விஜய்க்கு முட்டு கொடுக்க முடியாது.. தலைவன் சரியில்லாத கட்சி தவெக.. யூடியூபர் பிரசாந்த் போட்ட பதிவு!
சென்னை: கல்பாத்தி குடும்பத்தின் திருமண நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய் மற்றும் நடிகை திரிஷா இணைந்து ஒரே மாதிரி உடையணிந்து பங்கேற்ற விவகாரம் தொடர்பாக யூடியூபர் பிரசாந்த் ரங்கசாமி கருத்து பதிவிட்டுள்ளார். தவெகவால் இனி தமிழக மக்களுக்கு எந்த பயனும் இல்லை என்று பதிவிட்டுள்ள பிரசாந்த் ரங்கசாமி, தலைவன் சரி இல்லாத கட்சி , மக்களுக்கு ஒரு துரும்பை கூட கிள்ளி போடப்போவதில்லை என்றும் சாடியுள்ளார்.
ஏஜிஎஸ் கல்பாத்தி குடும்பத்தின் திருமண நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய் மற்றும் நடிகை திரிஷா இணைந்து கலந்து கொண்டுள்ளனர். இருவரும் ஒரே காரில் ஒரே டிசைன் மற்றும் நிறத்தில் உடையணிந்து இந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். அதேபோல் ஒன்றாக சென்றே தம்பதியினரையும் வாழ்த்தி இருக்கின்றனர். இதன் புகைப்படங்கள் மற்றும் வீடியோ சோசியல் மீடியாவில் வெளியாகி இருக்கிறது.

விஜய் மனைவி சங்கீதா விவகாரத்து மனு
சில நாட்களுக்கு முன்பாக தவெக தலைவர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், நடிகர் விஜய்க்கு 2021ஆம் ஆண்டு முதல் நடிகை ஒருவருடன் கள்ளத்தொடர்பு இருந்ததாகவும், அதனை கைவிடுமாறு கூறியும் அவர் ஏற்கவில்லை என்றும் குற்றம்சாட்டி இருந்தார். ஆனால் அந்த நடிகை யார் என்பதை சங்கீதா கூறவில்லை.
விஜய் - திரிஷா ஜோடி
இந்த நிலையில் விஜய் நடிகை திரிஷாவுடன் திருமண நிகழ்ச்சியில் இணைந்து பங்கேற்றுள்ளார். ஏற்கனவே நடிகை கீர்த்தி சுரேஷ் திருமண நிகழ்ச்சிக்கு தனி விமானத்தில் சென்ற போதும் நடிகை திரிஷா உடன் சென்றிருந்தார். தற்போது வெளிப்படையாக திரிஷாவுடன் விஜய் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றிருப்பது தவெக தொண்டர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இட் இஸ் பிரசாந்த் பதிவு
அதேபோல் தவெகவுக்கு ஆதரவாக சோசியல் மீடியாவில் களமாடி வந்த யூடியூபர்களும் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் சினிமா விமர்சகர் பிரசாந்த் ரங்கசாமி, இதுக்குலாம் முட்டு கொடுக்க முடியாது.. விவாகரத்து பண்ணிட்டு , நீங்க யார் கூட இருந்தாலும் கேள்வி இல்ல விஜய் அண்ணா ! நம்பி ரெண்டு பிள்ளைகள் இருக்கு - அவங்களுக்கு இன்னைக்கு இது பயங்கரமா வலிக்கும்!
தவெகவால் எந்த பயனும் இல்லை
இத யோசிக்க முடியலேன்னா, மக்களை பத்தி எப்படி யோசிப்பீங்க ? சரி இல்ல.. இனி தவெக-வால் தமிழக மக்களுக்கு எந்த பயனும் இல்லை. தலைவன் சரி இல்லாத கட்சி , மக்களுக்கு ஒரு துரும்பை கூட கிள்ளி போடப்போவதில்லை! இத்தனை தொண்டர்களின் நம்பிக்கையாக இருக்கும் விஜய், அவ்வளவு பேரையும் அலட்சியப்படுத்தி, தனக்கு பிடித்ததை மட்டும் செய்கிறார் என்றால் - நாளை நாட்டு மக்களுக்கும் இதையே தான் செய்ய காத்து இருக்கிறார்!
விஜய்யுடன் நிற்க காரணம் என்ன?
அரசியல் என்பது பொது வாழ்வு.. அதை வாழ அவரால் முடியாது என்பதை நேற்று இரவு நிரூபித்துவிட்டார் விஜய்.. இவரை நம்பி ஆட்சி அதிகாரத்தை கையில் கொடுக்க இனியும் மக்கள் தயார் இல்லை! இவ்வளவு நாள் நான் விஜய்யுடன் நின்றதற்கு ஒரே ஒரு காரணம் தான் - அவர் மாற்று அரசியல் கொடுப்பார் என்று நம்பினேன்!
தவெகவில் இருந்து வெளியேறுங்கள்
தன்னை நம்பி இருக்கும் குடும்பத்திற்காக கூட மாறாதவர், எந்த மாற்று அரசியலை முன்னெடுத்துவிட போகிறார் என்பதை இன்று உணர்ந்தேன் !
இவருக்கு திராவிட காட்சிகள் ஆயிரம் மடங்கு மேல்.. விஜய் தன்னைத்தானே அழித்துக் கொள்கிறார். தவெகவில் இருந்து வெளியேறி, திமுக, அதிமுக அல்லது பாஜக அல்லது காங்கிரஸில் சேர்ந்து, உங்களுக்கு அரசியல் எதிர்காலம் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்!
நீங்கள் உண்மையிலேயே அரசியலில் உயர விரும்பினால், அங்கே தொடர்வதில் எந்தப் பயனும் இல்லை என்று பதிவிட்டுள்ளார்.
-
திராவிடம் வீழ்ந்தது.. விஜய்யை சமாளிச்சிடலாம்! கழுகுப்பார்வை பார்த்த அமித் ஷா.. அமைதிக்கு காரணம்! -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
புதிய டிஜிபி-யுடன் விஜய் தலைமைச் செயலக சேம்பரில் 'ஒரு மணிநேர' க்ளோஸ் டோர் மீட்டிங்.. 3 முக்கிய அசைன்மென்ட்! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
“திருடப்பட்ட ஹார்ட் டிஸ்க்குகள்.. யாரும் தப்பிக்க முடியாது”.. அமைச்சர் CTR நிர்மல்குமார் உறுதி! -
தலைமைச் செயலகமா? தவெக தலைமை அலுவலகமா? வானதி சீனிவாசன் கேள்வி -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது!












Click it and Unblock the Notifications