ஆர்எஸ்எஸ் பிள்ளை.. சரியாகத்தான் சொல்லியிருக்கிறார்.. விஜய்யின் சைகையை பகிர்ந்து திமுக அட்டாக்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் ஆர்.எஸ்.எஸ் பெற்றெடுத்த பிள்ளை தான் என்று அவர் சரியாக தான் சொல்லியிருக்கிறார் என்று கூறி திமுக ஐடி விங் விமர்சித்துள்ளது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் உறுதி மொழி எடுக்கும் போது நெஞ்சு பகுதிக்கு நேராக கையை வைத்து எடுப்பார்கள். இந்த சைகையோடு விஜய்யின் சைகை ஒத்திருப்பது போல காட்டும் வகையில், இரண்டு படங்களையும் பகிர்ந்து திமுக ஐடி விங் விஜய்யை விமர்சனம் செய்துள்ளது.

தமிழக முதல்வரும், தவெக தலைவருமான விஜய்யின் டிரேடு மார்க் ஸ்டைலான, பினிஷ்டு என்று சொல்லும் விதமான சைகை தற்போது அதிகம் டிரெண்ட் ஆகி வருகிறது. கல்லூரிகளில் பட்டம் பெறும் மாணவர்கள் முதல் கிரிக்கெட் மைதானங்களில் வீரர்கள் வரை இந்த சைகையை செய்து டிரெண்ட் ஆக்கி வருகிறார்கள்.

Vijay is a child born of the RSS - DMK criticizes by sharing Vijay s gesture

இரு படங்களையும் பதிவிட்டு அட்டாக்

தமிழக முதல்வர் விஜய் சட்டசபை கூட்டத்தொடரின் போது காட்டிய இந்த சைகை ஜனநாயகன் படத்தின் டைட்டில் கார்டிலும் பயன்படுத்தப்பட்டது. பின்னர் இதனை பின்பற்றி பலரும் செய்து வரக்கூடிய நிலையில், விஜய்யின் இந்த சைகையை ஆர்.எஸ்.எஸ் அமைப்புடன் ஒப்பிட்டு திமுக ஐடி விங்க் விமர்சித்துள்ளது. பாஜகவின் சித்தாந்த அமைப்பான ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் உறுதி மொழி எடுக்கும் போது நெஞ்சு பகுதிக்கு நேராக கையை வைத்து எடுப்பார்கள்.

ஆர்.எஸ்.எஸ் அமைப்பினரின் இந்த சைகையோடு விஜய்யின் சைகை ஒத்திருப்பது போல காட்டும் வகையில், இரண்டு படங்களையும் பகிர்ந்துள்ள திமுக ஐடி விங், ஆர்.எஸ்.எஸ் பெற்றெடுத்த பிள்ளை விஜய் என அவர் சரியாத்தான் சொல்லி இருக்கிறார்! என்று கமெண்டும் செய்துள்ளது. விசிக தலைவர் திருமாவளவன், விஜய்யை ஆர்.எஸ்.எஸ் பெற்றெடுத்த பிள்ளை என்று சட்டமன்ற தேர்தலுக்கு பின்பாக விமர்சனம் செய்து இருந்தார்.

விஜய்யின் பினிஷ்டு சைகை

திருமாவளவன் பெயரை குறிப்பிடாமல் அவரது விமர்சனத்தை மேற்கோள் காட்டி, விஜய்யை கடுமையாக விமர்சித்துள்ளது திமுக. சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக திமுக தலைவர் ஸ்டாலின், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்ததும் பினிஷ்டு என்று சொல்லும் விதமாக கையால் சைகை காட்டினார். தேர்தல் வெற்றிக்கு பிறகு கிட்டத்தட்ட இதே மாதிரியான கை சைகையை விஜய்யும் வெளிப்படுத்த அது டிரெண்ட் ஆனது.

விஜய்யும் தேர்தல் பிரசாரங்கள், இடைத்தேர்தல் வெற்றிக் கொண்டாட்டத்தின் போது என தொடர்ச்சியாக அந்த சைகையை செய்து வருகிறார். ஆனால், விஜய்யின் சைகை முதல்வர் பதவிக்குரிய மாண்புக்கு உகந்ததாக இல்லை என்று அரசியல் வட்டாரத்திலும் கடுமையான விமர்சனம் எழுந்துள்ளது. விஜய் சட்டசபையில் இத்தகைய சைகையை காட்டியது சட்டசபையின் மாண்பை குலைக்கும் விதமாக இருப்பதாக கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டு இருந்தன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+