உதயநிதியை இன்றே விடுவிக்க வேண்டும்.. உயர் நீதிமன்ற நீதிபதி உத்தரவு
சென்னை: காவிரி நீர் விவகாரம் தமிழக, கர்நாடகா மாநிலங்களில் பெரும் பரபரப்பாகியுள்ளது. தண்ணீர் வழங்க வேண்டுமென தமிழகத்திலும், தண்ணீர் திறந்துவிடக்கூடாது என கர்நாடகாவிலும் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. தஞ்சாவூர் நேற்று திமுக நடத்திய போராட்டத்தில் முதலமைச்சர் விஜயை த்ரிஷாவுடன் ஒப்பிட்டு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி பேசியது சர்ச்சையானது. இதையடுத்து, உதயநிதியை போலீஸார் விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். உதயநிதியை கைது செய்ய தடைக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், உதயநிதியை இன்றே விடுவிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
மேகதாதுவில் அணை கட்டுவதற்கு கர்நாடகா அரசு முயற்சித்து வருகிறது. தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடாமல் அணை கட்டுவதில் கறாராக உள்ளது. தண்ணீர் திறந்துவிட கோரி தமிழகத்திலும், தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்க கூடாது என்று கர்நாடகாவிலும் போராட்டம் நடைபெறுகிறது. இந்த விவகாரத்தில் பிரதான எதிர்க்கட்சியான திமுக தஞ்சாவூர் பனகல் கட்டிடம் முன்பு நேற்று போராட்டத்தில் ஈடுபட்டது.

இதில் கலந்து கொண்ட உதயநிதி விஜயை த்ரிஷாவுடன் ஒப்பிட்டு பேசியது சர்ச்சையானது. உதயநிதியின் பேச்சுக்கு தவெக அமைச்சர்கள், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். தவெக மகளிரணி அளித்த புகாரில் உதயநிதி மீது தஞ்சாவூர் கிழக்கு காவல்துறையினர் 6 பிரிவுகளில் வழக்குப்பதிந்துள்ளனர். உதயநிதியை கைது செய்வதற்காக சென்னை நீலாங்கரையில் உள்ள அவரின் வீட்டுக்கு காவல்துறையினர் சென்றுள்ளனர்.
இந்நிலையில் கைதுக்கு தடை கோரி திமுக வழக்கறிஞர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அதில், "சட்டமன்ற கூட்ட தொடர் நாளை தொடங்கவுள்ளது. அதில் அவரை கலந்துகொள்ள விடாமல் தடுப்பதற்காக கைது செய்ய முயற்சிக்கிறார்கள். எனவே அவரை கைது செய்ய தடைவிதிக்க வேண்டும். இதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும்" என உதயநிதி தரப்பில் முறையிடப்பட்டுள்ளது. அவசர வழக்காக இன்று பிற்பகல் நீதிபதிகள் விசாரிக்கவுள்ளனர். நண்பகலுக்கு முன்பாகவே விசாரிக்க உதயநிதி வழக்கறிஞர்கள் கேட்டனர்.
வழக்கு 12 மணிக்கு விசாரிக்கப்படும் என்று நீதிபதி கூறினார். அதுவரை உதயநிதியை கைது செய்ய கூடாது என காவல்துறையினருக்கு உத்தரவிட திமுக வழக்கறிஞர்கள் கோரிக்கை வைத்தனர். இதை ஏற்று நண்பகல் 12 மணிவரை கைது நடவடிக்கை கூடாது என்று அரசு வழக்கறிஞரிடம் நீதிபதி கூறியயிருந்தார்.
உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்ற விசாரணையில், உதயநிதி ஸ்டாலின் தரப்பு வாதத்தின்போது, முதல்வர் குறித்தோ, திரைத்துரையைச் சேர்ந்தவர் குறித்தோ தாம் எவ்வித அவதூறு கருத்தும் கூறவில்லை. ஒரு பெண்ணின் கண்ணியத்தை குறைக்கும் வகையிலோ, இழிவுபடுத்தும் வகையிலோ பேசவில்லை. தஞ்சையில் பேசியதை அரசியல் காரணங்களுக்காக தவறான சூழலில் பொருத்தி பிரச்சாரமாக மாற்றி வருகின்றனர் என்று தெரிவித்துள்ளனர்.
அரசு தரப்பு: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி விசாரணைக்காக தஞ்சாவூர் அழைத்துச் செல்லப்படுகிறார். காவல் நிலைய விசாரணைக்குப் பின் விடுவிக்கப்படுவார். கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் எண்ணம் இல்லை என்று அரசு தரப்பு தெரிவித்துள்ளது.
விசாரணைக்குப் பின் இன்றே அவரை விடுவிக்க வேண்டும் என்று நீதிபதி இளந்திரையன் உத்தரவிட்டுள்ளார்.காவல் துறை அழைக்கும்போதெல்லாம் ஆஜராகி விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications
