புதுவையில் நாளை தவெக பொதுக் கூட்டம்! திடீரென பயணத்தை ரத்து செய்த விஜய்!
சென்னை: புதுச்சேரியில் நாளை பொதுக் கூட்டம் நடத்தவிருந்த நிலையில் விஜய்யின் பயணம் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. முதலில் ரோடு ஷோவுக்கு அனுமதி கேட்கப்பட்டு அதை கிடைக்கவில்லை. பொதுக் கூட்டம் நடத்தவே அனுமதி கொடுக்கப்பட்டது.
புதுவையில் டிசம்பர் 5ஆம் தேதியான நாளை ரோடு ஷோ நடத்த தவெக தலைவர் விஜய் முடிவு செய்திருந்தார். காலாப்பட்டில் தொடங்கி கன்னியக்கோவில் வரை ரோடு ஷோ நடத்தவும், சோனாம்பாளையம் தண்ணீர் தொட்டி அருகே மைக்கில் பேசவும் 3 நாட்களுக்கு முன்பு புதுச்சேரி டிஐஜி அலுவலகத்தில் தவெகவினர் மனு அளித்தனர்.

முதல்வர் ரங்கசாமியை சந்தித்து அனுமதி தருமாறு அவர்கள் கேட்டிருந்தனர். அனுமதி கோரி, தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகள் 4 முறை கடிதம் அளித்திருந்தனர். இந்த நிலையில் புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோ நடத்த அனுமதி இல்லை என டிஐஜி சத்தியசுந்தரம் தெரிவித்துள்ளார்.
வேண்டுமானால் திறந்தவெளி இடத்தில் பொதுக் கூட்டம் நடத்தி கொள்ளலாம் என தெரிவித்திருந்தார். கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்த வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் ரோடு ஷோ நடத்த காவல் துறை அனுமதி மறுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.
புதுவை முதல்வர் ரங்கசாமியை சந்தித்து புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் கேட்ட போதும் அனுமதி கொடுக்கப்படவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த விஜய் தரப்பு புதுச்சேரி பழைய துறைமுகம் பகுதியில் பொதுக் கூட்டம் நடத்த அனுமதி கேட்டது. இதற்கு அனுமதி கிடைத்துவிட்டது.
இந்த சம்பவங்கள் எல்லாம் நேற்று முன் தினம் நடந்தது. எனவே பொதுக் கூட்டம் நடத்த டிசம்பர் 3, 4 ஆகிய இரு நாட்கள் மட்டுமே இருந்ததால் அதற்கான ஏற்பாடுகளை எப்படி செய்வது என தவெக தரப்பு யோசனை செய்தது. இந்த நிலையில் நாளை புதுவைக்கு விஜய் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் விஜய் ரசிகர்களும் தொண்டர்களும் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
விஜய் கட்சி ஆரம்பிப்பதற்கு முன்பே புதுவை முதல்வர் ரங்கசாமியுடன் நெருக்கம் காட்டி வந்தார். இதனால் புதுவையில் ரங்கசாமி கட்சியுடன் விஜய் களமிறங்குவார் என பேசப்பட்டது. இந்த நிலையில்தான் ரோடு ஷோவிற்கு அனுமதி கேட்டும் கிடைக்காததால் புதுவை புஸ்ஸி தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ ஆனந்த் நேரில் போய் பேசியும் ஒன்றும் நடக்கவில்லை.
-
சில நாய்களுக்கு நான்வெஜ்தான் பிடிக்கும்.. ராகவா லாரன்ஸ் பேச்சால் வெடித்த சர்ச்சை! -
அவர்கள் தற்குறி அல்ல.. தவெகவின் அம்புக்குறி.. விஜய் ஆட்சி மீது பொறாமையால் விமர்சனம்.. லாரன்ஸ் பேட்டி -
விஜய், உதயநிதி, அண்ணாமலைக்கு செக்! அதிமுகவில் களமிறங்குகிறாரா எடப்பாடி பழனிசாமி மகன் மிதுன்? -
தமிழக பள்ளிகளில் விபூதி - குங்குமம் வைத்து செல்ல தடையா? கல்வி அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம் -
பரந்தூர் திட்டம் கைவிடப்படுகிறதா? விமான நிலையத் திட்டத்தில் அதிரடி திருப்பம் - விஜய் புதிய வியூகம்! -
பாட்டிலுக்கு ரூ.10 வாங்கினால் அடுத்த நாள் பணியில் இருக்க முடியாது.. அமைச்சர் விக்னேஷ் எச்சரிக்கை -
முதல்வர் விஜய் டெல்லி போக காரணமே இதுதானே.. உடைத்து பேசிய ஸ்டாலின்! ஸ்டன் ஆன தவெகவினர்! -
இது லிஸ்ட்லயே இல்லையே? பட்ஜெட்டுக்கு முன் முழு பயிர்க் கடன் தள்ளுபடி? விஜய் கையில் வேற லெவல் ப்ளான்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
"டாஸ்மாக் கடைகளில் MRP-ஐ மீறி 1 ரூபாய் கூட வாங்க கூடாது.. தவறு செய்தால் டிஸ்மிஸ்”.. அமைச்சர் அதிரடி! -
தமிழகம் முழுவதும் போலீசார் அதிரடி வேட்டை.. 202 போதைப்பொருள் குற்றவாளிகள் உட்பட 1,328 பேர் கைது! -
வெள்ளை அறிக்கை எப்போது வரும்.. நிதி அமைச்சர் மரிய வில்சன் அப்டேட்












Click it and Unblock the Notifications