விஜய் விவாகரத்து கேட்கவில்லை! சங்கீதா போட்டோவையே உற்று பார்த்தாரே! ஒரு வேளை அதுவா இருக்குமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தனக்கு விவாகரத்து வேண்டும் என சங்கீதாதான் கேட்கிறாரே தவிர, விஜய் இதுவரை விவாகரத்து கேட்டு மனு தாக்கல் செய்யவில்லை என தகவல்கள் கிடைத்துள்ளன. அப்படியென்றால் அவரது நிலைப்பாடு என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் விஜய்யிடம் விவாகரத்து கோரி அவரது மனைவி சங்கீதா மனுத்தாக்கல் செய்தார். சங்கீதாவின் விவாகரத்து கோரிய மனுவில், விஜய்க்கு ஒரு நடிகையுடன் கள்ளக்காதல் இருப்பதாக குற்றம்சாட்டியிருந்தார்.

Sangeetha Divorce

முதலில் அந்த நடிகையுடனான கள்ளக்காதலை விட்டுவிடுவதாக சொன்ன விஜய், பிறகு இன்று வரை தொடர்வதாக சங்கீதா குற்றம்சாட்டியிருந்தார்.

மேலும் விஜய் தான் இந்த தவறை தட்டி கேட்டதால் தனக்கு பொருளாதார தடை விதிப்பதாகவும், தன் கணவருடன் வெளியூர் , வெளிநாடு செல்லும் அந்த நடிகை அவருடன் எடுக்கும் புகைப்படங்களை அவரது சமூகவலைதள பக்கத்தில் வெளியிடுவதால் தனக்கும் தனது குழந்தைகளுக்கும் அவமானமாக இருப்பதாகவும் குற்றம்சாட்டியிருந்தார்.

இந்த வழக்கு செங்கல்பட்டு 1 ஆவது குடும்ப நல நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. விஜய், அவரது மனைவி சங்கீதா ஆகியோர் ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தும் அவர்கள் இருவரும் ஆஜராகவில்லை. எனினும் அவர்கள் வீடியோவில் ஆஜராகினர்.

விஜய், சங்கீதா தரப்பில் அவர்களது வழக்கறிஞர்கள் ஆஜராகினர். அப்போது விசாரணையை ஒத்தி வைக்குமாறு விஜய் தரப்பு கேட்டுக் கொண்டது. இதையடுத்து இந்த வழக்கு ஜூன் 15ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி சசிகலா உத்தரவிட்டுள்ளார்.

இந்த வழக்கை பொருத்தமட்டில் சங்கீதா மட்டும்தான் விவாகரத்து கேட்டு மனு தொடுத்துள்ளார். ஆனால் விஜய் இதுவரை அது போன்ற ஒரு மனுவை தாக்கல் செய்யவில்லை. கடந்த சில ஆண்டுகளாக, பரஸ்பரமாக எந்த பிரச்சினையும் இல்லாமல் இருவரும் பிரிந்து விடலாம் என சங்கீதா, பலமுறை விஜய்யிடம் சுமூக பேச்சுவார்த்தை நடத்தியும் அவர் ஒப்புக் கொள்ளவில்லை என்பதை சங்கீதாவே தனது விவாகரத்து மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு வேளை விஜய்க்கு சங்கீதாவை பிரிய மனமில்லையா அல்லது அவ்வளவு எளிதில் அவருக்கு விவாகரத்து கொடுத்துவிடக் கூடாது என கருதுகிறாரா என்பதும் தெரியவில்லை.

ஒருபுறம் விவாகரத்து கேட்டு சங்கீதா மனு தாக்கல் செய்த சம்பவத்தை தவெகவினர் கடுமையாக விமர்சித்து வந்த நிலையில் மகளிர் தினவிழாவில், பேசிய விஜய், அந்த விஷயமெல்லாம் வொர்த்தே இல்லை. நீங்க (ரசிகர்கள்) யாரும் டென்ஷன் ஆக வேண்டாம் என கூறியிருந்தார். இதற்கு பலர் கண்டித்திருந்தனர்.

மறுபுறம் விஜய், பெரம்பூர் தொகுதியில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கலில் அவரது சொத்து மதிப்பு குறித்த பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்திருந்தார். அதில் விஜய் மனைவி பெயரில் கோடிக்கணக்கில் பணம் இருப்பதாகவும், தங்கம், வைர நகைகள் இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். ஆனால் சங்கீதாவோ தனக்கு பொருளாதார தடை விதித்துள்ளார் என கூறியது முரணாக உள்ளது.

அது போல் தேர்தல் பிரச்சாரத்தின் போது விஜய், சங்கீதாவுக்கு நடுவில் விஜயகாந்த் இருப்பது போல் ஒரு புகைப்படத்தை ரசிகர், விஜய்யிடம் கொடுத்த போது அந்த போட்டோவையே அவர் உருக்கமாக பார்த்தது வைரலானது. அது போல் சங்கீதா விஜய்யுடன் பொது இடங்களுக்குச் செல்லும் போது மனைவியை பாதுகாப்பாக கூட்டி செல்லும் வீடியோவும் வைரலாகியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+