உங்களை விட அதிக எண்ணிக்கையில் இருக்கோம்.. விஜய் முன்னிலையில் மாஸ் காட்டிய நேரு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தவெக ஆட்சியமைத்து 3 மாதங்கள் நிறைவடைந்துவிட்டது. சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் சூடுபிடித்துள்ளது. பட்ஜெட் பற்றிய கருத்துகளை கடந்து தவெக, திமுக இடையே கருத்து யுத்தம் ஏற்பட்டு வருகிறது. தவெக எம்எல்ஏவின் கருத்துக்கு முதலமைச்சர் விஜய் முன்னிலையில், திமுக முன்னாள் அமைச்சர் நேரு அளித்த பதில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தவெக அரசின் முதல் பட்ஜெட் கடந்த வாரம் தாக்கல் செய்யப்பட்டது. தற்போது சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. தவெக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் திமுக, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் இடையே காரசார விவாதம் நடந்து வருகிறது. கோவை சூலூர் எம்எல்ஏ சுகுமார், "முன்னாள் முதலமைச்சர் மக்கள் மனதில் இல்லை" என்று கூறினார். இதற்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

KN Nehru

உங்களை விட அதிகமான எண்ணிக்கையில்

முன்னாள் அமைச்சர் கே.என். நேரு பேசுகையில், "கடந்த கால ஆட்சியின் முதலமைச்சர் மக்கள் மனதில் இல்லை என்று ஆளுங்கட்சியினர் கூறுகிறார்கள். நீங்கள் தேர்தலில் வாங்கிய சீட்டு 108 தான். எதிரில் இருப்பவர்கள் உங்களை விட அதிகமாக வாங்கியுள்ளோம். கட்சியாக பிரிந்து இருக்கலாமே தவிர மொத்தமாக உங்களை விட அதிக வாக்குகள் பெற்று அமர்ந்துள்ளோம். நாங்கள் 72 தொகுதிகளில் வென்றுள்ளோம்" என்று ஆவேசமாக பேசினார்.

அப்போது தவெக எம்எல்ஏக்கள் நேருவின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டனர். தொடர்ந்து பேசிய நேரு, "நான் சொல்லிடறேன் இருங்க. நீங்கள் வாங்கிய 108 தொகுதிகள் 35 சதவிகிதம் தான். நாங்கள் தனித்தனியாக பிரிந்திருந்தாலும் கூடுதலாக வாங்கியுள்ளோம். எங்களுடன் இருந்தவர்கள் தான் உங்களுக்கு வந்து ஆதரவு தெரிவித்துள்ளனர். எங்கள் தலைவர் எப்போதும் மக்களின் மனதில் இருப்பவர்.

மக்கள் மனதில் தான்

பெரியார் போன்ற திராவிட கொள்கைகளில் இருந்து வந்தவர் என்று நீங்கள் (தவெக) கூட சொன்னீர்கள். மக்கள் மனதில் எங்கள் தலைவரும், திராவிடமும் இருப்பதால் தான் உங்களுக்கும் மக்கள் வாக்களித்து வெற்றி பெற வைத்துள்ளனர். அதனால் தான் சட்டமன்ற உறுப்பினராக இங்கே நீங்கள் அமர்ந்து கொண்டிருக்கிறீர்கள்" என்றார். தவெக அமைச்சர்கள் எதிர்ப்பை மீறி நேரு கருத்தை முன்வைத்தார்.

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் பேசுகையில், "இந்த குற்றச்சாட்டை சொன்ன உறுப்பினர் கடந்த திமுக ஆட்சியில் எங்கள் அமைச்சராக இருந்த ஐ.பெரியசாமியுடன் இருந்தார். நாங்கள் பட்ட கஷ்டங்கள் அவருக்கு தெரியும். மக்கள் பயன்பெறும் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றினோம். எங்கள் தலைவரை மக்கள் மனதில் இல்லை என்று எப்படி சொல்ல முடியும். மகளிர் உரிமை தொகை பெறும் 1.30 கோடி பெண்களின் மனதில் எங்கள் தலைவர் உள்ளார்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+