சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழ்நாட்டிற்கு இன்று ஆரஞ்சு அலர்ட்.. மழை வெளுக்கும்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம், கேரளாவிற்கு இன்று மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இன்றும் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக தீவிர கனமழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்து வருகிறது.

நேற்றும் கூட கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் மழை பெய்தது.

முக்கியமாக காவிரி கரையோர மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. நேற்று கொஞ்சம் மழை குறைந்த நிலையில், இன்று மீண்டும் மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

 நனைகிறது தமிழகம்.. அடுத்த 4 நாட்களுக்கு கனமழை நீடிக்கும்..நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று செம மழை நனைகிறது தமிழகம்.. அடுத்த 4 நாட்களுக்கு கனமழை நீடிக்கும்..நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று செம மழை

 மழை காரணம்

மழை காரணம்

வடமேற்கு வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது ஒடிசா கடல் பகுதி அருகே காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் இந்த தாழ்வு பகுதி மேலும் வலிமை அடையும். கடலில் இருந்து 7.6 கிலோ மீட்டர் உயரத்தில் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருக்கிறது. இதனால் ஒடிசா மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் அதிகம் மழை பெறும். மேற்கு வங்கத்தில் தீவிர கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மஞ்சள் அலர்ட்

மஞ்சள் அலர்ட்

அதே சமயம் தமிழ்நாட்டிற்கும் கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம், கேரளாவிற்கு இன்று மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இன்றும் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கர்நாடகாவிற்கு தீவிர கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. கர்நாடகாவில் பல மாவட்டங்களில் தற்போதும் மழை பெய்து வருகிறது .

கடல்

கடல்

தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்களில் 50-60 கிமீ வேகத்தில் காற்று வீசும் வாய்ப்பு உள்ளது.இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இன்று இடி, மின்னல் அதிகமாக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டு உள்ளது. இது போக மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில் இன்னொரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காணப்படுகிறது. இந்த சுழற்சி காரணமாக அரபிக்கடலை ஒட்டியுள்ள பகுதிகளிலும் கனமழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

 மழை பாதிப்பு

மழை பாதிப்பு

சென்னை தமிழ்நாட்டில் இயல்பை விட கடந்த ஒரு மாதத்தில் 94 சதவிகிதம் அதிகம் மழை பெய்துள்ளது. கடந்த ஜூன் 1 முதல் நேற்று வரை தமிழ்நாட்டில் 26 செ.மீ. மழை பதிவாகி இருக்கிறது. முக்கியமாக மழை காரணமாக ஈரோடு, நாமக்கல், கன்னியாகுமரி, திருநெல்வேலி, கோவை மற்றும் நீலகிரி ஆகிய 6 மாவட்டங்கள் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளன. மழையால் பாதிக்கப்பட்ட பல மாவட்டங்களில் மாநில பேரிடர் மீட்பு படையினர் நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இங்கு தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

English summary
Weather: Heavy rain Orange alert issued for Tamil Nadu as low pressure area formed Weather: Heavy rain Orange alert issued for Tamil Nadu as low pressure area formed. தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம், கேரளாவிற்கு இன்று மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இன்றும் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X