பார்ச்சூனர் காரில் வந்து ஓட்டு போட்ட விஜய்! சைக்கிளிலும் வரவில்லை, டிவிஎஸ் 50-யிலும் இல்லை!
சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தனது வாக்கை எப்போது, எப்படிச் செலுத்த வருவார் என்ற எதிர்பார்ப்பு அவரது ரசிகர்களிடமும் அரசியல் நோக்கர்களிடமும் அதிகரித்து இருந்தது.
கடந்த முறை சைக்கிளில் வந்த விஜய், இந்த முறை வீட்டில் இருந்த டிவிஎஸ் - 50 பைக்கில் வருவாரோ என எதிர்பார்த்தனர். ஆனால் அவர் பார்ச்சூனர் காரில் வந்து ஓட்டளித்துவிட்டு சென்றுள்ளார்.

வேட்புமனுவில் TVS 50
விஜய் இந்த தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். அவர் தாக்கல் செய்த சொத்து பிரமாணப் பத்திரத்தில் (Affidavit), பல கோடி மதிப்பிலான சொகுசு கார்கள் இருந்தாலும், ஆச்சரியமாக ஒரு TVS 50 XL ரக இருசக்கர வாகனத்தையும் பட்டியலிட்டுள்ளார். "சாதாரண மனிதனின் அடையாளமான TVS 50-ஐ விஜய் தனது பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டதே, அவர் ஒரு 'மாஸ்' என்ட்ரி கொடுக்கப்போவதற்கான முன்னோட்டம்தான்" என சமூக வலைதளங்களில் பேச்சுக்கள் கிளம்பின.
மீண்டும் சைக்கிளா?
கடந்த சட்டசபை தேர்தலில் கருப்பு சிவப்பு வண்ணமுள்ள சைக்கிளில் விஜய் வாக்களிக்க வந்தார். அப்படி வந்தபோது ஏற்பட்ட பாதுகாப்புச் சிக்கல்களைக் கருத்தில் கொண்டு, இந்த முறை தேர்தல் ஆணையமும் காவல்துறையும் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. ஆனாலும், மக்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாக ஏதேனும் ஒரு "சிக்னல்" கொடுப்பதை விஜய் வழக்கமாகக் கொண்டவர்.
தற்போதைய நிலவரம்:
- பாதுகாப்பு: நீலாங்கரையில் உள்ள அவர் வீட்டு வாசலிலும், வாக்குச்சாவடியிலும் வரலாறு காணாத பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
- ரசிகர்கள் எதிர்பார்ப்பு: "சைக்கிள்னா ஒரு மெசேஜ், ஆனா TVS 50-னா அது ஒரு எமோஷன்" என ரசிகர்கள் நீலாங்கரையில் குவியத் தொடங்கினர்.
அவர் தனது பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்ட அந்த பழைய TVS 50 வண்டியில் கெத்தாக வருவாரா அல்லது அமைதியாக காரில் வந்து கடமையை முடிப்பாரா? என பலரும் எதிர்பார்த்து இருந்தனர். விஜய் மீண்டும் ஒரு "மௌனப் புரட்சி" செய்வாரா அல்லது தனது கட்சியின் 'விசில்' சின்னத்தை முன்னிறுத்தி ஒரு அதிரடி என்ட்ரி கொடுப்பாரா? எனவும் எதிர்பார்க்கப்பட்டது.
இதற்காக அவரது வீட்டு வாசல் முன்பு அவரது ரசிகர்கள், தொண்டர்களும் குவிந்து இருந்தனர். ஆனால் இந்த முறை அவர் சைக்கிளிலும் வரவில்லை, டிவிஎஸ் -50 பைக்கிலும் வரவில்லை. தனது பார்ச்சூனர் காரில் வாக்குசாவடிக்கு புறப்பட்டார்.
ஓட்டு போட்டார் விஜய்

சோழிங்கநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடிக்கு விஜய் வருகை தந்தார். அப்போது அவருடன் செல்ஃபி எடுப்பதற்காக பலரும் முண்டியடித்தனர். காரில் இருந்து இறங்கியதும் அவரை சூழ்ந்துகொண்டனர். இதனால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் ஒருவரது செல்போன் கீழே விழுந்ததை விஜய் எடுத்து கொடுத்தார். தொடர்ந்து போலீஸ் பாதுகாப்புடன் அவர் வாக்குச்சாவடிக்குள் சென்று தனது ஜனநாயக கடமையை ஆற்றினார். அரசியல் கட்சி தொடங்கிய பிறகு முதல் முறையாக அவர் வாக்கினை செலுத்தி உள்ளார்.
முன்னதாக அஜித் இப்படி கூட்டம் வரும் என்று தெரிந்தே முதல் ஆளாக வாக்குச்சாவடிக்கு வந்து ஓட்டளித்துவிட்டு சென்றார். ஆனால் விஜய் வேண்டும் என்றே இது போல் கூட்டம் இருப்பதை காண்பிப்பதற்காக வருகை தருகிறார் என பலரும் விமர்சித்தும் வருகின்றனர்.












Click it and Unblock the Notifications