அக்டோபர் 25 முதல் 3 நாட்களுக்கு மழை அடி வெளுக்கப்போகுது கவனம் மக்களே
அக்டோபர் 25ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரைக்கும் தமிழ்நாட்டில் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை வரும் 26ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் திங்கட்கிழமை முதல் புதன்கிழமை வரை 3 நாட்களுக்கு டெல்டா மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் தென்மேற்குப் பருவமழை விடைபெற்று வடகிழக்குப் பருவமழை தொடங்க உள்ளது. பல மாவட்டங்களில் தென்மேற்குப் பருவமழை இயல்பை விட அதிகமான அளவில் பெய்துள்ளதால் அணைகள் நிரம்பி வழிகின்றன. கடந்த 24 மணி நேரத்தில் ஈரோடு பெருந்துறையில் 9 செமீ அளவிற்கு மழை பதிவாகியுள்ளது.

திருவண்ணாமலையில் 6 செமீ அளவிற்கு மழை பதிவாகியுள்ளது. எடப்பாடி, அன்னூர், முசிறி, பவானி, போளூர், சங்கராபுரம், ராசிபுரத்தில் 4 செமீ மழை பதிவாகியுள்ளது. குமாரபாளையம், கொடைக்கானல், ஆத்தூர், மேட்டூர், நாகப்பட்டினம், ராமநாதபுரம், சாத்தூர், மன்னார்குடி, கமுதியில் தலா 1 செமீ மழை பதிவாகியுள்ளது.
இந்த நிலையில் லட்சத்தீவு பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் இன்று
வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, ஈரோடு, சேலம், தருமபுரி, திருச்சிராப்பள்ளி, கரூர், நாமக்கல் மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்யும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
நாளைய தினம் சேலம், மதுரை, ஈரோடு,கிருஷ்ணகிரி, வேலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
25ஆம் தேதி புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. ராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, திருச்சி, விழுப்புரம், கடலூர், செங்கல்பட்டு, விழுப்புரம், மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்காலிலும் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
26 மற்றும் 27ஆம் தேதிகளில் மன்னார்வளைகுடா, தமிழக கடலோர பகுதிகளிலும் தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளிலும் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும். இன்றும் நாளையும் கேரள கடலோர பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் அவ்வப்போது 60 கிலோமீட்டர் வேகத்திலும் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இந்த கடலோர பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48மணி நேரத்திற்கு நகரின் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைபெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்இந்தியாவில் தென்மேற்குப்பருவமழை விலகி வரும் 26ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
26 மற்றும் 27ஆம் தேதிகளில் மன்னார்வளைகுடா, தமிழக கடலோர பகுதிகளிலும் தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளிலும் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும். இன்றும் நாளையும் கேரளா கடலோர பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் அவ்வப்போது 60 கிலோமீட்டர் வேகத்திலும் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இந்த கடலோர பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications