திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு!
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி முழுமையான ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை எடுத்து கொண்டால் 'இந்தியா' கூட்டணியில் உள்ள நிலையில் விஜய்க்கு ஆதரவான இந்த முடிவு திமுக தலைமையிலான கூட்டணிக்கு அதிர்ச்சியை வழங்கி உள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ளது. அனைத்து கட்சிகளும் தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன. விஜயின் தமிழக வெற்றிக் கழகம் தனித்து போட்டியிடடுள்ளது. தனது வேட்பாளர்களை ஆதரித்து விஜய் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் களமிறங்கும் வேட்பாளர்களை ஆதரித்து இன்று விஜய் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். இந்நிலையில் தான் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி குட்நியூஸை சொல்லி உள்ளது.
அதாவது நடைபெற உள்ள தமிழக சட்டசபை தேர்தலில் விஜயின் தவெகவிற்கு, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி முழுமையாக ஆதரவு தெரிவித்துள்ளது. இதனை தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரிக்கான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஜே ஜார்ஜ் உறுதி செய்துள்ளார். இதுபற்றி அவர் கூறியுள்ளதாவது:
''தமிழக சட்டசபை தேர்தலில் தவெகவிற்கு ஆதரவு வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதுபற்றி கட்சி நிர்வாகிகளின் கூட்டங்களின் மூலமாக முடிவெடுக்கப்பட்டுள்ளது. தவெக வேட்பாளர்களின் வெற்றிக்காக அவர்களுடன் சேர்ந்து செயல்பட கட்சி தொண்டர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இதுபற்றி கொல்கத்தாவில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இ-மெயில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தை எடுத்து கொண்டால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஜெயலலிதா இருக்கும் வரை அதிமுகவை ஆதரித்தது. அவரது மறைவுக்கு பிறகு நடந்த சட்டசபை, நாடாளுமன்ற தேர்தல்களில் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்தது. இப்போது விஜயின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு கரம் நீட்டி உள்ளது.
ஊழல், விலைவாசி உயர்வு, மின் கட்டணம், சொத்து வரிகள் அதிகரிப்பு, சட்டம் - ஒழுங்கு சீர்கேடு போன்ற காரணங்களால் மக்கள் தற்போதைய ஆளும் கட்சி (திமுக) மீது நம்பிக்கை இழந்துவிட்டனர். நலத்திட்டங்கள் என்ற போர்வையில், மாநிலத்தின் கடன் சுமை தொடர்ந்து மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது.
மாநிலத்தில் சந்தர்ப்பவாத கூட்டணி அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு மட்டுமே பயன்படும். பொதுமக்களாக ஏற்கப்படாது. அரசியலுக்காக விஜயின் தனிப்பட்ட விஷயங்களை பார்ப்பது கண்டிக்கத்தக்கது. நடிகர் விஜய் தமிழ்நாட்டிலும் வரலாறு படைப்பார்'' என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை எடுத்து கொண்டால் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் இருக்கும் 'இந்தியா' கூட்டணியில் அங்கம் வகிக்கிறது. இப்படியான சூழலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு பொறுப்பாளர் திமுக, காங்கிரஸ், விசிக இருக்கும் கூட்டணியை விடுத்து தவெகவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இது திமுகவுக்கு அதிர்ச்சி வைத்தியமாக பார்க்கப்படுகிறது.
முன்னதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி, திமுகவை விமர்சனம் செய்திருந்தார். மேற்கு வங்க அதிகாரிகளை தமிழகத்திற்கு தேர்தல் பணிக்காக அனுப்பியதை சுட்டிக்காட்டி பேசிய மம்தா பானர்ஜி, திமுக - பாஜக இடையே மறைமுகமாக கூட்டணி இருக்கலாம் என்று கூறினார்.
இப்படியான சூழலில் தான் தமிழக சட்டசபை தேர்தலில் தவெகவிற்கு ஆதரவு வழங்குவதாக மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தமிழக பொறுப்பாளர் ஜே ஜார்ஜ் அறிவித்துள்ளார். இருப்பினும் இதுபற்றி மம்தா பானர்ஜி அல்லது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைமையிடம் இருந்து எந்த அறிவிப்பும் வரவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
-
தமிழகத்தில் கட்டிட அனுமதியில் புரட்சி.. ஊழல் ஒழிப்பு, முழு ஆன்லைன் முறை.. விஜய் அரசு அதிரடி உத்தரவு -
பரந்தூர் ஏர்போர்ட் காலத்தின் கட்டாயம்.. தரவுகளோடு விஜய்யைச் சந்திக்கும் ஏர்போர்ட் அத்தாரிட்டி! -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications