிய வழக்கறிஞர் பாதுகாக்கப்பட்ட இடத்தை குறைக்க முடிவு செய்துள்ளதாக கூறினார். இந்த பதிலை அங்கு வந்து சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. பல சூழலியல் ஆர்வலர்கள் வேடந்தாங்கலுக்குச் சென்று அங்குள்ள நீரையும் காற்றையும் ஆய்வு செய்து வருகிறார்கள். அந்த நீரில் 4 வகையான ரசாயனங்கள் கலந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இவை எல்லாமே அந்த சரணாலயத்தை சுற்றியுள்ள 7 நிறுவனங்களின் கழிவுகள்தான்.

  சரணாலயம்

  சரணாலயம்

  இதனால் பறவைகளின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. பறவைகள் வருவதற்கு செடி, மரம், கொடி ஆகியவை வளர்த்துக் கொண்டே வர வேண்டும். ஆனால் அரசு அப்படி எதையும் செய்யவில்லை. சரணாலயத்தில் பறவைகள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுக் கொண்டே வருகிறது. ஏற்கெனவே நிலைமை இப்படியிருக்கும் போது சன் ஃபார்மா நிறுவனத்திற்கு 2 கிலோ மீட்டரை கொடுத்துவிட்டால் பறவைகளுக்கு பேராபத்தாக முடியும். அரசின் இந்த முடிவை எதிர்த்து சட்டப் போராட்டமும் மக்கள் போராட்டமும் எடுக்கத் திட்டமிட்டுள்ளோம். கடுமையாக எதிர்ப்போம். நாம் தமிழர் சுற்றுச்சூழல் பாசறை இதனை வேடிக்கை பார்க்காது.

  இணையத்தில் வழக்கு

  இணையத்தில் வழக்கு

  மருந்து கம்பெனி சார்பில் எங்களுக்கு எந்தவித மிரட்டல்களும் வரவில்லை. தமிழக அரசு சார்பிலும் இதுவரை எங்களிடம் பேசவில்லை. வழக்குகளை இணைய வழியாகத்தான் நீதிமன்றம் விசாரிக்கிறது என்பதால் இந்த பிரச்சினை குறித்து தெரியவில்லை. ஏற்கெனவே இரண்டு வழக்குகள் அரசின் எல்லை விரிவாக்கத்திற்கு எதிராக போடப்பட்டுள்ளது. ஆனால் அவை பசுமைத் தீர்ப்பாயத்தில் இருப்பதால் எதுவும் செய்ய முடியாது என நீதிமன்றம் கூறிவிட்டது. நாங்கள்தான் மருந்து கம்பெனியை எதிர்த்து பொது நல வழக்குப் போட்டோம்.

  வாய்க் கூட திறக்கவில்லை

  வாய்க் கூட திறக்கவில்லை

  இயற்கை வளத்தை பாதுகாக்க எங்களுக்கு கட்சி சார்பில் முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டது. எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. நம் மண்ணின் பெருமையை நாம்தான் காக்க வேண்டும். நான் செலவு செய்கிறேன். நீங்கள் சட்டரீதியாக வெற்றி பெறுங்கள் என முழு ஆதரவை கொடுத்து ஊக்கப்படுதினார் சீமான். வேடந்தாங்கல் பிரச்சினையை தமிழகத்தில் முதல்முதலில் கையில் எடுத்தது எங்கள் கட்சிதான். எந்த எதிர்க்கட்சிகளும் இப்பிரச்சினைகளுக்கு வாய் திறக்கவே இல்லை. திருமாவளவன், வேல்முருகன் உள்ளிட்டோர் மக்கள் போராட்டங்களை முன்னெடுக்கும் போது நாங்களும் சேர்ந்து கொள்கிறோம். ஆனால் அவர்கள் இப்பிரச்சினைக்கு வாய்க் கூட திறக்கவில்லை. இங்கு இப்படி நடப்பது தெரியுமா என அவர்களை எழுப்பித்தான் கேட்க வேண்டும் என வெண்ணிலா தெரிவித்தார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

   
   
   
  English summary
  Vennila from NTK says about how she won in the Vedanthangal Birds Sanctuary?
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X