ஓரளவுக்குத்தான் பொறுமை காக்க முடியும்! கெட்அப் மாத்தினால் போதாது.. கேரக்டரையும் மாற்றும் சசிகலா!
சென்னை : அமைதி அரசியல் கை கொடுக்கவில்லை என்பதை தற்போது நன்கு உணர்ந்துள்ள சசிகலா அறிக்கைகள் மூலம் மீண்டும் லைம் லைட் அரசியலுக்கு வந்திருக்கிறார். வரும் காலங்களில் இந்த நடவடிக்கைகளை அவர் தீவிரப்படுத்த திட்டமிட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.
தமிழக முன்னாள் முதல்வராக ஜெயலலிதா முதல் முறை பதவி ஏற்றதில் இருந்து கடைசியாக மரணம் அடையும் வரை அதிமுகவின் பவர் சென்டராக இருந்தவர் சசிகலா. நிர்வாகிகள் நியமனம் கூட்டணி முடிவு டெண்டர் இறுதி செய்வது என அதிகாரத்தின் அனைத்து தளங்களிலும் ஜெயலலிதாவின் மனசாட்சியாகவே இருந்தார் என தற்போதும் கூட அதிமுக தொண்டர்கள் கூறுவது உண்டு.
சசிகலாவை மீறி அதிமுகவில் அரசியல் செய்ய முடியாது என ஒதுங்கிக் கொண்ட சீனியர்கள் நூற்றுக்கணக்கில் இருக்கின்றனர். அவரால் மீண்டும் அரசியல் மறுவாழ்வு பெற்றவர்களும் உண்டு அந்த வகையில் திண்டுக்கல் சீனிவாசன், எடப்பாடி பழனிச்சாமி, டிடிவி தினகரன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

சசிகலா
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கட்சியும் ஆட்சியும் அவர் கையில் தான் இருக்க வேண்டும் என அதிமுகவுக்குள்ளேயே சலசலப்பு உருவானதும் அதன் பிறகு பன்னீர்செல்வம் தர்மயுத்தம் நடத்தியது, அணிகள் இணைப்பு, சசிகலா சிறைக்கு சென்றது என நிகழ்வுகள் அடுத்தடுத்து அரங்கேறிவிட்டது. சசிகலாவால் முதல்வராக்கப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி அவர் சிறைக்கு சென்றதுக்குப் பிறகு ஆட்சியை காப்பாற்றிக்கொள்ள ஓ.பன்னீர்செல்வத்தை நம்பி இருக்க வேண்டியது இருந்தது. இதனால் சசிகலாவை புறம் தள்ளினர்.

எனது கடமை
தான் தான் அதிமுகவின் பொது செயலாளர் தொண்டர்களை ஒருங்கிணைக்க வேண்டியது எனது கடமை என சூளுரைத்து வந்தாலும் அரசியலில் அவரது செயல்பாடுகள் பெரிய அளவில் கை கொடுக்கவில்லை. சாப்ட் கார்னர் அரசியல் தமிழக அரசியலுக்கு ஒத்து வராது என்பதை மிகத் தாமதமாகவே உணர்ந்து கொண்டுள்ளார் சசிகலா என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள். கட்சியின் தலைவராக டிடிவி தினகரன் அவரை முன்னிலைப்படுத்தினாலும் தற்போது அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் முழுவதும் தினகரனின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. காரணம் அதிமுக வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும் நிலையில் இன்னொரு கட்சியின் தலைவராக செயல்பட்டால் சிக்கலாகிவிடும் என்பதால் சசிகலா தனித்து செயல்பட்டு வருகிறார்.

