ஆமா.. சென்னை மாநகராட்சியில் முழு ரிசல்ட் எப்போது தெரியும்? ககன்தீப் சிங் கொடுத்த அப்டேட்
சென்னை மாநகராட்சியில் விறுவிறுப்பாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், அமைதியாக நடைபெறுவதாக மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி கூறியுள்ளார்.
சென்னை: 15 மையங்களில் வாக்கு எண்ணிக்கை அமைதியாகவும் சுமூகமாகவும் நடைபெறுவதாக சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி கூறியுள்ளார். பிற்பகலுக்குள் ரிசல்ட் அறிவிக்கப்பட்டு விடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 12, 601 பதவிகளுக்கு ஒரே கட்டமாக கடந்த 19ஆம் தேதி தேர்தல் நடந்தது. இத்தேர்தலில் மொத்தம் 60.70 சதவீத வாக்குகள் பதிவானது.

தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகள் என 268 இடங்கள் வாக்கு எண்ணும் மையங்களாக ஏற்பாடு செய்யப்பட்டு, பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. பல இடங்களில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
சென்னை மாநகராட்சியில் 200 வார்டுகளில் பதிவான வாக்குகள் 15 மையங்களில் பலத்த பாதுகாப்புடன் எண்ணப்பட்டு வருகின்றன. பாரதி மகளிர் கல்லூரி மண்டலம் 5 வாக்குப்பதிவு எண்ணும் மையத்தை பார்வையிட்ட சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களிலும் வாக்குப்பதிவுகள் சரியாக எட்டு மணிக்கு தொடங்கி விட்டது. தபால் வாக்குப் பெட்டிகளும் , மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் அந்த கட்சி ஏஜென்டுகள் முன்னிலையில் திறக்கப்பட்டு வார்டு வாரியாக எண்ணப்பட்டு வருகின்றன.
மின்னணு வாக்கு இயந்திரம் இயந்திரத்தில் பதிவான வாக்குகள் ஏஜென்டுகள் முன்னிலையில் 14 மேஜைகளில் எண்ணப்பட்டு வருகிறது . கணினி வாயிலாக அவை உடனுக்குடன் பதிவு செய்யப்பட்டு வருகிறது. எல்லா இடங்களிலும் வாக்கு எண்ணிக்கை சுமூகமாக நடத்தப்பட்டு வருகிறது.
வேட்பாளர் அல்லது வேட்பாளரின் தலைமை ஏஜெண்ட் தேர்தல் அலுவலரின் அருகில் அமர்ந்து வாக்கு எண்ணிக்கையை கண்காணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது . இரண்டு , மூன்று சுற்றுகளில் வெற்றி நிலவரம் என்பது தெரிய வந்துவிடும். நண்பகல் வாக்கு எண்ணிக்கை நிறைவடையும் என்றார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications