'பள்ளிக்கு வரும் குழந்தைகளை நேசமுடன் வரவேற்போம்' - முதல்வர் மு.க.ஸ்டாலின்
சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா தொற்று ஆதிக்கம் இருந்ததால் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக பள்ளிகள் பூட்டிக் கிடந்தன. 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு போன்ற முக்கியமான பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. மாணவர்களுக்கு மதிப்பெண்களும் வழங்கப்பட்டன.
இதனை தொடர்ந்து அரசு எடுத்த நடவடிக்கையாலும், மக்களின் ஒத்துழைப்பாலும் தமிழகத்தில் கொரோனா கட்டுக்குள் வந்தது. இதன்பின்பு பெற்றோர்கள், மருத்துவ நிபுணர்களிடம் ஆலோசனை நடத்திய தமிழக அரசு பள்ளிகளை திறக்க அனுமதி அளித்தது.

பெற்றோர்களிடம் ஆலோசனை
முதற்கட்டமாக 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டு இயங்கி வருகின்றன. இதேபோல் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை வகுப்புகள் தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது, இது தொடர்பாக தமிழக அரசு கல்வி அதிகாரிகள், மருத்துவ நிபுணர்கள், பெற்றோர்கள் ஆகியோரிடம் ஆலோசனை நடத்தியது.

சுழற்சி முறையில் வகுப்புகள்
இதனை தொடர்ந்து நவம்பர் 1-ம் தேதி 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை வகுப்புகள் தொடங்கும் என்று தமிழக அரசு அறிவித்தது. சுமார் 19 மாதங்களுக்கு பிறகு 1 முதல் 8 வரையிலான மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன. இந்த மாணவர்களுக்கு சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்த பள்ளிகல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
Recommended Video

கொரோனா தடுப்பு வழிமுறைகள்
மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டிய கட்டாயம் இல்லை என்றும் விருப்பபட்டால் ஆன்லைன் வகுப்பில் மட்டும் பங்கேற்கலாம் என்று தமிழக அரசு ஏற்கனவே தெளிவுப்படுத்தியது. மேலும், பள்ளிகளில் கொரோனா தடுப்பு வழிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் ஆசிரியர்களுக்கு பள்ளிகல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் நவம்பர் 1-ம் தேதி மீண்டும் பள்ளிக்கு வரும் குழந்தைகளை நேசமுடன் வரவேற்போம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.

நான் வரவேற்கிறேன்
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:- பள்ளிகளை நோக்கி துள்ளி வரும் பிள்ளைகள் அனைவரையும் வருக, வருக என நான் வரவேற்கிறேன். நவம்பர் 1-ம் தேதி மீண்டும் பள்ளிக்கு வரும் குழந்தைகளை நேசமுடன் வரவேற்போம். நம்பிக்கையுடன் கல்விச்சாலைக்குள் உங்களை நீங்கள் ஒப்படைத்துக்கொள்ளுங்கள். நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும், இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும். மாணவர்களை நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் வரவேற்க வேண்டும். விருந்தினர்களை வாசலுக்கு வந்து வரவேற்பதைப்போல வரவேற்புக்கொடுங்கள் என கேட்டுக்கொள்கிறேன்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications