சினிமாவில் எதிரிகளை அடித்து வீழ்த்திய கையா இது? கேப்டனுக்கு என்னாச்சு.. கலங்கும் ரசிகர்கள்
சென்னை: விஜய பிரபாகரனின் பிறந்தநாளையொட்டி அவருக்கு தந்தையும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கேக் ஊட்டி விடுவது போன்ற புகைப்படம் வெளியாகி ரசிகர்களை கலங்கடிக்கச் செய்துள்ளது.
வலது கை கொடுப்பது இடது கைக்கு கூட தெரியக் கூடாது என்பார்கள்.. இது யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ விஜயகாந்திற்கு பக்காவாக பொருந்தும். அவர் செய்த தர்மங்கள் ஏராளம்.
சினிமா வாய்ப்பு தேடும் போது விஜயகாந்த் எப்படி இருந்தாரோ அதே போல்தான் சினிமாவில் புகழை பெற்ற போதும் இருந்தார் என நிறைய பேர் சொல்லி நாம் கேட்டிருக்கிறோம். சினிமாவில் பல எதிரிகளை பஞ்ச் விட்டு பந்தாடிய விஜயகாந்த் அரசியலுக்கு வந்தார்.

கூட்டணி கட்சி
கூட்டணி கட்சியாக இருந்தாலும் மக்களுக்கு எதிரான திட்டம் என்றதும் நாக்கை துறுத்தி கடிந்து கொண்டார். பதவியோ, காசோ,பணமோ முக்கியமில்லை என கருதுபவர். கொரோனா பாதிப்பால் மக்கள் அவதி அடைந்த போது தனது கல்லூரியை மருத்துவமனையாக மாற்றி கொள்ளலாம் என முதல் ஆளாக ஓடோடி வந்து ஆதரவு கரம் நீட்டியவர் கேப்டன்.

சிம்ம குரல்
சிங்கக் குரலில் கர்ஜித்த விஜயகாந்த் தற்போது பேச முடியாமல் அவதிப்பட்டு வருகிறார். அவருக்கு தைராய்டு பிரச்சினையால் பேச முடியவில்லை. அவருக்கு வெளிநாடுகளில் பேச்சு பயிற்சி கொடுக்கப்பட்டு சிகிச்சையும் கொடுக்கப்பட்டு வந்தது. உடல்நலம் நன்றாக இருப்பதாக அவரது குடும்பத்தினர் கூறுகிறார்கள்.

விஜயகாந்த்
ஆனால் பொது இடங்களில் வரும் விஜயகாந்தை பார்க்கும் தொண்டர்கள் தலைவரை பார்த்ததில் சந்தோஷப்படுவதா இல்லை அவரது உடல்நிலை குறித்து கவலைப்படுவதா என தெரியாமல் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தவித்து வருகிறார்கள். கடந்த சுதந்திர தினத்தினத்தன்று தேமுதிக அலுவலகத்தில் கொடியேற்ற விஜயகாந்த் அழைத்து வரப்பட்டார்.

கொடி கம்பம்
அப்போது அவரால் கொடி கயிற்றை இழுத்துக் கூட ஏற்ற முடியவில்லை. தனது மூக்குக் கண்ணாடியை சரிவர போட்டுக் கொள்ள முடியவில்லை. இனிப்பை லேசாக பிரேமலதா அவருக்கு ஊட்டிவிட்டார். கம்பீரமான தோற்றத்தில் விஜயகாந்தை பார்த்துவிட்டு இப்படி பார்ப்பதற்கு தொண்டர்கள் மட்டுமின்றி மாற்றுக் கட்சியினரும் வருந்தினர். அத்துடன் ஆகஸ்ட் 25 ஆம் தேதி கேப்டனின் பிறந்தநாளுக்கு தொண்டர்களை சந்தித்த விரும்பினார்.

