தமிழக கலாசாரமாக இருந்தாலும்! ஆரத்திக்கு பணம் கொடுத்ததாக பரவிய வீடியோ.. பாஜக அண்ணாமலை விளக்கம்
சென்னை: அன்பு மற்றும் மரியாதையின் அடையாளமாக, ஆரத்தி எடுப்பவர்களுக்கு வெகுமதி அளிப்பது நமது தமிழகக் கலாச்சாரத்தில் உள்ளது. தேர்தல் நேரத்தில் மட்டும் இதனை நாங்கள் கடைப்பிடிப்பதில்லை எனவும் தற்போது பரவிவரும் வீடியோ யாத்திரையின் போது எடுக்கப்பட்டது என்றும் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல் நாள் நெருங்கி வரும் நிலையில் தமிழ்நாட்டில் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், கோவை லோக்சபா தொகுதியில் போட்டியிடும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் தீவிரமாக வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்.

கோவை லோக்சபா தொகுதியில் திமுக சார்பில் கணபதி ராஜ்குமார், அதிமுக சார்பில் சிங்கை ராமச்சந்திரன், பாஜக சார்பில் அண்ணாமலை உள்ளிட்டோர் களம் காண்கின்றனர். இதனால் ஸ்டார் தொகுதி ஆகியுள்ளது கோவை நாடாளுமன்றத் தொகுதி. இதனால் நாளுக்கு நாள் கோவை தேர்தல் களம் பரபரப்படைந்து வருகிறது.
இந்த நிலையில், கோவை வேட்பாளாராக அறிவிக்கப்பட்டுள்ள அண்ணாமலை தனக்கு ஆரத்தி எடுக்கும் பெண்ணுக்கு மறைமுகமாக பணம் கொடுப்பது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. தேர்தலில் வாக்காளர்களுக்கு ஒரு ரூபாய் கூட தரப்போவதில்லை. வாக்கு சேகரிப்புக்காக பணத்தை செலவு செய்யப் போவதும் இல்லை.
அதற்கு பதிலாக மக்களுக்கு உண்மையான ஜனநாயகம் என்றால் என்ன என்பதை காட்ட உள்ளேன் என அண்ணாமலை பேசியிருந்த நிலையில், அவரே பணம் கொடுப்பது மாதிரியான ஒரு வீடியோ பரவியது கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. . வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது தேர்தல் விதிமீறல் என்ற நிலையில், அண்ணாமலை, ஆரத்தி தட்டுக்கு கீழே ரூபாய் நோட்டை மறைத்து வைத்து கைகளில் திணிப்பதாக திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்கள் விமர்சித்து வருகின்றனர்.
கோவையில் ஆரத்தி எடுப்பவருக்கு தட்டில் மறைத்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பணம் கொடுப்பது போன்று வெளியான வீடியோ குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றும், சம்பந்தப்பட்ட வீயியோவை காவல்துறையின் ஆய்வுக்கு அனுப்பி உள்ளதாகவும் கோவை மாவட்ட தேர்தல் அதிகாரியான கிராந்தி குமார் பாடி கூறியிருந்தார்.
இந்த நிலையில், சமூக வலைத்தளங்களில் பரவிய இந்த வீடியோவிற்கு விளக்கம் அளித்துள்ளார். அண்னாமலை கூறுகையில், "ஒரு காணொளியின் நம்பகத்தன்மையைச் சரிபார்க்கும் அத்தனை ஆதாரங்கள் இருந்தும், அதற்குப் பதிலாக, கோவை கலெக்டர் ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 29.07.2023 அன்று, எங்கள் #EnMannEnMakkal யாத்திரையின் போது எடுக்கப்பட்ட ஒரு காணொளிக்கு, தற்போது நடவடிக்கை எடுக்க முயற்சிக்கிறார்.
அன்பு மற்றும் மரியாதையின் அடையாளமாக, ஆரத்தி எடுப்பவர்களுக்கு வெகுமதி அளிப்பது நமது தமிழகக் கலாச்சாரத்தில் உள்ளது. தேர்தல் நேரத்தில் மட்டும் இதனை நாங்கள் கடைப்பிடிப்பதில்லை.
பிறரைப் போல, பணத்தின் மூலம் கிடைக்கும் வாக்குகளில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதை நாங்கள் ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளோம். இன்று இதுபோன்ற பொய்களைப் பரப்பும் கட்சிகள், உண்மையில் வாக்குகளுக்காக பணம் கொடுக்கும்போது நடவடிக்கை எடுக்க, கோவை கலெக்டர் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்" என்று கூறியுள்ளார்.
-
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
அமித் ஷாவிடம் நேரடியாக அண்ணாமலை சொன்ன மேட்டர்.. அடுத்த நொடி அலறிய சென்னை பாஜக அலுவலகம்! என்ன நடந்தது -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
டெல்லியிலேயே இருங்க.. அண்ணாமலைக்கு உத்தரவிட்ட அமித் ஷா.. திடீரென மெகா ட்விஸ்ட்.. என்ன காரணம்? -
அப்போ ரஜினிக்கு பதில் அண்ணாமலை.. இனி விஜய், உதயநிதிக்கு மாற்றாக மாற முடியுமா? -
Annamalai Letter: தமிழக பாஜகவில் ஒதுக்கப்பட்டேன்! 5 பக்க கடிதத்தில் குமுறிய அண்ணாமலை












Click it and Unblock the Notifications