எங்களுக்கு அட்வைஸ் பண்ற வேலை வேண்டாம்! ஒப்பந்ததாரர்களிடம் கடுகடுத்த அமைச்சர் கே.என்.நேரு!
சென்னை: எங்களுக்கு அறிவுரை சொல்கின்ற வேலை எல்லாம் வேண்டாம் என ஒப்பந்ததாரர்களிடம் கடுகடுத்துள்ளார் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு.
மேலும், செம்பரம்பாக்கம் ஏரியில் மேற்கொள்ள வேண்டிய கட்டுமானப் பணிக்கு மத்திய அரசு 3 ஆண்டுகளாக ஒப்புதல் வழங்காததால் சென்னைக்கு வர வேண்டிய நீர் வராமல் இருப்பதாக அமைச்சர் நேரு தெரிவித்தார்.
சென்னையில் நடைபெற்ற தேசியளவிலான கருத்தரங்கம் ஒன்றில் கலந்துக் கொண்ட அவர் இதனைக் கூறினார்.

குடிநீர் வழங்கல்
குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றல் தொடர்பான தேசிய கருத்தரங்கம் சென்னையில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் நடைபெற்றது. இதில் ஒப்பந்ததாரர்கள் மற்றும் உயர் அதிகாரிகள், அரசு அலுவலர்கள் பங்கேற்றனர். சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, மத்திய அரசை ஒரு பிடி பிடித்தார். செம்பரம்பாக்கம் ஏரியில் கட்டுமானப் பணி மேற்கொள்ள மத்திய அரசு 3 ஆண்டுகளாக அனுமதி தராமல் இழுத்தடித்து வருவதாக குற்றஞ்சாட்டினார்.

அமைச்சர் கோபம்
இதனால் சென்னைக்கு வர வேண்டிய 250 டிஎம்சி தண்ணீர் வீணாவதாகவும் எனவே கடலில் வீணாக கலக்கும் தண்ணீரை சேமிக்க முறையான திட்டத்தை ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் வகுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். இதனிடையே அந்தக் கருத்தரங்கில் கலந்துகொண்ட ஒப்பந்ததாரர் ஒருவர் மைக்கை பிடித்து அதிகாரிகளுக்கு ஒரு சில ஆலோசனைகளை வழங்கினார். இதைக் கேட்ட அமைச்சர் நேருவின் முகம் கோபத்தில் சிவந்தது.

அட்வைஸ் வேண்டாம்
இதையடுத்து எங்களுக்கு அறிவுரை சொல்கின்ற வேலை எல்லாம் வேண்டாம் என ஒப்பந்ததாரர்களிடம் கடுகடுத்த அமைச்சர் நேரு, கருத்து மட்டும் சொல்லச்சொன்னால் எங்களுக்கு அட்வைஸ் செய்கிறீர்களா என எகிறினார். ஒப்பந்த வேலைகளை விரைந்து முடிப்பதற்கான வழியை பார்க்குமாறும் ஒப்பந்தப் பணிகளை மேற்கொள்ளும் போது உள்ள பிரச்சனைகள், சிரமங்களை மட்டும் கூறுமாறும் ஒப்பந்ததாரர்களிடம் கூறினார் அமைச்சர் நேரு.

ஒப்பந்ததாரர்கள்
அமைச்சர் நேரு கடுகடுப்புடன் பேசியதை பார்த்து அதிகாரிகளுக்கு அறிவுரை சொன்ன ஒப்பந்ததாரர் ஆடி போய்விட்டார். இதனிடையே மற்ற ஒப்பந்ததாரர்கள் யாரும் கருத்துச் சொல்லக் கூட விரும்பாமல் கடைசி வரை அமைதியாக அமர்ந்துவிட்டு கலைந்து சென்றனர்.
-
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
717 டாஸ்மாக்கை மூடுறதா சொன்னீங்களே! ஓட்டேரி லிஸ்ட்ல இல்லை? தமிழக அரசுக்கு ஜவாஹிருல்லா வைத்த டிமாண்ட் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்!












Click it and Unblock the Notifications