தேமுதிக அலுவலகம்
அன்றைய தினம் தேமுதிக அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்ட அவர் ஏழை எளிய மக்களுக்கு உதவிகளை செய்திருந்தார். இத்தனை கஷ்டத்திலும் அரசியலுக்காக எதற்காக அவரை வெளியே அழைத்து வருகிறீர்கள் என நெட்டிசன்கள் விமர்சிக்க தொடங்கினர். இதற்கு பதில் அளித்த பிரேமலதா, விஜயகாந்தே தொண்டர்களை சந்திக்க வேண்டும், தன்னை அழைத்து போ என கேட்கிறார், எங்களால் மறுக்க முடியவில்லை. இப்படி நாங்கள் அழைத்து வந்தால் ஏன் அழைத்து வருகிறீர்கள் என கேட்கிறார்கள், அழைத்து வராவிட்டால் விஜயகாந்த்தை எங்களுக்கு காட்ட மாட்டேங்கிறீர்களே என கேள்வி எழுப்புகிறார்கள். நாங்கள் என்னதான் செய்வது என கேள்வி எழுப்பினார்.

விஜயபிரபாகரன்
அண்மையில் மகன் விஜய பிரபாகரனின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இந்த பிறந்தநாளுக்கு விஜயகாந்த் தனது மகனுக்கு ஆசையாக கேக் ஊட்டி விட்டார். அந்த புகைப்படத்தை விஜயபிரபாகரன் தனது இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். அதில் விஜயகாந்தின் கைகளை பார்க்கும் போது ரசிகர்களின் இதயமே நொறுங்குவது போல் உள்ளது. தனது ஆக்ஷன் படங்களால் தனக்கென ரசிகர் பட்டாளத்தை சேர்த்து வைத்த விஜயகாந்த்தா இது என அடையாளம் தெரியாத அளவுக்கு அந்த புகைப்படம் இருக்கிறது. ஸ்டண்ட் காட்சிகளில் விஜயகாந்த் கோபப்படும் போது கைகளில் நரம்புகள் எழும்புவது போல் இருக்கும். அந்த கைகளா இப்படி எலும்பும் தோலுமாக இருக்கிறது என ரசிகர்கள் பார்த்து வேதனை அடைகிறார்கள். தர்மம் தலைகாக்கும் என்பார்களே அது கேப்டன் விஷயத்தில் என்னாச்சு என ரசிகர்கள் கேள்வி எழுப்பி அவர் உடல் நலம் பெற பிரார்த்தனை செய்கிறார்கள்.
-
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
ஒரு மேயர் ஜெயித்தாலும் ஒருபக்க மீசையை எடுக்கிறேன்.. தவெகவிற்கு சவால் விட்ட திமுகவின் ஆர்எஸ் பாரதி -
“தனது தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளார் ராகுல்..” முரசொலி சரமாரி விமர்சனம்! -
வைகோ வருத்தப்பட போறாரு.. நிர்வாகிகளை தட்டித் தூக்கும் திமுக! ஆர்டர் போட்ட ஸ்டாலின்! துரை தான் பாவம்! -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
சும்மா தூக்கிக் கொடுக்கல விஜய்.. காங்கிரஸுக்கு எதுக்கு எம்பி பதவி! தவெகவின் டெல்லி ‘மாஸ்டர்’ ப்ளான்! -
பனையூரில் பின்வாசல் வழியாக நுழைய முயன்ற அதிமுகவினர்! ஒரே தள்ளுமுள்ளு! விஜய் ஆபீஸில் என்ன நடக்கிறது -
"ஆதவ் அர்ஜுனா வாயை அடக்கிப் பேசணும்.. அதிமுகவை பற்றி பேச அருகதை இல்லை".. கேபி முனுசாமி தாக்கு! -
விசிகவில் இருந்து சங்கத்தமிழன் 3 மாதங்களுக்கு சஸ்பெண்ட்.. திருமாவளவன் அதிரடி ஆக்ஷன்! -
Sengottaiyan: அதிமுக அவ்வளவு தான் முடிஞ்சுது.. செங்கோட்டையன் டைமிங் பன்ச் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல..பெட்டியை கட்டும் செல்வப் பெருந்தகை! பதவிக்கு போட்டி போடும் பெரும் தலைகள்












Click it and Unblock the Notifications