ஓ.பன்னீர்செல்வம்
இந்த நிலையில் தான் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கட்சியில் வெளியேற்றப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் அடுத்தடுத்து நிர்வாகிகளை நியமனம் செய்து வரும் நிலையில் சசிகலா மட்டும் அமைதியாகவே இருந்து வந்தார். இடையே புரட்சி பயணம் ஆன்மீகப் பயணம் என தமிழக முழுவதும் சென்று வந்தாலும் டிடிவி தினகரனின் ஆதரவாளர்களே சசிகலாவையும் வரவேற்றனர். இந்த நிலையில் ஜெயலலிதாவின் முன்னாள் உதவியாளரான பூங்குன்றன் அதிமுக மிகவும் மோசமான நிலைக்குச் சென்று கொண்டிருக்கிறது. இரட்டை இலை முடங்கும் நிலையில் உள்ளது எனவே நீங்கள் தீவிர அரசியலுக்கு வர வேண்டும் என அழைப்பு விடுத்தார்.

தீவிர அரசியல்
மேலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் சசிகலாவை தொடர்பு கொண்ட நிர்வாகிகள் நீங்கள் தீவிர அரசியலுக்கு வந்தால் உங்கள் பக்கம் அணி திரள தயார் என உறுதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் எடப்பாடி ஆதரவாளர்களும் ஓபிஎஸ்ன் ஆதரவாளர்களும் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் உற்சாகம் அடைந்த சசிகலா முதன் முறையாக உதயநிதியின் நியமனம் குறித்து காட்டமாக அறிக்கையை விட்டார். அது பெரிய அளவில் பேசப்பட்டது.. இதனால் உற்சாகமடைந்துள்ளார். சாஃப்ட் அரசியலை விட்டு தீவிர அரசியலுக்கு வர முடிவு செய்து இருக்கிறார். அந்த வகையில் புரட்சி பயணம் 2.1 என்ற வகையில் மாவட்டம் தோறும் நிர்வாகிகள் சந்திப்பை நடத்த திட்டமிட்டு இருக்கிறார்.

டெல்டா நிர்வாகிகள்
இதனால் ஓபிஎஸ் இபிஎஸ் தரப்பு சற்றே அச்சமடைந்துள்ள நிலையில் தினகரனின் ஆதரவோடு வரும் காலங்களில் சசிகலாவின் அரசியல் அதிரடிகள் அடுத்தடுத்து அரங்கேறலாம் என கூறப்படுகிறது. அதற்கான முன்னேற்பாடாகத்தான் உதயநிதி குறித்த அறிக்கை எனவும் இன்னும் வருங்காலங்களில் திமுக தலைமைக்கு எதிராகவும் பல அதிரடி முடிவுகளை சசிகலா எடுப்பார் எனவும் அதிமுகவிலும் அவரது வருகையை எதிர்நோக்கி சிலர் இருக்கும் நிலையில் சசிகலா பக்கமும் ஒரு குறிப்பிடத்தக்க ஆதரவு வட்டம் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக இன்னும் என்னென்ன நடக்குமோ என குழப்பத்தில் இருக்கின்ற ரத்தத்தின் ரத்தங்கள்.

குழப்பத்தில் ரரக்கள்!
இதனால் ஓபிஎஸ் இபிஎஸ் தரப்பு சற்றே அச்சமடைந்துள்ள நிலையில் தினகரனின் ஆதரவோடு வரும் காலங்களில் சசிகலாவின் அரசியல் அதிரடிகள் அடுத்தடுத்து அரங்கேரலாம் என கூறப்படுகிறது. அதற்கான முன்னேற்பாடாகத்தான் உதயநிதி குறித்த அறிக்கை எனவும் இன்னும் வருங்காலங்களில் திமுக தலைமைக்கு எதிராகவும் பல அதிரடி முடிவுகளை சசிகலா எடுப்பார் எனவும் அதிமுகவிலும் அவரது வருகையை எதிர்நோக்கி சிலர் இருக்கும் நிலையில் சசிகலா பக்கமும் ஒரு குறிப்பிடத்தக்க ஆதரவு வட்டம் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக இன்னும் என்னென்ன நடக்குமோ என குழப்பத்தில் இருக்கின்ற ரத்தத்தின் ரத்தங்கள்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications