செளமியா அன்புமணிக்கு ’சைரன்’ கார்.. கோட்டையில் பாமக! வெளியேற்றப்படும் விசிக? பரபர ப்ளானுடன் விஜய்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2026 தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று கூட்டணி கட்சிகள் தயவுடன் ஆட்சியைப் பிடித்திருக்கிறார் நடிகர் தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய். அதே நேரத்தில் விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து விஜய்க்கு குடைச்சல் கொடுத்து வருகின்றன. இதை அடுத்து ஆட்சி 5 ஆண்டுகளுக்கு தொடர்வதை உறுதி செய்யும் வகையில் பாமகவை கூட்டணிக்குள் கொண்டு வருவதற்கான வேலை நடந்து வருகிறது. மேலும் வேறு சில கட்சிகளில் இருக்கும் எம்எல்ஏக்களும், குறிப்பாக விசிக எம்எல்ஏக்களே தமிழக வெற்றி கழகத்திற்கு தாவலாம் என்கின்றனர்.

2026 தமிழக சட்டசபை தேர்தலில் யாரும் எதிர்பாராத வகையில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்திருக்கிறது. காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

Vijay

இது ஒருபுறம் இருக்க அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமியே தோல்விக்கு காரணம் என கைகாட்டி விட்டு பலரும் தற்போது தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ளனர். மரகதம் குமரவேல், இசக்கி சுப்பையா, எம் ஆர் விஜயபாஸ்கர், சி விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜு, வெள்ளமண்டி நடராஜன் என முக்கிய முகங்கள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்திருக்கின்றனர்.

தவெக அரசு

இதை அடுத்து தற்போதைக்கு பிரச்சனை இல்லாமல் ஆட்சி சென்று கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் மாணவர்கள் போராட்டம், குஜிலியம்பாறை வட்டாட்சியர் சுற்றறிக்கை உள்ளிட்ட விவகாரங்களை காட்டி கம்யூனிஸ்ட் கட்சிகள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு குடைச்சல் கொடுத்து வருகின்றார். இதை அடுத்து மாற்று கூட்டணி வாய்ப்புகளை விஜய் ஆராய்ந்து வருகிறார் என்கின்றனர்.

தமிழக வெற்றி கழகம்

நடந்து முடிந்த தேர்தலில் 108 தொகுதிகளில் தான் தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற்றது. ஆனால், சென்னை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள் உள்ள மொத்தம் 38 தொகுதிகளில் 34 தொகுதிகளில் தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற்றது. மீதமுள்ள 4 தொகுதிகளில் இரண்டில் அதிமுக, இரண்டில் திமுக வெற்றி பெற்றது. அதில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற சிவி சண்முகம் தற்போது தமிழக வெற்றிக் கழக ஆதரவு எம்எல்ஏ போலவே செயல்பட்டு வருகிறார்.

வட மாவட்டங்கள்

அந்த வகையில் சென்னை தமிழக வெற்றிக் கழகத்தின் கோட்டையாகவே உள்ளது. மேலும் கோவை, மதுரை போன்ற இடங்களில் தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதே நேரத்தில் வன்னியர்கள் செல்வாக்கு அதிகமுள்ள வட மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றி வாய்ப்பு எட்டாக்கனியாக உள்ளது சட்டசபை தேர்தலில் வெட்ட வெளிச்சமானது.

பாமக

இந்த நிலையில் அதிமுக கைவசம் இருக்கும் ஏறக்குறைய 40 எம்.எல்.ஏக்களில் 30 எம்எல்ஏக்கள் பாமக வலுவாக உள்ள மாவட்டங்களில் இருந்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. காரணம் கடந்த தேர்தலில் பாமகவுடன் அதிமுக கூட்டணி வைத்தது தான் இவ்வளவு எம்.எல்.ஏக்கள் பெற்றதற்கு காரணம். குறிப்பாக திண்டிவனம், விழுப்புரம், சேலம், கள்ளக்குறிச்சி, தர்மபுரி போன்ற மாவட்டங்களில் பாமகவை விட அதிமுக வேட்பாளர்கள் அதிக அளவில் வெற்றி பெற்றார்கள்.

