தாய் மாமன் தங்க மோதிரம்.. விஜய்யின் மிகப்பெரிய கணக்கு.. டிகோடிங் செய்ததில் தெரியவந்த உண்மை

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ் ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும் என தவெக அரசு பட்டிஜெட்டில் அறித்துள்ளது. இதற்காக பட்ஜெட்டில் 560 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் ஆண்டுதோறும் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகள் எண்ணிக்கை சுமார் 4.42 லட்சம் ஆகும். இவர்கள் அத்தனை பேருக்குமே கண்டிப்பாக தங்கமோதிரம் கிடைக்கும். இதில் எந்த வரம்புகளும் இருக்க வாய்ப்பு இல்லை. எப்படி என்பதை பார்ப்போம்.

பொதுவாக அரசு சில எமோஷனலான திட்டங்களில் வரம்புகளை விதிக்க வாய்ப்பு குறைவு. அந்த வகையில் அரசு மருத்துவமனையில் குழந்தை பெற்றுக்கொள்ளும் அனைவருக்குமே விஜய் அரசின் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் ஒரு கிராம் தங்க மோதிரம் கண்டிப்பாக கிடைக்க வாய்ப்பு உள்ளது. ஏனெனில் நிதி ஒதுக்கீட்டை கணக்கீடு செய்ததை பார்த்தால், கடந்த ஆண்டு நிலவரத்தை கணக்கில் எடுத்தே அரசு அறிவித்திருப்பது தெரிகிறது. பொதுவாக தங்க மோதிரம் வாங்க விரும்பும் அரசு, மொத்தமாகக் கொள்முதல் செய்யும்போது சந்தை விலையை விடக் குறைவான விலையிலேயே தங்கம் வாங்கும்.

Vijay s grand strategy behind Thai Maman Thanga Mothiram scheme truth revealed through decoding

அரசு ஒதுக்கிய ரூ.560 கோடி நிதியில் எத்தனை பேருக்குத் தங்க மோதிரம் கிடைக்கும் என்பதை விவரமாக பார்ப்போம்.

மொத்த நிதி ஒதுக்கீடு: ₹560 கோடி

ஆண்டுதோறும் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகள்: 4.42 லட்சம்

சுமார் 54% மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும், 37% மாவட்ட/தாலுகா மருத்துவமனைகளிலும், 9% ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் பிறப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

ஒரு கிராம் தங்கம் இன்றைய விலை 13350 ரூபாய் ஆகும். இந்த விலைக்கு வாங்க வாய்ப்பு மிக குறைவு.

அரசு 12,000 என்கிற விலையில் வாங்கினால் 4,66,666 பேருக்கு கிடைக்கும். ரூ.12,500 என்கிற விலையில் அரசு வாங்கினால், 4,48,000 பேருக்கு கிடைக்கும். ஒருவேளை தற்போதைய மார்க்கெட் விலைக்கே வாங்கினால் கூட, அதாவது 13000 ஒரு கிராம் என்று வாங்கினால் கூட 4,42,000 பேருக்கு அரசால் தந்துவிட முடியும். இதற்கு ஒட்டுமொத்தமாக ரூ.574.6 கோடி செலவாகும். எனவே அரசு மருத்துவமனையில் பிறக்கும் அத்தனை குழந்தைகளுக்குமே தங்க மோதிரம் வழங்குவதில் எந்த சிக்கலும் இல்லை..

தாய் மாமன் தங்க மோதிரம் என்பது அரசு மருத்துவமனையில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் போக வேண்டும் என்பதில் கவனமாக இருந்துள்ள விஜய், இந்த திட்டத்தை மட்டும் பார்த்து பார்த்து உருவாக்கி உள்ளதன் பின்னணியை பார்த்தாலே முதல்வர் விஜய்யின் கணக்கு தெளிவாக புரியும். எனினும் எதிர்காலத்தில் தங்கம் விலை திடீரென உயரும் பட்சத்தில் அல்லது குறையும் பட்சத்தில் அல்லது குழந்தைகளின் எண்ணிக்கை அதிகமாகும் பட்சத்தில் அரசு தனது பட்ஜெட் ஒதுக்கீட்டை சற்று நிதி ஒதுக்கீட்டை மாற்றியமைக்க வாய்ப்பு உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+