தூத்துக்குடியில் தவெக ஸ்ரீநாத் வெற்றி.. நாளைய தீர்ப்பு - ஜனநாயகன்! விஜய்யுடன் நடித்தவர்! யார் இவர்?
சென்னை: தூத்துக்குடி தொகுதியில் அமைச்சர் கீதா ஜீவனை தோற்கடித்து தவெகவுக்கு முதல் வெற்றியை கொடுத்துள்ளார் நடிகர் ஸ்ரீநாத். விஜய்யின் முதல் படமான நாளைய தீர்ப்பு முதல் இறுதி படமான ஜனநாயகன் படத்திலும் நடித்துள்ளார் ஸ்ரீநாத். கல்லூரி முதலே விஜய்யின் நெருங்கிய நண்பரான ஸ்ரீநாத் குறித்த பின்னணியை பார்க்கலாம்.
ஸ்ரீநாத் நடிகர் விஜய்யின் நீண்டகால நெருங்கிய நண்பர் ஆவார். விஜய்யின் கல்லூரி கால நண்பர். நடிகர் சஞ்சீவ், ஸ்ரீநாத் எல்லோரும் ஒரு கல்லூரியில் விஜய்யுடன் ஒன்றாக படித்தவர்கள்.. விஜய் தனது திரைப்பயணத்தை தொடங்கியபோதே ஸ்ரீநாத்தும் தனது திரைப் பயணத்தை தொடங்கினார்.

நாளைய தீர்ப்பு படம்
அதாவது விஜய் ஹீரோவாக அறிமுகமான நாளைய தீர்ப்பு படம் கடந்த 1992 ஆம் ஆண்டு வெளியானது. அதே படத்தில் விஜயின் நண்பராக தனது திரைப்பயணத்தை தொடங்கியவர் தான் தற்போது தூத்துக்குடியில் வெற்றி பெற்றுள்ள ஸ்ரீநாத்.
விஜய்யின் அறிமுகத் திரைப்படமான 'நாளைய தீர்ப்பு' முதல் அவருடன் பயணித்து வருகிறார். விஜய்யின் நெருங்கிய நண்பர்கள் வட்டாரத்தில் மிக முக்கியமானவரான இவர். 'வேட்டைக்காரன்' போன்ற பல படங்களில் விஜய்யுடன் இணைந்து நடித்துள்ளார்.
விஜய்யின் நெருக்கமான நண்பர்
ஸ்ரீநாத்தை வெறும் காமெடி நடிகர் என சுருக்கிவிட முடியாது. அவர் இயக்குநராகவும் தன்னை அடையாளப்படுத்திக்கொண்டுள்ளார். குறிப்பாக நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியான வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற சூப்பர் ஹிட் காமெடி படத்தை இயக்கிவர் இந்த ஸ்ரீநாத் தான்.
விஜய்யின் 'மாண்புமிகு மாணவன்' படத்தில் நடித்தார். சாம் நடிப்பில் வெளியான 12b', 'ஏய் நீ ரொம்ப அழகா இருக்க', 'காதல் வைரஸ்', 'உள்ளம் கேட்குமே', 'உன்னாலே உன்னாலே', 'பீமா', 'தாம் தூம்' என பல படங்களில் நடித்துள்ளார்.
விஜய்யின் நட்பு வட்டாரத்தில் நெருக்கமான நபராக உள்ள ஸ்ரீநாத், விஜய்க்கு உதவியாக திரைமறைவில் தீவிரமாக உழைத்ததாக சொல்லப்படுகிறது. தூத்துக்குடி தொகுதியில் யாருக்கு சீட் கொடுக்கலாம் என்று விஜய்க்கு நெருக்கடி ஏற்பட்டது. அப்போது தனது நண்பரான ஸ்ரீநாத்தை களமிறக்கினார். முதல் முறையாக நேரடி அரசியல் வாய்ப்பை பெற்ற ஸ்ரீநாத், வெற்றியை பெற்று அசத்தியுள்ளார்.
30,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
முதலில் விஜய், தூத்துக்குடி மாவட்ட செயலாளர் பொறுப்பு வழங்கவில்லை, ஆனால் தூத்துக்குடி மாவட்டத்தில் எதாவது ஒரு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்குவார் என அஜிதா காத்திருந்தார். ஆனால் அவரது பெயரை வேட்பாளர் பட்டியலில் விஜய் அறிவிக்கவில்லை. இதனால் அவர் திமுகவில் இணைந்தார். விஜய் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்று கூறி திமுகவில் இணைந்து பணியாற்றினார்.
இதனால் அங்கு அவரது ஆதரவு வாக்குக்கள் திமுகவுக்கு செல்லும், தூத்துக்குடி தொகுதியில் ஸ்ரீநாத் வெற்றி பெற வாய்ப்பு குறைவு என பேசப்பட்டது. ஆனால் முதல் ஆளாக அதுவும் 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக அமைச்சர் கீதா ஜீவனை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார்.
-
விஜய்யை திட்டமிட்டு புறக்கணித்த அமித்ஷா? கேரள முதல்வரை மீட் பண்ணிருக்காரே.. டெல்லியில் நடந்தது என்ன? -
கவர்னர் இனி யுனிவர்சிட்டி வேந்தரா? விஜய்யின் ஒப்புதலோடுதான் அமைச்சர் சொல்கிறாரா.. விசிக கேள்வி -
நிர்மலா சீதாராமனை சந்தித்த விஜய்! நிதி விவகாரத்தில்.. தமிழ்நாடு வைத்த முக்கிய கோரிக்கை! -
விஜய் மீது வெறுப்பில் ராகுல்! டெல்லி ப்ரோக்ராம் கேன்சல்! எம்எல்ஏ வேட்டையால் வேதனையில் டெல்லி தலைகள்! -
மருத்துவமனை முதல் பேருந்து வரை.. ஆய்வு என்ற பெயரில் அதிகரிக்கும் அட்ராசிட்டி.. கடிவாளம் போடுமா தவெக? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
தமிழகத்திற்கு நிரந்தர டிஜிபி.. யுபிஎஸ்சி பரிந்துரைக்கு ராமதாஸ் வரவேற்பு.. விஜய்க்கு வைத்த கோரிக்கை -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
ஜனநாயக படுகொலை.. எதிர்க் கட்சிகள் ஒன்று சேர்வோம்! விஜய் செய்தது ஒரு மோசடி! அட்டாக் மோடில் அன்புமணி -
டாஸ்மாக்: பாட்டிலுக்கு ரூ.10 எக்ஸ்ட்ரா! பின்னணியில் இருக்கும் அதிர்ச்சி உண்மைகள்! விஜய் காதுக்கு வந்த செய்தி -
நிலாவைக் காட்டி சோறூட்டுற மாதிரி.. விஜய்யை காட்டிய ஆதவ்! ஜான் போட்ட ’வார் ரூம்’ கணக்கு! பக்கா ப்ளான்! -
பல்கலைக்கழக வேந்தராக மீண்டும் ஆளுநர்? முதலமைச்சர் வேண்டாமா? அமைச்சர் கூறியது என்ன?












Click it and Unblock the Notifications