2026 சட்டசபை தேர்தல்

பாமகவுக்கு வன்னியர் சமூகத்தின் வாக்குகள் இன்னும் கணிசமாக இருக்கும் நிலையில் அந்த கட்சி இடம்பெறும் கூட்டணி தான் ஆளும் கட்சியை முடிவு செய்யும் என்ற நிலை இருந்தது. 2026 சட்டசபை தேர்தலில் அதிமுக வெற்றி பெற முடியாவிட்டாலும் கணிசமான எம்எல்ஏக்களை பெற பாமகவின் வாக்கு வங்கி தான் ஒரு காரணம். அதே நேரத்தில் விடுதலை சிறுத்தைகளுக்கு என்று தனி வாக்கு வங்கி இல்லை என்பதும் இந்த தேர்தல் முடிவுகள் தெரிய வந்துள்ளது.

விடுதலை சிறுத்தைகள் கட்சி

விசிக வலுவாக இருந்த குறிப்பிட்ட சமூக வாக்குகள் தமிழக வெற்றிக் கழகம் பக்கம் சென்று விட்டது என்பதை சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் 34 தொகுதிகளில் வெற்றி பெற்றதன் மூலமே கண்டு கொள்ளலாம். இந்த நிலையில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொடுத்திருந்தாலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமிழக வெற்றிக்கழக அரசுக்கு தொடர்ந்து பிரச்சினை ஏற்படுத்தி வருகிறது.

கம்யூனிஸ்டுகள்

குறிப்பாக தஞ்சாவூரில் விசிகவினர் சாலை மறியலில் ஈடுபட்டதும் அப்போது இளைஞர் தாக்கப்பட்டு கைதானதும் ஆளும் அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தியது. மேலும் கம்யூனிஸ்டுகளும் பல்வேறு விவகாரங்களை கையில் வைத்துக்கொண்டு தமிழக வெற்றிக் கழக அரசுக்கு தலைவலி கொடுத்து வருகின்றன. இதனால் பாமக கூட்டணிக்குள் அழைத்து வர பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது.

பாமக கூட்டணி

குறிப்பாக ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன் இந்த பேச்சு வார்த்தையில் ஈடுபட்டிருப்பதாக சொல்கின்றார் தமிழக வெற்றி கழகத்தினர். அது மட்டும் இல்லாமல் அதிமுக எதிர்ப்பு நிலைப்பாட்டில் இருக்கும் ஒரு எம்எல்ஏவும் இந்த கூட்டணி பேச்சு வார்த்தையில் ஈடுபட்டிருப்பதாக சொல்கின்றனர். விசிக கூட்டணியில் இருப்பதால் பாமக கூட்டணியில் இடம்பெற விருப்பமில்லை என அன்புமணி தரப்பு திட்டவட்டமாகச் சொன்னதாம்.

பாமக வாக்கு வங்கி

இதனால், விசிகவைக் கழட்டி விட்டுவிட்டு பாமகவை கூட்டணிக்குள் கொண்டு வரலாம் என தமிழக வெற்றிக்கழகம் திட்டமிட்டுள்ளதாம். மேலும் பாமக வாக்கு வங்கியை கைப்பற்றும் வகையில் ஏற்கனவே அந்த கட்சி தலைவர்களுடன் விஜய் இணக்கமாக இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் சுதந்திர தின விழாவில் காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் எம்பியுமான கிருஷ்ணசாமிக்கு தகைசால் தமிழர் விருதுடன் 10 லட்சம் ரூபாய் விருது தொகையும் வழங்கப்பட்டது.

சௌமியா அன்புமணி

காங்கிரஸ் மூத்த தலைவர் கிருஷ்ணசாமி சௌமியா அன்புமணியின் தந்தை என்பதும், அன்புமணி ராமதாஸ் மாமனார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி தொடர்ந்து பாமக கூட்டணியில் அழைத்து வருவதற்கான பேச்சுவார்த்தையை விஜய் தீவிரப்படுத்தி வருகிறாராம். அது மட்டுமல்லாமல் விடுதலை சிறுத்தைகள் கூட்டணியில் இருந்து வெளியேறப்பட்டாலும் வெளியேறினாலும் அல்லது வெளியேற்றப்பட்டாலும் சில எம்எல்ஏக்கள் தவெக ஆதரவாளர்களாகவே தொடர்வார்கள் என்றும் சொல்லப்படுகிறது. இது திருமாவளவனை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளதாக சொல்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+