போயஸ் இல்லத்தில் ரஜினிகாந்த்தை சந்தித்த சசிகலா.. என்ன காரணம்? வெளியிடப்பட்ட அறிக்கை
உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய ரஜினிகாந்த்தை அவரது இல்லத்தில் சந்தித்து நலம் விசாரித்தார் சசிகலா
சென்னை: நடிகர் ரஜினிகாந்தை போயஸ்கார்டன் இல்லத்தில் சந்தித்து பேசினார் சசிகலா. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய ரஜினிகாந்த்தை அவரது இல்லத்தில் சந்தித்து நலம் விசாரித்தார் சசிகலா.
கடந்த பிப்ரவரி மாதம் சிறையில் இருந்து விடுதலையான சசிகலாவிற்கு கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அப்போது சசிகலாவின் உடல் நலம் பற்றி நடிகர் ரஜினிகாந்த் கேட்டறிந்தார். சென்னை திரும்பிய சசிகலாவை ஏராளமான அரசியல் பிரமுகர்கள் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.

இந்த நிலையில் அண்ணாத்தே படப்பிடிப்பின் போது ரஜினிகாந்துக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. படப்பிடிப்பு முடிந்த பின்னர் சில மாதங்களுக்கு முன்னர் மீண்டும் உடல் நலம் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வீடு திரும்பினார் ரஜினிகாந்த்.
இந்த நிலையில் இன்று நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்கு சென்ற சசிகலா அவரது உடல் நலம் குறித்து விசாரித்தார். தாதாசாகேப் பால்கே விருது பெற்ற ரஜினிகாந்துக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து கூறினார் சசிகலா. இந்த சந்திப்பின் போது ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் உடனிருந்தார்.
போயஸ்கார்டன் எப்போதுமே அரசியல் பரபரப்புக்கு பஞ்சமில்லாத இடமாகத்தான் உள்ளது. ஜெயலலிதா இருந்தவரைக்கும் அரசியல் தலைவர்கள் அதிகம் வந்து போகும் இடமாக இருந்தது போயஸ்கார்டன். இப்போது ரஜினிகாந்த்தை, சசிகலா சந்தித்தது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சசிகலா தரப்பில் வெளியிடப்பட்ட கடிதத்தில், சசிகலா நேற்று மாலை ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது அவரது மனைவி லதா ரஜினிகாந்தும் உடன் இருந்தார்கள். ரஜினிகாந்த் உடல்நலம் பாதிக்கப்பட்டு தற்பொழுது முற்றிலுமாக குணமடைந்து வந்துள்ளதை அறிந்து, நேரில் சென்று சந்தித்து அவர்களுடைய உடல் நலனை பற்றியும் கேட்டு அறிந்தார். மேலும் ரஜினிகாந்த், கலையுலகின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது பெற்றதற்கும் தனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளையும் சசிகலா தெரிவித்து கொண்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications