வித்யா லக்ஷ்மி கல்விக்கடன் திட்டம்.. மாணவர்கள் ரூ.7.5 லட்சம் வரை பெறலாம்.. எப்படி விண்ணப்பிப்பது?
சென்னை: 12ஆம் வகுப்பு முடித்துள்ள மாணவர்கள், அடுத்ததாக உயர் கல்வி பயில்வதற்காக கல்லூரிகளில் விண்ணப்பிக்க தொடங்கி இருக்கிறார்கள். பொறியியல், மருத்துவம், கலை மற்றும் அறிவியல், சட்டம் என்று ஏராளமான படிப்புகளில் சேர்வதற்கு விண்ணப்பங்கள் குவிந்து வருகின்றன. இதுவொரு பக்கம் இருந்தாலும், கலந்தாய்வில் தனியார் கல்லூரிகளில் சீட் கிடைத்தால் கட்டணத்தை செலுத்துவது மிகப்பெரிய சவாலாக உள்ளது.
இதற்காக மாணவர்கள் உயர் கல்விக்காக அரசு தரப்பில் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் பிரதமர் வித்ய் லக்ஷ்மி கல்விக் கடன் திட்டம் என்பது மாணவர்களுக்கான கல்விக் கடன் வழங்கும் திட்டமாகும். இந்த திட்டத்தின் மூலமாக 2031ஆம் ஆண்டுக்குள் ரூ.3,600 கோடி மதிப்பில் கல்விக் கடன் வழங்குவதை அரசு இலக்காக நிர்ணயித்துள்ளது.

அரசின் வேறு எந்த திட்டத்தின் மூலமாகவும் உதவித் தொகை பெறாத மாணவர்கள் மட்டும் இந்த திட்டத்தின் மூலமாக ரூ.7.5 லட்சம் வரை பிணையம் இல்லாத கடனை பெற முடியும். இந்த கல்விக் கடனை பெறுவதற்கு குடும்ப வருமான ஆண்டுக்கு ரூ.8 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். அப்படி இருக்கும் பட்சத்தில் மாணவர்கள் கல்விக் கடனாக ரூ.10 லட்சம் வரை பெற முடியும்.
அதேபோல் வித்யா லக்ஷ்மி கல்விக் கடன் திட்டத்தின் மூலம் பெறும் கல்விக் கடனுக்கு 3 சதவிகிதம் வட்டி மானியம் அளிக்கப்படும். உயர் கல்விக்காக செல்லும் மாணவர்கள் கட்டணத்திற்காக சிரமப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக தொடங்கப்பட்ட இந்த திட்டம், மாணவர்களுக்கு பயனுள்ளதாக அமையும். கல்விக் கடன் பெற முயலும் மாணவர்கள், இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம்.
இந்த திட்டத்தின் கீழ் கல்வி கடன் பெற விரும்புவோர் Vidya Lakshmi Portal என்ற இணையதளத்தில் தங்களின் விவரங்களை பதிவிட வேண்டும். தங்களின் சுய விவரங்கள் மற்றும் கல்வி தொடர்பான விவரங்களை முழுமையாக அளிக்க வேண்டும். அதேபோல் என்ன படிப்பு, எந்த கல்லூரி, எவ்வளவு கல்விக் கடன் தேவை என்ற விவரங்களை சரியாக பதிவிட வேண்டும்.
அதன்பின் எந்தெந்த வங்கிகளில் கல்விக் கடன் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என்பதற்கு 3 ஆப்ஷன் அளிக்கப்படும். அதில் மாணவர்கள் கல்விக் கடனுக்கான வட்டி எந்த வங்கியில் குறைவோ, அதனை தேர்வு செய்வது சரியாக இருக்கும். அதன்பின் தேர்வு செய்த வங்கிகள், மாணவர்களின் விண்ணப்பங்களை சரி பார்த்து, பதில் அளிக்கப்படும்.











Click it and Unblock the Notifications